Tuesday, February 26, 2013

. . . எதுவும் உயர்ந்தது இல்லை

ரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு கும்பகோணத்திற்குப் போய் இருந்தேன் .

னது தயாரிப்பிலும் , இயக்கத்திலும் உருவான " என்று தணியும் ?" ஆவணத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக .

 ரண்டாயிரத்து நான்காம் ஆண்டு  ஜூலை மாதம் பதினாறாம் நாள் விபத்து நடந்து  94  குழந்தைகள் அநியாயமாக எரிந்து , இறந்து போன துயர நிகழ்வின் பின்னே இருக்கும் உண்மைகளை உலகிற்கு சொல்லுவது எனது நோக்கம் .

ந்தக் குழந்தை அந்தப் பள்ளியில் படித்து , முதுகில் கடுமையான
 தீக் காயங்களோடு உயிர் பிழைத்தவன் .

குழந்தையோடு மெதுவாக உரையாடி , அவனது சாட்சியத்தைப் பதிவது
எனது வேலைத் திட்டம் . அவனது பெற்றோர்கள் சம்மதம் தந்து இருந்தார்கள் .
ஆனால் , அந்த நினைவுகளுக்குள் போகக்  குழந்தை தயங்கியதும் , நான் உரையாடலை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டேன் .

டலில் தீப்புண் சுமக்கும் குழந்தையின் மனதில், இந்த நினைவூட்டல் மீண்டும் ஒரு காயமாகி விடும் என்று உணர்ந்து கொண்டேன் .

குழந்தை மிகுந்த மகிழ்ச்சியோடு என்னோடு , என் மடியில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தான் .

வனது மன நிலையை விட , மகிழ்ச்சியை விட எதுவும் உயர்ந்தது இல்லை .

துயரம் நிரம்பி வழிந்த அந்த நாட்களில் , இந்தக் குழந்தையோடு இருந்த தருணங்கள் மறக்க இயலாதது .

எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் . . .


நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சி முழுவதும் ஓடுகிற ரயிலில் படமாக்கப்பட்டது .

சின்ன வயதில் வாடகைக்கு சைக்கிள் எடுத்திருக்கிறேன் .
பிறகு கார் , வேன் , பஸ் வரைக்கும் வாடகைக்கு எடுத்திருக்கிறேன் .

ஒரு  ரயிலை வாடகைக்கு எடுத்ததும் ,  அது நான்கு நாட்கள் எங்களோடு இருந்ததும் எனக்கு தாங்க முடியாத சந்தோசம் .

ரயில் எப்போதும் சந்தோசமான ஒரு அற்புதம் .ரயில் பயணம் எனக்கு மிக மிக உவப்பானது . எத்தனை விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் , எந்த நூற்றாண்டிலும் ஓடுகிற ரயிலைப் பார்த்துக் கண்கள் விரிய கை அசைத்துப் புன்னகைக்கிற ஒரு குழந்தை எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் இருக்கும் .
அந்தக் குழந்தையின் மனம் தான் எனக்கு ரயிலோடு .

மூதாதையின் குரல்

து சினிமாவில் வேலைக்குச் சேர்ந்த புதிது .1998 ஜூலை .

டப்பிடிப்புக்கு இடம் தேர்வு செய்யச் சுற்றி அலைந்து கொண்டிருந்தசமயம்.

டிமரம் எது, விழுது எதுவென்று, பிரித்துப் பார்க்க இயலாத
 ஒரு ஆலமரத்தைப் பார்க்க நேர்ந்தது .
அதன் பிரம்மாண்டம் வியக்க வைத்தது .

தேனீ மாவட்டத்தின் மேற்கு மூலையில் ஒரு சிறிய கிராமத்தில் கால் பரப்பி நின்றது . அதன் வயதுக்கு, அது குறையாத இளமையோடு இருந்தது .
எத்தனை மனிதர்கள் , எத்தனை பறவைகள் அதன் நிழலில் வாழ்ந்து இருப்பார்கள் . எத்தனை பெரிய மௌன சாட்சி .

தன் மீது தோழமையோடு சாய்ந்து கொண்டு ஒரு படம் எடுத்துக் கொள்ள விரும்பினேன் . அதன் நிழலில் கூடி இருந்த ஒரு அலாதியான மணம்
இன்னும் நினைவில் இருக்கிறது .

பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னும், அந்த நிழலும் அதன்  மணமும் மனதின் அடியாழத்தில் இருந்து எந்தப் பிரயாசையும் இல்லாமல், உள்ளிருந்து மேலேறி வருகிறது .

ரு நாவல் எழுதுவதற்குக் குறிப்புகள் சேர்த்துக் கொண்டிருக்கிறேன் . அதில் தன்னையும் சேர்த்து எழுதுமாறு இந்த மரம் எனக்குச் சொல்லி இருக்கிறது .
அந்த மூதாதையின் குரலுக்கு நான் தலை சாய்த்துச் சம்மதம் சொல்லி இருக்கிறேன் .

