Aathira Mullai
நேற்று (26/02/16) நாடறிந்த பேச்சாளரும் எழுத்தாளரும் இயக்குநரும் அன்பு நண்பருமான பாரதி கிருஷ்ணகுமார் அவர்களது ‘என்று தணியும்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அரங்கம் கொள்ளாக் கூட்டத்துடன் இனிதே நடைபெற்றது. நிரம்பி வழிந்த அரங்கத்தில் நானும் ஒற்றைக் காலில் நின்று பாடல்களைக் கேட்டும் பார்த்தும் ரசித்தேன்.
அளவான, இனிமையான இசையோடும் நா. முத்துக்குமார், யுகபாரதி, தனிக்கொடி ஆகியோரது பாடல் வரிகளோடும் காட்சிகள் கதையைச் சொல்லிச் சென்றன. திரைப்படம் வெற்றி பெறுவதில் பெரும்பங்கு பாடல்களுக்கும் உண்டு. அவ்வகையில் அழகாகப் படமாக்கியுள்ள பாடல்கள் இத்திரைப்படம் வெற்றிப் படம் என்பதைக் கூறி விட்டது.
இயக்குநர் Bharathi Krishnakumar அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்
ஒளிப்படம் கவிஞர் ஐயப்ப மாதவன்

No comments:
Post a Comment