Tuesday, February 14, 2017

ஸ்ரீமதி ப்ரஸன்னா சுப்ரமணிய ராஜா

ஸ்ரீமதி ப்ரஸன்னா சுப்ரமணிய ராஜா

நேற்றைய தினம் மாலை இராஜபாளையம் பி.எஸ்.கே மண்டபத்தில் 'செவ்வந்தி மாலை' நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்த விகடன் குழுமம், ஆனந்தா கல்வி நிறுவனம், நாற்று இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய மகத்தான நிகழ்ச்சி. விழா ஏற்பாடு சிறப்பாக இருந்தது. பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சியோடு தொடங்கியது விழா. தலைமை திரு. சந்திரன் ராஜா அவர்கள். சிறப்பு விருந்தினர்கள் திரு. பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர் திரு. சிவராமன் அவர்கள்.

எழுத்துகளின் மூலம் பரிட்சயப்பட்ட இருவரையும் நேரில் காணும் வாய்ப்பு. டாக்டர் அவர்கள் நாகரிக உலகில் நம் ஆரோக்கியத்தை எப்படி எல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என பட்டியலிட்டார். உடல், மனம், சுற்றுச்சூழல் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது என அறிவியல்பூர்வமாக விளக்கினார். உணவு பொருட்களில் வணிகம் புகுந்து ஆட்சி செய்வதால் ஏற்படும் கேடுகளை கூறினார். மிக அற்புதமான பேச்சு அவருடையது.
அடுத்து பாரதி கிருஷ்ணகுமார். இவர் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைக்குமா என ஆவலோடு எதிர்பார்க்க வைத்த முன்னனி பேச்சாளர். தம் பேச்சின் ஆரம்பத்திலிருந்தே மொத்த கூட்டத்தையும் கட்டிப்போட்டுவிட்டார். நகைச்சுவையாக ஆரம்பித்த அவரது பேச்சு புத்தக வாசிப்பின் அவசியத்தை இன்றைய தலைமுறையினர் இன்னும் நன்றாக உணர வேண்டும் என அழுத்தமாக எல்லோர் மனதிலும் பதியவைத்தார். கருத்தாழமான பேச்சு, உணர்வுபூர்வமான சொல்லாடல், நகைச்சுவை, கேட்போரை புரிந்துகொள்ளும் வித்தை, எளிமை என பேச்சுக்கே சிறப்பு செய்த அற்புதமான பேச்சாளர். விழா ஏற்பாட்டாளர்களுக்கு மனம் கனிந்த நன்றியும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment