Monday, January 30, 2017

Subramanian Ramakrishnan

Subramanian Ramakrishnan

Bharathi Krishnakumar. நன்றி
அருமை தோழர் எவ்வளவு நுனுக்கமான பேச்சு.
______________________
கம்பன் பெயரில் ஒரு பல்கலை.
புதுக்கோட்டையில் உருவாக வேண்டும்
பாரதி கிருஷ்ணகுமார் கோரிக்கை
புதுக்கோட்டை, ஜூலை 24-
கம்பன் பெயரில் புதுக்கோட்டையில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்றார் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார். புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன்கழக விழாவில் அவர் ஆற்றிய உரை:காப்பியங்கள் எழுதியவர்கள் யாரும் சொந்தக் கற்பனையிலிருந்து எழுதவில்லை. வரலாற்றின் பின்னணியில் இருந்துதான் எழுதியுள்ளனர். மாபெரும் மனிதர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பழக்கம் தமிழனுக்கு இருந்ததில்லை. வள்ளுவன், இளங்கோ, கம்பன் போன்ற மாபெரும் ஆளுமைகள் எப்பொழுது பிறந்தார்கள், எப்பொழுது மறைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.சிறந்த வாசிப்பாளனாகவும், மறுஉருவாக்கம் செய்யும்தொழில்நுட்பம் தெரிந்தவனாகவும் இருப்பவன் மட்டுமே மொழிபெயர்ப்பாளனாக முடியும். வள்ளுவனை அறியாமல் ஒருபோதும் கம்பன் ராமாயணத்தை படைத்து இருக்கமாட்டான். மூலநூலிலும் சிறந்தது என்ற தகுதியை கம்பராமாயணம் பெற்றிருக்கிறது. ராம காதையை ராமாவதாரம் என்று கம்பன் மாற்றியிருப்பான். அவதாரம் என்பது தெய்வ நிலையிலிருந்து அறிவும், அறியாமையும் மண்டிக்கிடக்கும் பூமிக்கு மனித உருவில் இறங்கி வருவது.வந்தது பரம்பொருள்தான் என்றாலும் மாய மானுக்கும் நல்ல மானுக்கும் வித்தியாசம் தெரியாதவனாகத்தான் ராமன் படைக்கப்பட்டிருக்கிறான். வால்மீகி ராமாயணத்தில் ராமனுக்கு வேறு மனைவிகளும் உண்டு. ஆனால், இங்கே ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உயர்த்திப்பிடிக்கிறான் கம்பன். இந்த இடத்திலிருந்துதான் ஒரு கதையை காப்பியமாக நகர்த்திச் செல்கிறான் கம்பன்.மூல மொழியில் இருந்ததை நீக்கி ராமனையும், சீதையையும் சைவமாக மாற்றுகிறான்.இங்கே கம்பன் வேறுமொழியில் மொழி பெயர்க்கப்படவில்லையே என சிலர் ஆதங்கப்பட்டனர். கம்பனை அவ்வளவு எளிதில் மொழி பெயர்த்துவிட முடியாது. அவ்வளவு அழகுணர்ச்சியும், சொற்செட்டும் நிரம்ப கதை, கவிதை, நாடகம் எனமூன்றையும் குழைத்துப்படைத்துள்ள ஒரு காப்பியத்தை வேற்று மொழியில்அப்படியே மொழிபெயர்த்துவிட முடியாது. கம்பனை பருக வேண்டுமானால் தமிழ்வழியாகத்தான் முடியும். அய்யோ என்ற அவச்சொல்லைக்கூட அழகுணர்ச்சியின் உச்சத்தில் வைத்து பாடியிருப்பான் கம்பன். அவனது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு ஒரு மணிநேரம் விளையாடலாம். காப்பியத்தில் ஒருஆண் இன்னொரு ஆணின் அழகை புகழ்ந்தது கம்பனைத்தவிர வேறு யாரும் இல்லை.அனைத்து கதாபாத்திரங்களையும் தூய தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளதோடு, இதுவரை யாரும் பயன்படுத்தாத நுட்பங்களையும், சொற்றொடர்களையும் பயன்படுத்துகிறான்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே குழந்தை திருமணத்திற்கு எதிராக கம்பன் இருந்திருக்கிறார். ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிய வயது வந்த பிறகுதான் திருமணம் என்பதை உறுதிப்படுத்தி யிருக்கிறான். கண்களை நேருக்கு நேர் பார்த்து காதலிக்க விட்டு இருக்கிறான். இறைவனையே மனிதனாக படைத்து இருக்கிறான். முதலில் பார்த்தான். பிறகு கேட்டான் என ஒளிக்கு பிறகுதான் ஒலி வந்து சேரும்என்ற அறிவியல் நுட்பத்தை அப்போதே கம்பன் தந்திருக்கிறான்.எதிர் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்திருப்பது கம்பனைத்தவிர வேறு யாரும் இல்லை. ராவணனை அவ்வளவு புகழ்ந்திருப்பான். சீதையை எதுவுமே செய்யாத ராவணனுக்கு இவ்வளவு கெட்ட பெயரா என பட்டிமன்றம் நடத்த வைத்திருக்கிறான். நீதிக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதில் சற்றும் குறையாமல் நட்புக்கும், சகோதர பாசத்திற்கும் தந்திருப்பான்.கம்பனை சிலர் விமர்சனம் செய்யலாம். கதாபாத்திரங்கள் அறிவியலுக்கு புறம்பானது என்று கூறலாம். ராமாயணம் ஒரு கதை. கதையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அது படைப்பாளனின் உரிமை.அதிலிருந்து நமக்கு என்னகிடைக்கிறது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். கம்பன் எளிதில் கடந்துவிடுகிற நதி அல்ல. அவன்அடர்ந்த பெருங்காடு. அதிலிருந்து எடுத்துக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது.இங்கே ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். கம்பன் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் புதுக்கோட்டையில் உருவாக வேண்டும். அதில், கம்பன்தொடர்பான அத்தனை ஆய்வுகளையும், நூல்களையும், சொற்பொழிவுகளையும் ஆவணப்படுத்த வேண்டும். வருகின்ற தலைமுறை கம்பன் குறித்த அத்தனை தரவுகளையும் இங்கே பெறலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு பாரதி கிருஷ்ணகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அகத்தியர் அருவியில் .