மூதாட்டி ... உன்னைப் பற்றி எழுதுவேன் .

Sunday, February 24, 2013

ஒரு சாலையோரச் சிற்பம்

எனக்கு இல்லையா கல்வி ? ஆவணத் திரைப்படத்தின் உருவாக்கத்தின் பொழுது , தமிழகத்தின் இருபது மாவட்டங்களில் எங்கள் குழு பயணம் செய்தது .

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசு நடு நிலைப் பள்ளியில் படப்பிடிப்பு முடித்து விட்டு , அடுத்த பள்ளிக்குப் போகிற வழியில் இந்த சாலையோரத்து சிலையைக் கண்டு அடைந்தேன் .

செடிகளும் , கொடிகளும் சுற்றி எவர் கண்களிலும் எளிதில் படாத விதத்தில்  தான் இருந்தது ..பக்கத்துக் குடிசையில் இருந்து அரிவாள் வாங்கி செடி கொடிகளை அப்புறப்படுத்தினேன் .
உடன் வந்தவர்களுக்கு இது என்ன வெட்டி வேலை ? என்று தான் பட்டிருக்கும் . இருந்தாலும் , யாரும் எதுவும் கேட்கவில்லை . எனக்கோ அது ஆயிரம் சேதிகளைச் சொல்லிக் கொண்டே இருந்தது .

மதுரை வீரன் தன் மனைவிகளோடு இருக்கும் சிற்பம் அது . கோவில் கட்ட வேண்டுமெனக் கருதி ஒரு மனிதன் தொடங்கிய வேலை . அவரது மறைவால் பாதியில் நின்று போக , தொடர்ந்து எடுத்துச் செய்ய ஆளில்லாமல் நின்று போயிருக்கிறது .

பல கோணங்களில் வித விதமாக படங்கள் எடுக்கச் சொன்னேன் .
குறிப்பாக இருண்ட கண்களும் , அடைத்த வாயும் கொண்ட  அந்த முகம்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு அதை ஆவணப்படத்திற்கு முகப்பாக வடிவமைத்தேன் .

அதைப் பார்த்த அன்றே அது அடையப் போகும் இறுதி வடிவத்தை நான் பல முறை எனது கனவுகளிலும் கண்டிருக்கிறேன் .
நான் கனவு கண்ட விதமே அதை வடிவமைத்துத் தந்தார் எனது எடிட்டரும் ,டிசைனருமான  அருள்முருகன் .
நம் கனவுகளை நனவாக்குகிற கலைஞர்களுடன் பணி புரிவது மிகுந்த உற்சாகமும் , பெருமிதமும் தருகிற அனுபவம் .


 

Saturday, February 23, 2013

இப்போதைக்கு இதைத் தான் சொல்ல விரும்புகிறேன்

ஓசூர் அருகில் அமைந்துள்ள இந்தக் கல்லூரிக்குப் போனேன் .
தமிழ்ப் பேரவையில் உறுப்பினராக உள்ள மாணவர்கள் மட்டும் பங்கு பெற்றார்கள் . சில ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அந்த நிறுவனத்தில் சில நூறு மாணவர்கள் மட்டுமே உறுப்பினர்கள்.

இது போன்ற நிகழ்வுகளில் மாணவர்கள் அனைவரும் பங்கு பெறுமாறு செய்தல் வேண்டும் . தாய் மொழிப் பற்றை உருவாக்குவது என்பது , ஒரு தாய் தனது குழந்தைக்கு உணவு ஊட்டுவது போன்றது தான் .

 இப்போதைக்கு இதைத் தான் சொல்ல விரும்புகிறேன் 

Friday, February 22, 2013

இது எனது கதையல்ல ...

இந்தக் கதை ரஷ்ய மாமேதை லியோ டால்ஸ்டாய் எழுதியது .

அவரது கதைகளில் எனது மனம் கவர்ந்த ஒரு  கதை இது .

இந்தக் கதையை சொல்லும் விதத்தில் , உரிய தொனியோடு பாவத்தோடு
நீங்கள் சொன்னால் அதற்குக் குழந்தைகள் காட்டும் வெளிப்பாடு வியக்க வைக்கிறது .

எல்லாக் காலத்திலும் இந்தக் கதை குழந்தைகளுக்கு  வியப்பும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை . கதை சொல்லி முடித்ததும் குழந்தைகள் எழுப்பிய கரவொலி அதை எனக்கு உறுதி செய்தது . டால்ஸ்டாய் எத்தனை மகத்தான , காலத்தை வென்று நிற்கும் எழுத்துக் கலைஞன் என்பதை நான் அனுபவ உண்மையாக அறிந்து கொண்டிருக்கிறேன் .

Thursday, February 21, 2013

அனைவருக்கும் சென்று சேரட்டும்

அறிவிக்கப்பட்ட விருதுகளை ஜனவரி இருபத்திஆறாம் நாள் மாலை திருப்பூர் புத்தகத் திருவிழாவில் , பொது அரங்கில் வழங்கிச் சிறப்பித்தது திருப்பூர் தமிழ் சங்கம் .

இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான விருதை எனது முதல் தொகுப்பான "அப்பத்தா" பெற்றது .

நடுவர் குழுவின் சார்பில் பேசிய கவிஞர் . ஆண்டாள் பிரியதர்சினி தேர்வு செய்யப்பட்ட அனைத்துப் படைப்புகள் குறித்தும் விரிவாகப் பேசிப் படைப்பாளிகளை சிறப்பித்தார் .

எனது கதைகள் குறித்துச் சொல்லும் பொழுது ,"அப்பத்தா எப்போதும் தன்னுடன் , தன் நினைவில் வாழ்வதாகக் குறிப்பிட்டார் .

பரிசு பெற்றவர்கள் சார்பில் நன்றி சொல்லும் பொழுது நான் சொன்னேன்.
" மிக நீண்ட நமது மொழியின் வரலாற்றில் நமக்கு முன்னே எழுதிய, எழுதுகிற படைப்பாளிகளுக்குத்தான் எல்லாப் புகழும் , பெருமையும் உரியது .அவர்களே நம்மை எழுதப் பணித்தார்கள் . அவர்களுக்குச் சொல்லுகிற நன்றி அனைவருக்கும் சென்று சேரட்டும்" என்றேன் .


Wednesday, February 20, 2013

அனைவருக்கும் நன்றி

அருணை பொறியியல் கல்லூரி நிகழ்வுக்கு பத்திரிகையாளர்கள் நிறையவே வந்திருந்தார்கள் . அவர்கள் அதனைச் சிறப்பாகத் தங்கள் இதழ்களில் பிரசுரித்து இருந்தார்கள் . அனைவருக்கும் நன்றி

படிக்கற்கள் உயரம் போக உதவும் .

நான்காயிரத்து இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் .
அரங்கு நிறைந்து கிடந்தது .


கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பள்ளி மாணவர்கள் .
மிகுந்த பொருட் செலவில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்த படிக்கற்கள் என்னும் தனித்துவமான நிகழ்வு . நாளிதழ்களில் விளம்பரங்கள். ஊரெங்கும் விளம்பரப் பலகைகள் .
வந்திருந்த எல்லோருக்கும் தங்குமிடம் , உணவு , உபசரிப்பு என எல்லாமே விரிவாக , சிறப்பாக நடந்தது .


ங்கு பெற்ற ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள் .
நிச்சயம் பலருக்குப் பயன் தந்திருக்கும் என்பதை அப்போதே அனுபவத்தில் அறிந்து , உணர்ந்து கொள்ள என்னால் முடிந்தது .

பெரும் சந்தடியும் , கூச்சலுமாக இருந்த அரங்கில் உருவான அமைதியும் , அவதானிப்பும் அதை உறுதி செய்தன .

பேசத்தான் அழைக்கிறார்கள் .
சும்மா கடனுக்குக் காமெடி பண்ணிப் பேச நாம் எதற்குப் போகவேண்டும் ?
உயிரை உருக்கி , உணர்வைப் பெருக்கி , உண்மைகளை உணர்த்திப் பேசுகிற   ஒரு பேச்சால் மட்டுமே ஒரு தலைமுறையை உருவாக்க இயலும் . அதை நிகழ்த்துவதே நமது கடமை .

டிக்கற்கள்  உயரம் போக உதவும் .
ஆனால் ... படிக்கற்களையே உருவாக்க விரும்புகிறவர்கள் படுகிற பாடு அதில் ஏறிப் போகிறவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை . தெரிய வேண்டுமென்பதுமில்லை . ஏறிப் போனால் சரி .

Tuesday, February 19, 2013

அறிந்தவர்கள் அறிவார்கள்ண்பனும் , தோழனுமான பவா . செல்லத்துரை நடத்தும்" டயலாக் " என்னும் அமைப்பின் இரண்டாம் அமர்வு .

தேர்ந்த பார்வையாளர்கள் . அமைதியாக , ஈடுபாட்டுடன் ஆவணத் திரைப்படத்தைப் பார்த்தார்கள் .
விவாதங்களுக்கு நேரம் அமையவில்லை .

"நீ நல்லாப் படிக்கணும் என்று மாணவர்களைப் பார்த்துச் சொல்லும் ஆசிரியர்களைப் பார்த்து .. நீயும் கொஞ்சம் நல்லாச் சொல்லிக் கொடுக்கணும்னு " என்று எப்போதாவது சொல்ல முடியுமா ? என்று ஆவணத் திரைப்படத்தின் போக்கில் ஓரிடத்தில் பேராசிரியர் . ச . மாடசாமி குறிப்பிட்டதும் . முன் வரிசையில் இருந்து திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்களின் சிரிப்பும், கை தட்டலும்  இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது .

ப்படித் தான் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து எதையும் மறக்க விடாமல் செய்து விடுகிறது .

ந்த சிரிப்புக்கும் , கை தட்டலுக்கும் பின்னே எவ்வளவு கசப்பும் , துயரமும் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள்