Monday, February 19, 2018

கம்பன் என்றொரு மானுடன்




















கம்பனின் கவித்துவ மேன்மையை உலகுக்குச் சொல்லும் உன்னத திருப்பணியே கம்பன் கழகங்கள் ஆற்றும் பெரும்பணி .

ராஜபாளையம் கம்பன் விழாவில் அந்த அரும்பணியை அவர்களோடு இணைந்து செய்யும் நல் வாய்ப்பு வாய்த்தது .

பட்டிமன்றம் ஒன்றில் நடுவராகப் பணி ஆற்றும் பொறுப்பு கிடைக்கப் பெற்றேன் .

ஒருமனதாக எல்லோரும் பாராட்டினார்கள் .

மூன்று மணி நேரம் நடந்தது பட்டிமன்றம் .
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் .
வெறும் பார்வையாளர்கள் அல்ல .
தேர்ந்த ரசனைக் கூர்மை கொண்ட , தகுதி மிக்க மக்கள் திரள் .

கம்பன் கழகத்திற்கு நன்றி .

Thursday, February 15, 2018

காஞ்சீபுரத்தில் .....



ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலர்கள் மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது .

மாநாட்டின் ஒரு பகுதியாக கருத்தரங்கம் நடைபெற்றது .

அரங்கில் நடத்தாமல் , திறந்த வெளியில் பொதுமக்கள் கேட்க 
கருத்தரங்கு நடைபெற்றது . 

அந்த உரையின் காணொளித் தொகுப்பு ,
மாநிலமெங்கும் சுற்றுக்குப் போகிறது 
என்று நண்பர்கள் சொன்னார்கள் .

எனக்கொரு பிரதி வேண்டுமென்று கேட்டேன் . 
தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் .
காத்திருக்கிறேன் .


ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையம் 01


 ஹாங்காங் சர்வதேச விமான நிலையம்.
ஜப்பானில் இருந்து திரும்பும் போதும் , போகும்போதும்  சில மணி நேரங்கள் இங்கு காத்திருக்க வேண்டும் .
விமானநிலையம் மட்டுமல்ல ... மாபெரும் வணிக வளாகம் .
உலகின் எல்லா நாட்டு  உணவு வகைகளும் கிடைக்கும் .
தரமான , சுத்தமான , கலப்படமில்லாத உணவு ...
வாசிக்க ஏராளம் சஞ்சிகைகள் , புத்தகங்கள் .
ஒரு வாசலில் இருந்து இன்னொரு வாசலுக்கு சில கிலோமீட்டர் இடைவெளி தூரம்  இருக்கிறது .
ஆனால், அனைத்து  வசதிகளும்    செய்யப்பட்டுள்ளது  .
பயணிகளின் சுகமான  பயணத்திற்காக ...
தரையோடு நகரும் நடைபாதை , மின்தூக்கிகள் , தூய்மையான கழிப்பறைகள் , எஸ்கலேட்டர்கள் , பேட்டரி கார்கள் ... சொல்லி முடியாது ... அத்தனை தூய்மை .

1200 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் , 100 க்கும் அதிகமான விமான நிறுவனங்களின் விமானங்கள் , 220 க்கும் குறையாத விமான நிலையங்களுக்கு , பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் இருபத்துநான்கு மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் விமானநிலையம் .

உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்று . அதனை நிர்வகிக்கும் மனிதர்கள் , யாராக இருந்தாலும் பாராட்டுதலுக்கு உரியவர்கள் .

இணைந்து செயலாற்றும் திறன் இன்றி , இது எதுவும் சாத்தியமில்லை .

Wednesday, February 14, 2018

பாரதி பாசறை - கோயம்புத்தூர் -10.12. 2017 - பகுதி 02







பாரதி பாசறை - கோயம்புத்தூர் -10.12. 2017 - பகுதி 01



 பாரதி பாசறை கோவையில் இருந்து இயங்குகிறது ...
அது பற்றிய விரிவான செய்திகளைப் பிறகு எழுதுகிறேன் .

இந்தப் புகைப்படங்கள் 2017 ஆம்  ஆண்டு பாரதி பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .

இந்த ஆண்டு பாரதி விருது திரு . பெ . சு . மணி அவர்களுக்கு ,
பாரதி இயலுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்கிற்காக அவருக்கு வழங்கப்பெற்றது .

அதே அரங்கில் திரு . இளசை மணியன் அவர்கள் தொகுத்த பாரதி பற்றி அவரது நண்பர்களும் , உறவினர்களும் எழுதிய நினைவுக் குறிப்புகள் நூலாக்கம் பெற்று வெளியிடப்பட்டது .


பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் , மருத்துவர் , சிந்தனையாளர் , ஈரோட்டுத் தோழர் ஜீவானந்தம் , இளசை மணியன் , நான் ( இடமிருந்து வலமாக )

இந்தப் புகைப்படங்களை எடுத்தது என் நண்பன் , சகோதரன் , அன்புக் கவிஞன் அய்யப்பமாதவன் ...