'மறுவாசிப்பில் தொ.மு.சி.ரகுநாதன்' - பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை


Watch highlights of Writer Bharathi Krishnakumar speech about Writer Tho.Mu.Ci. Ragunathan
for full version click below url
https://www.youtube.com/watch?v=cVzeh7Aixrw


தொ. மு. சி.ரகுநாதன் அவர்களின் நூல்களுக்கான மறுவாசிப்பு பற்றிய உரை

மயிலாப்பூர் இன்று வழக்கத்தை விட அழகாக இருந்தது.. பாரதீய வித்யா பவன் அரங்கின் வெளியே மழை பொழிந்தது.. அரங்கினுள் பாரதி கிருஷ்ணக் குமார் அவர்களின் சொற்பொழிவு .. தொ. மு. சி.ரகுநாதன் அவர்களின் நூல்களுக்கான மறுவாசிப்பு பற்றிய உரை.. அவர் புத்தகங்களின் வாயிலாக கார்க்கியின் 'தாய்' மற்றும் பாரதியாரைப் பற்றிய, இதுவரை அறிந்திராத பல தகவல்களை BK sir அவருக்கே உரிய உணர்ச்சிகரமான உரை ஆற்றலின் வழியாக நம்முடன் பகிர்ந்து அவர்கள் உலகத்துக்கே அழைத்துச் சென்றார். பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மந்திரத்தில் கட்டுண்டதைப் போல அமர்ந்திருந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ? அருமையான உரை..காதில் கணீரென்று அவர் குரலும் மனதில் அவர் உரையின் தாக்கமும் இப்பவும்..
வீட்டில் என்னிடம் இருக்கும் தொ.மு. சி.யின் தாய் புத்தகம் இன்று மிகை அழகாக இருந்தது..நன்றி BK சார், இலக்கிய வீதி.
மறுவாசிப்பு 'தாய் '
-நன்றி லதா அருணாசலம்


