Friday, February 3, 2017

Deepa Nagarani

Deepa Nagarani
"என்று தணியும்" - ஆணவக்கொலை பற்றி வாசித்த போது இருந்ததை விட, திரைப்படத்தில் காட்சியாய் காண்கையில், உருவாகும் கோபத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இயற்கை வெளிச்சத்தில், ஒப்பனையற்ற முகங்களுடன், இயக்கியப் படம் நம் அருகாமையில் நிகழும் வாழ்க்கையை உடன் இருந்து பார்க்கும் உணர்வைத்தருகிறது. சாதாரணமான கிராமத்தின், வாழ்க்கை முறையை, சமுதாய அமைப்பை விரிவாக காட்டுகிறது திரைப்படம். " உன்னைப் பத்தி சொல்ல", பாடல் முதல் முறையிலேயே பிடித்துப் போகும் ரகம். கூர்மையான வசனங்கள் படத்திற்கு பெரும் பலம். புது முகங்களில், கதாநாயகனின் அக்கா, அப்பா, மற்றும் நண்பன் கதாப்பாத்திரங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது போன்று அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். வறண்டு போன கிராமத்தையும் வசீகரத்துடன் காட்டுகிறது ஒளிப்பதிவு. பொழுது போக்கு சித்திரங்களுக்கு மத்தியில் சமூகத்தின் பிரச்சனையை துணிந்து பேசுகிறது திரைப்படம். இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமாருக்கு வாழ்த்துகள்! - Bharathi Krishnakumar

No comments:

Post a Comment