எழுச்சித் தமிழருடன் ...















என்று தணியும் ... எனப் பெயரிடப்பட்ட எனது கதை , திரைக்கதை , உரையாடல் மற்றும் இயக்கத்தில் உருவான,
ஒரு முழு நீளத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அழைப்பதற்காக,
எழுச்சித் தமிழர் தோழர் . திருமாவளவனை
நேரில் அழைக்க ஒரு காலையில் அவரது இல்லத்திற்குப் போயிருந்தோம் . 

அருமை நண்பரும் , ஆவணப்பட இயக்குனருமான ஆளூர் ஷாநவாஸ் 
தான் அதற்குரிய ஏற்ப்பாடுகளைச் செய்திருந்தார் .

காலையிலும் மிக அதிகமான பார்வையாளர்கள் காத்திருந்தார்கள் .

பரபரப்பான பணிகளுக்கு இடையிலும் மிகுந்த நேரம் ஒதுக்கி , நீண்ட நேரம் எங்களோடு உரையாடினார் .

திரைப்படம் பார்க்க வருவதாக உறுதி தந்தார் .
அதன்படியே வந்து சிறப்பித்தார் .

நான் அவர் மீதும் , அவர் என் மீதும் பரஸ்பரம்   எப்போதும் மதிப்பும் , அக்கறையும் கொண்டிருப்போம் . 

அவர் தனது உடல்நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என்று எப்போதும் அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் .

அவர் தமிழ்நாட்டுக்குத் தேவை . 


Tuesday, February 13, 2018

விடுதலைச்சிறுத்தைகள் கலை இலக்கியப் பேரவை



மதுரையில் விடுதலைச் சிறுத்தைகளின் கலை இலக்கியப் பேரவை நடத்திய மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மேடையில் ...

திருப்பரங்குன்றத்தில் நடந்த இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்துச் சிறப்பித்த பேரவைக்கும் , சிறப்பாகத் தோழன் . சென்றாயனக்கும் மனம் நிறைந்த நன்றி .

அம்பேத்கர் தலித் மக்களின் தலைவர் மட்டுமல்ல ; ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமான ஒப்பற்ற தலைவர் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினேன் . 

அம்பேத்கரின் புகழ் பாடிக்கொண்டே ....


 மாமேதை அம்பேத்கரின் நூற்றி இருபத்தைந்தாவது பிறந்தநாள் விழாவை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம் நடத்தியது . அதில் பங்கேற்கும் வாய்ப்பை பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலாளர் தோழர் . ஆனந்த் உருவாக்கித் தந்தார் .

"ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக , உறங்காது உழைத்த அந்த மேதமை மிக்க மனிதரின் உயிர் உறக்கத்தில் பிரிந்தது ஒரு இயற்கை முரண் "
என்று எனது உரையைத் துவங்கினேன் .


நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் பேசினேன் .
ஆழ்ந்த அமைதியுடன் கேட்டார்கள் .
அவரது உயர்வை , சிறப்பை , தனித்துவத்தை உரக்கச் சொன்னேன் .

வாழ்வின் இறுதிக்கணம் வரை மாறாத அர்ப்பணிப்புடன் , முனைப்புடன் , ஈடுபாட்டுடன் அந்தப் பணியைச் செய்து கொண்டே இருப்பேன் .

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் ,
சிறப்பாக தோழர் ஆனந்த்துக்கும் மனமார்ந்த நன்றி .




Wednesday, February 7, 2018

ஒளி பொருந்திய மா மனிதர் .நபிகள் நாயகம்

வரலாற்றில் ஒளி பொருந்திய மனிதர் 
நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு வலைக்கும் .
என் மனம் கவர்ந்த மா மனிதர் ...

ஒரு நிகழ்வில் இப்படிச் சொன்னேன் .

நிகழ்வில் பங்கேற்ற சமரசம் இதழின் ஆசிரியர் அன்புச் சகோதரர் அமீன் 
என்னிடத்தில் வந்து என் கைகளைப் பேரன்புடன் பற்றிக்கொண்டு 
சொன்னார் ... " அண்ணலை ஒளி பொருந்திய மனிதர் என்று , வேறு எவர் சொல்லியும் நான் கேட்டதில்லை . நீங்கள் தான் அப்படிக் குறிப்பிடும் முதல் மனிதர் என்றார் .

ஆம் .... அவரது வரலாற்றை வாசிக்கும்போது , அந்தப் புத்தகத்தின் பக்கங்களில் , வாசிக்கறவனின் மனதில் ஒளி உண்டாக்கும் வாழ்வு அவருடையது . 

ஒளி பொருந்திய மா மனிதர் அவர் .