Venkatraman Karthikeyan

 Venkatraman Karthikeyan
நண்பர்களுக்கு வணக்கம்..! மாதம் ஒரு இலக்கியப் படைப்பு பற்றிய கலந்துரையாடல் கூட்டம், அடுத்ததாக கதையாடல் நிகழ்வு என்ற வரிசையில் #வாசகசாலையின் அடுத்த முயற்சியாக இதோ "ஈழத்தமிழர் எழுத்தாளர் வரிசை".
கடலால் மட்டும் அல்ல, கண்ணீராலும் சூழப்பட்டுள்ள இந்த தீவு தேசத்தின், தமிழ் பேசும் நிலப்பரப்பில் இருந்து, மானுடத்தின் எல்லா விழுமியங்களையும் கேள்வி கேட்கும், வாசிப்பவர்களின் மனசாட்சியை கேள்விக்குள்ளாக்கும் இலக்கிய ஆக்கங்கள் நிறைய உண்டு.
ஒரு இலக்கிய அமைப்பாக வாசகசாலைக்கு இத்தகைய ஆக்கங்களுக்கு சிறப்பானதொரு இடமளித்து பேச வேண்டிய கடமையிருப்பதாக கருதுவதன் விளைவே இந்த நிகழ்ச்சி வரிசை. இனி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை "ஈழத்தமிழர் எழுத்தாளர் வரிசை" தொடரும்.
இந்த வரிசையில் முதலாவதாக சமீபமாக வெளியாகி இருக்கின்ற, தமிழ்நதி அவர்களின் "பார்த்தீனியம்" நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாவலை வெவ்வேறு தளங்களில் இருந்து அணுகிப் பேச, தமிழின் மரியாதைக்குரிய படைப்பாளிகள் காத்திருக்கிறார்கள்.வாசகர் பார்வையில் புதிய முகங்களின் பார்வையும் வேறு கோணங்களை உங்கள் முன்வைக்கலாம்.
வாசகசாலையின் ஒன்றரையாண்டுக்கு மேலான பயணத்தில் கண்டிப்பாக இது ஒரு முக்கியமான முன்னகர்வு. எல்லா தருணத்திலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பது நண்பர்கள்தான்.அவர்களுக்கு எப்போதும் போல நன்றிகள் பல.உங்கள் அனைவரையும் நிகழ்விற்கு அன்புடன் வரவேற்கிறேன். மகிழ்ச்சி..!

துயர்...

எல்லோருக்கும் பாடியவனை ....
எனக்கெனவும் பாடியவனை....
இழந்தேன் . அய்யோ....
துயர் மிகுந்து தவிக்கிறேன் .

திண்ணை இதழில்

பி.கே என்கிற பேச்சுக்காரன் – தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு – பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரை

தமிழ்மணவாளன்


(09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்)

கடந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதிய வித்யா பவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்டு தமிழின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரான பாரதிகிருஷ்ணகுமார் உரையாற்றினார்.

அரங்கம் நிரம்பியிருந்தது. நிரம்பியிருப்பது முக்கியமல்ல. இருந்தவர்கள் அனைவரும் செவிகளைத்தவிர எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தனர் என்பது தான் சிறப்பு. திறந்து வைத்த செவிகளோடும் தீவிரமான ஈடுபாட்டோடும் பெற்றுக் கொள்ளும் பேரவாவோடும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எதிரில் இருக்க, திருவிழாக் கூட்டத்தையே, பேசத்தொடங்கும் கணத்தில் கட்டுக்குள் கொண்டு வரக் கற்றிருக்கும் பாரதிகிருஷ்ணகுமார் போன்றோர்க்குச் சொல்லவும் தேவையில்லை.வேறு சில இடங்களில், கேட்போரைத் தன்வசம் கொண்டுவருவதற்காய்ச் செய்ய வேண்டிய பிரயத்தனங்களின் தேவையின்மை மேலும் அவருக்கு உற்சாகம் ஊட்டியிருக்குமென நம்புகிறேன்.தெளிந்த நீரோடையென, சிறு சிறு சுளிவுகளுடன் கண நேர நுரைமுட்டைகள் தோன்றித்தோன்றி மறைய சிலுசிலுவென பாய்ந்தது உரை.
Tho.mu.si.ragunathan
எழுதுவதற்கும் பேசுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.எழுதுவதற்கு அவகாசம் இருக்கிறது.அவசியமான சூழல்களை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்.இல்லையெனில் எழுதாமல் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கும் வரலாம். நாம் படும் பாடுகளை வாசிப்பவர் அறியச் சாத்தியமில்லை. மேடைப்பேச்சு அவ்விதமன்று.நிறுத்தவோ பிறகு பார்த்துக் கொள்ளலாமென நினைக்கவோ முடியாது.
அடித்து எழுதமுடியாது.ஆனால், எழுத்துக்கு நிகராக கருத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய காரியம் மட்டும் நிகழவேண்டும்.அப்படி, சுவையாகவும் பயனாகவும் இருக்கும் உரையே மிகச் சிறந்ததாக அமையமுடியும்.அப்படியொரு உரை அன்றைக்கு அமைந்தது.

