ப. செல்வகுமார்

திரையிசையின் 80 களை மீட்கும் இசையும் மொழியும்..
மார்ச் 18ல் Bharathi Krishnakumar இயக்கத்தில் வெளிவர இருக்கும் " என்று தணியும் " திரைப்படத்தின் பாடல்களை கேட்டேன்.
இசையும் பாடலும் சேர்ந்து இதயத்தை கொள்ளையிடும் 80 களின் பொற்காலத்திற்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்கின்றன அவைகள்.
கற்களை உருட்டி நடந்திடும் நதியைப்போல நமது கனவுகளை வார்த்தையாக்கி இசைக்கோர்த்து ஜூவகானமாய் நனைக்கிறது பாடல்கள்.
மிரட்டும் சத்தமின்றி உணர்வினை மீட்டும் ராகமாய் மெல்ல மேலெழுந்து கரைக்கிறது உயிரின் ஓசைகளை.
துளைகளில் மோதாத புல்லாங்குழலின் இசையென நம் துயரங்களை யாழெடுக்கிற வரிகளோடு வந்திருக்கிறது நாம் தேடித் திரிந்த ராக ஊற்று.
# ஈர இசைமழையில் நனைதலே நன்று


No comments:
Post a Comment