Tuesday, February 6, 2018

சுஜாதா விருதுகள் வழங்கும் விழாவில்



















2015 ஆம் ஆண்டிற்கான அமரர் சுஜாதா விருதுகள் வழங்கும் விழாவில்
உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் ,
உயிரெழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில் .
இலக்கிய விமர்சகர் பேராசிரியர் ந. முருகேசபன்டியன் ,
 அன்பு நண்பன் அதிஷா ,
உயிர்மை நிர்வாக ஆசிரியர் செல்வி ஆகியோருடன்
 நானும் ...

உற்சாகமும் , பெருமிதமும் நிரம்பிய நிமிடங்கள் .

Monday, February 5, 2018

தருமபுரித் தமிழ்ச் சங்கம்





























என் மனம் கவர்ந்த நிகழ்வுகளில் ஒன்று .
தகுதியான , தேர்ந்த பார்வையாளர்கள் .

சிறந்த அரங்கம் .

அரங்கம் நிறைந்த கூட்டம் .

எல்லாம் சிறப்பாக அமைந்தது .

புகைப்படங்கள் இன்னும் வந்து சேரவில்லை ...


வந்ததும் காணத் தருகிறேன் .

பயிலரங்கு










தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் , கல்வித்துறை அதிகாரிகளுக்கான பயிலரங்கு ...

மதுரையில் நடந்தபோது ...

Saturday, February 3, 2018

சென்னையில் ...


சென்னைப் பல்கலைக்கழகத்தில் ...


நம் விரல் ... நம் குரல் ... - புதுச்சேரி

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது , இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்ற அசலான சமூக அக்கறையுடன் , ஜூனியர் விகடன் இதழின் சார்பில்

நம் விரல்
நம் குரல்

என்னும் நிகழ்வைத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் , பல கல்லூரிகளில் நடத்தினர் .

அவைகளில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது ...

மனம் திறந்து உரையாட முடிந்தது ...
ஜனநாயகத்தின் , வாக்குரிமையின் வலிமையை அவர்களுக்குச் சொல்ல முடிந்தது ...

சொல்லுவது நமது கடமை ,.

சோர்வின்றிச் சொல்லுவது நம் தலையாய கடமை . 




Friday, February 2, 2018

எழுச்சித் தமிழருடன் ...

எனது அழைப்பை ஏற்று ,எனது  இயக்கத்தில் உருவான "என்று தணியும் " என்ற முழு நீளத் தமிழ்த் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்தார் எழுச்சித் தமிழர் தோழர் . திருமாவளவன் .

அவருக்கு எனது அன்பையும் , நன்றியையும் சொன்னேன்  .

திரைப்படத்தைப் பார்த்து விட்டு மனதாரப் பாராட்டினார் .

அவருக்கும் எனக்குமான நட்பும் , தோழமையும்
தனித்த சிறப்பும் , உயர்வும் கொண்டது .
இதனை இருவரும் அறிவோம் .

ஊத்தங்கரையில் - 13 ஜனவரி 2018


புத்தகத் திருவிழா - புத்தாண்டு 2018 - செங்கல்பட்டு



வந்தவாசியில் ....







தேவகோட்டையில் ....







































தேவகோட்டையில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் ...

தமிழர் வாழ்வும் . இயற்கையும் குறித்துப் பேசிய தருணம் .

Thursday, February 1, 2018

அதிராமபட்டினத்தில் ...





மேனாள் நீதியரசர்  சம்பத் அவர்களுடன் ... கும்பகோணம் பள்ளியில் நடந்த தீய தீ விபத்து குறித்து அரசு நியமித்த விசாரணைக் கமிஷனின் தலைவராக  இருந்தார் திரு . சம்பத் .

அந்தக் கொடூரமான படுகொலை குறித்து ஒரு ஆவணப்படத்தை " என்று தணியும் ? " என்ற தலைப்பில் நான் எடுத்திருந்தேன் ...

அவரது விசாரணைக் கமிஷன் அறிக்கையின் சில பகுதிகளை எனது ஆவணப்படத்தில் குறிப்பிட்டு இருந்தேன் . அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன் . மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் .  ஆனால்

'மிக மிக முக்கியமான ஒரு ஆவணம் மட்டும் உங்கள் அறிக்கையில் இடம் பெறாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தம் தந்தது " என்றேன் .
அதென்ன  ஆவணம் என்று கேட்பது போலப் பார்த்தார் . சொன்னேன் .

"ம்"   என்றார் .

அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளவில்லை .

முன்னதாக ஆவணப்படத்தின் பிரதியை அனுப்பச் சொன்னார் .
நானும் சம்மதம் சொல்லி இருந்தேன் .

ஆனால் , அந்த " ம்" க்குப் பிறகு நான் அனுப்ப விரும்பவில்லை .
அவரும் கேடகவில்லை .










 அதிராமபட்டினம் , காதர் மொஹிதீன் கல்லூரியின் நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி தின விழாவில் ....