நான் இங்கு அவர் பேச்சின் கருத்துகளை இயன்றவரை அவரின் சொற்களைக் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். ஏனெனில், எழுதவேண்டுமென்பதற்காக குறிப்புகளோ ஒலிப்பதிவோ செய்யவில்லை. நினைவில் இருந்தே எழுதுகிறேன்.

”இன்றைய வாசிப்புச் சூழலில், முதல் வாசிப்பே அருகிப்போயிருப்பதை அறிய முடிகிறது.முன்பெல்லாம் 2500 நூல்கள் அச்சடித்தது போலில்லைஇப்போதிய சூழல். தொழில் நுட்பத்தின் உதவியால், வெறும் 25 நூல்களை மட்டும் தயாரிக்கிற நிலையிலிருக்கிறோம்.இந்தச் சூழலில் ஒரு படைப்பாளியின் படைப்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதும் அது குறித்து உரையாடுவதும் மிகவும் முக்கியமானது”,என்று குறிப்பிட்டார்.
”மறு வாசிப்பு என்பது ஒரு படைப்பை மறுபடியும் வாசிப்பது மட்டுமன்று.அவ்விதமாயின், மறுவாசிப்பு என்பது, படைப்பு தன்னளவில் மாறாது இருந்தபடியே, முதல் வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் இடையிலான காலத்தில் அவனுக்குக் கிட்டியிருக்கும் அறிவின் தெளிவு அல்லது அறிவின் போதாமை இவற்றின் வாயிலாக புதிய பரிமாணங்களைக் கண்டடைவது”,என்றார்.
தொ.மு.சி யின் அணுகுமுறை அவரை மிகுந்த கோபக்காரராக அடையாளம் காட்டினாலும், அவருக்குள் இருந்த ஈரமான- ஈரமனப் பதிவுகளைச் சுட்டி அவரின் மறுபக்கத்தின் தரிசனத்தினைக் காட்டினார்.
தொ.மு.சி எழுதிய நாவல்கள்,கவிதை நூல்கள், சிறுகதைத்தொகுப்புகள், விமர்சனம் மற்றும் ஒப்பிலக்கிய நூல்கள், மொழி பெயர்ப்புகள் ஆகியவை குறித்த மெல்லிய அறிமுகம் கொடுத்தார்.
தொ மு சியின் ஒப்பிலக்கிய நூல்களான ,’பாரதியும் ஷெல்லியும்,’கங்கையும் காவிரியும்’, போன்றவற்றின் சிறப்புகளை முன் வைத்துப் பேசிய பி.கே , ’பஞ்சும் பசியும்’, நாவலை நெசவாளர் வாழ்வின் இன்னல்களையும் முக்கியத்துவத்தையும் பேசிய முதல் தமிழ் புதினமாகக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
மறுவாசிப்புக்காக, அவர் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’, நாவல் மொழிபெயர்ப்பையும் ’பாரதி: காலமும் கருத்தும்’, நூலினையும் எடுத்துக்கொண்டார்.
’தாய்’, நாவல் பலராலும் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் உள்ள சிறப்பை அடையாளப்படுதினார். தொ.மு.சி தமிழாக்கம் செய்யும் போது, தான் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் அதில் வெளிப்படுவதைச் சுட்டிகாட்டி நம் பண்பாடு, கலாச்சாரத்திற்கேற்ப சில சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருப்பதன் நுட்பத்தைக் குறிப்பிட்டார் பாரதிகிருஷ்ணகுமார்.
அது தான் மொழிபெயர்ப்பு என்பது மொழியாக்கமாக மாறும் தருணமாகிறது.
’பாரதி: காலமும் கருத்தும்’, நூலின் தனித்துவம் பற்றியும் பாரதி குறித்து தொ.மு.சி வெளிப்படுத்தியிருக்கும் புதிய பார்வைகள் மீதும் விளக்கமான தன்னின் சுயமான பார்வையையும் சேர்த்து,சுவையான கருத்துகளை முன்வைத்தார் பி.கே.
குறிப்பாக, பாரதிக்கு தேசப்பற்று உருவானதற்கான அடிப்படைக் காரணம், காலம்,சூழல் மற்றும் பாரதி நிவேதிதாவைச் சந்தித்ததன் காலம் போன்றவற்றை தொ.மு.சி நிறுவியிருக்கும் பாங்கு மிக முக்கியமானது என கவனப்படுத்தினார். காரணம், பிற ஆய்வுகளைப் போல் புறச்சான்றுகளைக் கொள்ளாமல் பாரதியிடமிருந்தே எடுத்த அகச்சான்றுகள் வாயிலாக தொ.மு.சி ரகுநாதன் முடிவுகொள்வதன் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
தொ.மு.சி குறித்த பறந்த வாசிப்பனுபவத்தின் சாரமாக அமைந்திருந்த பாரதிகிருஷ்ணகுமாரின் பேச்சு, தொ.மு.சி யைப் படித்தவர்களை மறுவாசிப்புக்கும் இதுகாறும் வாசிக்காதவர்களை முதல் வாசிப்புக்கும் தூண்டுவதாக இருந்தது. நல்ல உரையின் நோக்கம் அதுவாகத்தானே இருக்க முடியும். பல பொழிவுகளைத் தொடர்ந்து வழங்கி வரும் பாரதிகிருஷ்ணகுமாருக்கு இந்தப் பொழிவுக்கான என் பாராட்டுகள்;பயன் பெற்றேன்.
நிகழ்வினை ஏற்பாடு செய்த இலக்கிய வீதி இனியவனுக்கு என் அன்பும் மரியாதையும் நன்றியும்.

