Friday, February 3, 2017

பாடுவாசி ரகுநாத்

பாடுவாசி ரகுநாத்
என்று தணியும்...
சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான படைப்பு. தற்போதைய சூழலுக்கேற்ற படம்.
அம்மா செத்து, வாழ வழியில்லாம கெடந்தப்ப வராத சாதீ, அப்பன் உதவாக்கரையா குடிச்சிட்டு சுத்தும் போது எங்கள காப்பாத்த வராத கௌரவமும் இப்போ மட்டும் எங்க இருந்து வருதுனு கேட்டுட்டு காரித் துப்பும் போது இங்க சாதி பேய் பிடிச்சி ஆடுற ஒவ்வொருத்தர் மூஞ்சிலயும் அது தெறிச்ச மாதிரி இருந்தது.
பொதுவாக பெண் தெய்வங்கள் உண்டாகக் கூடிய சாதிய படுகொலையின் பின்புலத்தை, "உன்ன வளர்த்த உன் அக்கா தெய்வமா இருந்து காப்பாத்துவா!" என்கிற ஒற்றை வசனம் சொல்லிவிட்டு செல்கிறது.
அக்காவை சாதியக் கொலையில் பறிகொடுத்துவிட்டு அதற்காக பலி வாங்கும் தம்பியை பொது வெளியிலும் முகநூல்களிலும் காணவில்லை.. அதை ஆதரித்து கொக்கரிக்கும் பாசக்கார அண்ணன் தம்பிகளை தான் கடந்த ஒரு வாரமாக பார்த்து வருகிறேன். இந்த படத்தில் தம்பி மனம் கவர்கிறார்.
" காப்பிக்கு ரெட்ட குவள வச்சிருக்க காச வாங்கி ஒரே கல்லாவுல தான போடுற"எனச் சொல்லிவிட்டு "பேப்பர் கப்போடு சேர்த்து இப்போ மூனு குவளையா என ஆதிக்க சாதியின் முட்டாள் தனத்தை கேலி செய்யும் இடம் பல் இளிக்கிது சாதீயம்.
கிராமங்களின் உண்மையான காட்சி, எந்த ஒரு முகப்பூச்சும் இல்லாத கதாநாயகி உட்பட கதாபத்திரங்கள், டைட்டிலில் துவங்கி படம் முடியும் வரைக்குமான ஒளிப்பதிவு, பின்னணி இசை எதுவும் அதிகமில்லை. இன்றைய உண்மையான கிராமத்திற்குள் புகுந்து வந்த உணர்வு. இவற்றோடு சாதியத்திற்கு எதிராக ஆணவக் கொலைகளை ஆவணப்படுத்தும் துணிவு பாரதி கிருஷ்ணகுமார் அண்ணன் போன்றோருக்கே வரும்.
அன்பும் நன்றியும்
பாடுவாசி
19-03-2016

No comments:

Post a Comment