நன்றி சொல்வோம் ....

இன்பத்திலே துணை இருந்தால் புன்னகை சொல்வது நன்றி ....
துன்பத்திலே துணை இருந்தால் கண்ணீர்
சொல்வது நன்றி ....
வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் .....
வார்த்தையின்றிப் போகும்போது
மெளனத்தாலே நன்றி சொல்வோம் ....
--- கவியரசு கண்ணதாசன்.



இறுதிச் சந்திப்பு

ஜுலை மாதம் 27 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற 
இந்த நிகழ்ச்சியில் தான் 
திருவுடையானும் , நானும் சந்தித்துப் பேசினோம் . என்னைச் சந்திக்கவென்றே ,சங்கரன்கோவிலில் இருந்து வந்திருந்தார் .
ஆகஸ்டு 24 ஆம் தேதி அலைபேசியில் 
உரையாடினோம் .
அதுவெல்லாம்
இறுதிச் சந்திப்பு ,
இறுதி உரையாடல் , என்பதை
இப்போது நம்பத் தானே வேண்டும் ......
நம் விருப்பங்களை மீறி
நம்ப வைக்கிறது வாழ்வின் நிஜம் .



“ எனக்கில்லையா கல்வி ? “ ஆவணப்பட திரையிடல் நிகழ்வு.

 Salai Basheer
ஏக இறைவனின் திருப்பெயரால்...
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு சார்பில்
“ எனக்கில்லையா கல்வி ? “ ஆவணப்பட திரையிடல் நிகழ்வு.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
இடம் :
ஹனியா சிற்றரங்கம்
துஃபைல் வணிக வளாகம்
ஹாஜி அப்பா பள்ளிவாசல் அருகில்
மெயின் சாலை
காயல்பட்டினம்
காலம் :
மாலை 04:30
வெள்ளிக்கிழமை 09 / 09 / 2016
அன்பார்ந்த காயல் வாசிகளே !
அஸ்ஸலாமு அலைக்கும் !!
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும் அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் பத்தாவது நிகழ்வாக வரும் வெள்ளிக்கிழமை ( 09/ 09/ 2016 ) மாலை 04:30 மணியளவில் ஆவணப்பட இயக்குனரும் நட்சத்திர பேச்சாளருமான பாரதி கிருஷ்ண குமார் இயக்கிய “ எனக்கில்லையா கல்வி ? “ ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.
திரையிடலைத் தொடர்ந்து கல்வி குறித்த கருத்து பரிமாற்ற அமர்வும் நடைபெறும்.
நடுவணரசு கொண்டு வரப்போகும் புதிய கல்விக்கொள்கையின் பின்னணியில் கல்வி குறித்த நமது பார்வையை உருவாக்கிக் கொள்ள இந்த நிகழ்வை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவண்
எழுத்து மேடை மையம் – தமிழ் நாடு
செல்: 9171324824
``````````````````````````````````````````````````````````````````````````
குறிப்பு :- எழுத்து மேடை மையம் தமிழ் நாடு --- எந்த ஒரு அமைப்பையோ இயக்கத்தையோ சாராத தன்னிச்சையான சிந்தனைத் தளமாகும்

Aathira Mullai

Manion Cgs

Manion Cgs
பாரதி, பாரதீயம் பற்றி தெரிந்து கொள்ள வாருங்கள் 🙏🙏🙏
நாள் : 11.09.2016 ஞாயிறு 
நேரம் : மாலை 6:00
இடம் : இராமர் கோயில் அரங்கம், ராம் நகர், கோவை

மக்கள் கலைஞர் திரு திருவுடையான் அவர்களுக்கு அஞ்சலி

N.Rathna Vel
சங்கரன் கோவில் – 21.9.2016
நேற்று சங்கரன் கோவில் பரக்கத் திருமண மண்டபத்தில் திரு திருவுடையான் அவர்களுக்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சி.
ஜாதி, இனம், மதம், கட்சி வேறுபாடு இல்லாமல் அத்தனை மக்களும் கலந்து கொண்டார்கள். மிகவும் நெகிழ வைத்த நிகழ்ச்சி. மேடையில் இருந்த தலைவர்கள் அத்தனை பேர்களும் கண்ணீருடன், அல்லது கண்ணீரை அடக்க முயற்சி செய்தார்கள்.
கலந்து கொண்ட அத்தனை மக்களும் அப்படியே. மிகவும் நெகிழ வைத்த நிகழ்ச்சி. அவரது குடும்பத்தினரை அருகில் சென்று பார்க்கும் மனதைரியம் எனக்கு இல்லை. அவரது உருவப்படத்தை நிறைய ஓவியர்கள் வரைந்து அஞ்சலி செலுத்தியிருந்தார்கள், அந்தப் படத்தையும் அருகில் சென்று பார்க்கும் மன தைரியமும் எனக்கு இல்லை.
திருநெல்வேலியில் 25.1.15 இல் நடைபெற்ற தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சந்திப்பிலும், 5.3.16 அன்று நடைபெற்ற திரு கனவுப் பிரியன் அவர்கள் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியிலும் (திரு திருவுடையான் அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்) பார்த்திருக்கிறேன். அவ்வளவு திறமைகள் படைத்த அந்தக் கலைஞனின் எளிமை, வெள்ளந்தியான சிரிப்பு மிகவும் ஈர்க்கிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் உள்ள சில படங்கள் பகிர்ந்திருக்கிறேன்.
திரு திருவுடையான் அவர்களின் குடும்பத்தினர் இந்தக் கொடுந்துயரிலிருந்து மீண்டு வர அவரது குடும்பத்தினருக்கு மனவலிமை தர என்னை மிகவும் ஈர்க்கும் கோமதி அம்பாளை வேண்டுகிறேன்.
திரு திருவுடையான் அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.





தங்கி இருக்கும் அறையில் இருந்து .... உச்சி வெயிலில் சிங்கப்பூர் .......


Jagur Hussain

Jagur Hussain
திரைப்பட கதாசிரியரும், ஆவணப்பட இயக்குநருமான 'பாரதி கிருஷ்ண குமார்' ருசிகரமாக முறையில் வயிறுகுலுங்க சுவைப்பட நடத்திய சிறுகதைப் பயிலரங்கில் இன்று நான் ஆவலுடன் பங்கேற்றேன். என்னுடன் என் உற்றத்தோழனும், வளரும் எழுத்தாளருமான மில்லத் அஹ்மது உடன் உள்ளார். 
புகைப்பட உதவி: கவிஞர் பொன். கர்ணன்

இரவிலும் இயங்குகிறது சிங்கப்பூர்




Pattabi Raman

Pattabi Raman
உணர்வோடு ஒட்டிய
பாரதி கிருஷ்ணகுமார்!
உணர்ச்சிகளை இசையாக்கலாம் - ஆனால் எழுத்தாக்குவது சிரமமான பணி!
உணர்ச்சி உருண்டையா நீட்டமா எனத் தெரிந்தால் அதை ஓவியமாக்கிப் பார்க்கலாம்.
பாரதி கிருஷ்ணகுமார் நேற்று சிங்கை தமிழ் எழுத்தாளர் கழக 'உரையரங்'கில் உணர்வுகளோடு ஒன்றிணைந்தார்..உணர்ச்சிக் குரலோனின் தொடக்கமே ஒரு அமைதியான ஆனால் ஆழமான பாய்ச்சல்! நற்கவிஞன் கிப்ரான் அதற்குக் கை கொடுத்தார்.
மொழி, சத்தியத்தின் குரல் என்ற அடி நாதத்தை உணர்த்த வந்த இப் பேச்சாளன், பெண் விடுதலை வேண்டும் - தமிழ் எங்கள் உயிர்- மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ எனக் கேட்ட தமிழ், வேறு யாருக்கும் இல்லாத் தமிழின் தனிச் சிறப்பு என கட்டுக் கடங்காக் குதிரையில் கடிவாளம் இல்லாமல் சவாரி செய்தான். கிப்ரானின் கவிச் சொற்களை உணர்வோடு எடுத்து இயம்பிய இவரின் தொடக்கமே அருமை! பெற்ற குழந்தையைப் பக்கத்தில் போட்டுக் கொண்டு இஷ்டம்போல்கட்டி மகிழும் தாய் போல, இவர் தன் ஆருயிர் கவிஞன் பாரதியை இடம் கிடைத்த போதெல்லாம் அள்ளி அணைத்து மகிழ்ந்தார்.
"இள வயது மரணம்-இறுதி ஊர்வலம்-மூதாட்டி ஒருத்தி சடலத்திற்கு ஒன்றிலிருந்து ஆறு வரை சொல்லி பூத் தெளிக்கிறாள் அதற்கு என்ன அர்த்தம்? இறந்த இளைஞனின் இளம் மனைவிக்கு ஆறு மாத சூல்! கூடி இருந்தோருக்கு அதை உணர்த்தி, வாழவிருக்கும் இளம் பெண்ணின் எதிர் காலத்தை அந்த சவ மேடையில் உருவாக்குகிறாள். இது தமிழ்ப் பரம்பரைக்கே உள்ள - தமிழுக்கே உள்ள தனி அக்கறை!"
இறுதியில் சொல்லி கிருஷ்ணகுமார் விடை பெற்ற பேச்சுக் காட்சி இது ! அதைத் தான் நான் முதலாவதாக ஆக்குகிறேன். பாரதி கிருஷ்ணகுமாருக்கு ஆரம்பமும், நடுவும், இறுதியும் ஒன்று தான். உணர்ச்சி ஓலங்களை இடம் பார்த்தல்ல- இடைவிடாது எழுப்பத தெரிந்தவர். அவை தன்- பிரவாகத்தில் தானாக வந்ததா? எதுவானாலும் அது மிகச் சிறந்த அப்பியாசம்!
மண் பயனுற வேண்டும் என்பது தான் தலைப்பு. ' 'கடலலை வேகத்தில் கடலையழித்த தமிழ்' என்றெல்லாம் பேசியவர் இந்த பாரதி. இவர் சொல்கிறார்:
மொழியால் மண் பயனுற்றது.மொழி இருந்ததால் தான் உலகின் அண்டசராசரங்களுக்கும் பெயர்கள் கிடைத்தன.மொழி இல்லாத ஒரே காரணத்தால் தான் விலங்கினங்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றன. நாம் மட்டுமே ஆறறிவு கண்டோம்.
இன்று தாய் மொழியை (தவறில்லாமல்) எழுதவும், படிக்கவும் புதிய தலைமுறை தயாராக வேண்டும். வல்லினமெல்லின வேறுபாடுகளை தெரிந்து கொள்ளும் புதிய தலைமுறையை மொழிச் சுத்தமாகத் தயாரிக்கும் எழுத்தாளர் கழகங்கள் நமக்கு நிறையத் தேவை.
இறைவனையே பல்லாண்டு வாழ்க என்ற மொழி தமிழ் மட்டுமே. இறைவனை எழுத்தில் படைத்தவன் கம்பன். ராமாயணப் பாத்திரங்களை வால்மீகியிலிருந்தும் மாறுபட்ட பாத்திரங்களை கம்பன் நிர்ணயிக்கிறான்.ராமனை சைவனா, அசைவனா என்று அவன்தான் முடிவு எடுக்கிறான்.
இல்லறத்தையும் துறவறத்தையும் ஒரு சேரப் பாடியது தமிழ் தான். ஈடு இணையற்ற திருக்குறளுக்கு உலகில் வேறென்ன இருக்கிறது!
அறம் பேசிய மொழி-பூமியை வணங்கிய மொழி-உலகை நினைத்த மொழி ...தமிழ்.. தமிழ்!
ஆற்று நீர் கடலுக்குச் செல்வதை அவசியப்பப்டுத்தியவர்கள் நாம். இன்றேல் உப்புக் குவியலில் கடல் வாழ் இனங்கள் செத்து மடிந்திருக்குமே!
வானம் சுருங்கினால் தானம் சுருங்கும்!
கொல்லையிலிருந்த மாமரம் என் அம்மா தின்று போட்ட விதையின் உருவாக்கம்-ஆகவே இந்த மரம் என் அக்காவாகிறாள். நம் காதலை சகோதரியின் பார்வையில் நடத்த மாட்டேன் எனச சொல்லும் சங்க காலப் பெண்ணை-பாடலை- இங்கே நடமாட விடுகிறார் பாரதி கிருஷ்ணகுமார்.
பூமி வெப்பம் உலகை பருவக் கோளாறுகளில் சிக்க வைக்கக் காத்திருக்கிறது. அதைக் காக்க வேண்டும்.
தூக்கணாங் குருவிகள் தூங்காப் பணி செய்து கட்டும் கூடுகளில் பாம்புகள் போவதில்லை. குஞ்சினங்கள் கூட்டில் தடுமாறாமல் வசிக்க, மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து, விளக்காக இருத்தி வைக்கும் ஆற்றல் குருவிக்கு!.
ஆமைகளின் பிரசவ காலத்தைப் பார்த்தறிந்து, கடலோடிகள் தங்கள் திசை நோக்கிய காலம் நம்முடையாதாக இருந்தது. கலங்களில் திரவியம் சேர்க்க சென்றபோது தேவாங்குகளை எடுத்துச் சென்றவன் தமிழன். தேவாங்குகளின் திசைத் திருப்புகளை வைத்துப் பல காதங்களைக் கடந்தவன் நம் மூத்த பரம்பரை.
வைகை மணலை வழிபாட்டுக்கு எடுத்து வரச் செய்யும் தாய், வேலை முடிந்ததும் அம மண்ணை மீண்டும் ஆற்றிலே கிடக்கச் செய்கிறாள்..ஏன்? நதி நீர்த் தாயின் மேலாடை அந்த மண்.
மண்ணும், மக்களும் வாழ, மொழி, சத்தியத்தின் குரலாக விளங்க வேண்டும்.
நேற்றைய உரையரங்கத்தில் பேச்சுக் கலைஞன் பாரதி கிருஷ்ணகுமார், உணர்ச்சிக் கொப்பளிப்புகளுடன் மொழியைத் தொட்டார்-இனத்தைத் தொட்டார்-இன்றைய நம்மையும் தொட்டார். --ஏ.பி.ராமன்.
குறிப்பு: பாரதி கிருஷ்ணகுமாரை எப்படித் தொடுவீர்கள் என்று நேற்றிலிருந்து என்னிடம் என் அன்பிற்குரிய நண்பர்கள் ஆர்வமுடன் கேட்ட வண்ணம் இருந்தனர். 'காத்திருக்கிறோம்' எனப் பலர் சொன்னதும் உண்டு. அவர் சொன்னதைத் தான் நான் எடுத்துச் சொல்லப் போகிறேன்/ நானா மூளையைக் குடைந்து சொற் சிலம்பங்களை வீசப் போகிறேன்?ஆனாலும் யோசிக்க வைத்தார். அதனால் தான் நேற்றிரவு அதை ஒதுக்கி வைத்து விட்டு நிம்மதியாகத் தூங்கி விட்டேன்.-
- ஏ.பி.ஆர்.

Karpagavalli Durairaj

சந்திக்க அனுமதி கேட்டதும் சற்றென்று நிச்சயம் சந்திக்கலாம் வாங்கம்மா என்று அன்போடு எங்களை உபசரித்த "என்று தணியும்"பட இயக்குனர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அண்ணாவிடம்,எனது அண்ணன் மறைந்த பாடலாசிரியர் கவிஞர் வாசனின் "வருகிறேன் என்று சென்றாய்" கவிதை தொகுப்பினை வழங்கிவிட்டு சற்றுநேரம் உரையாடினோம்.உயரத்தில் மட்டுமல்ல மனதாலும் குணத்தாலும் உயர்ந்தவர்.நன்றி அண்ணா.Bharathi Krishnakumar


பௌத்த வழிபாட்டுத் தலம்

சிங்கப்பூரில் .....
தூய்மையும், அமைதியும் 
ததும்பும் ஒரு சாலையோரப்
பௌத்த வழிபாட்டுத் தலம்







நீத்தார் காத்திருக்கும் இல்லம்


நான் தங்கி இருந்த விடுதிக்கு மிக மிகப் பக்கத்தில் இந்த இடம் இருக்கிறது . முதல் நாள் அது பூக்கள் விற்கும் கடை என்று கருதினேன் ....
மறுநாள் தெரிந்தது , அது "நீத்தார்"இறுதிச் சடங்குகளுக்காகக் காத்திருக்கும் இல்லம் என்று .....