Saturday, January 28, 2017

பிறர் பங்கைத் திருடுதல் கூடாது .

பிறர் பங்கைத் திருடுதல் கூடாது .
Dec 29, 2016---------------------------------------------------------
கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி ஞாயிறு அன்று கீழ்வெண்மணி நினைவு தினம் .
அன்று கீழ்வெண்மணி குறித்த 20 நிமிட ஆவணப்படம் ஒன்றினை " கீழ்வெண்மணி - தணியாத வெம்மை " என்ற தலைப்பில் புதியதலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பியது .
அந்த ஆவணப்படத்தின் ஆகப் பெரும்பாலான காட்சிகள், எனது தயாரிப்பிலும்,இயக்கத்திலும் வெளியான கீழ்வெண்மணி குறித்த " ராமய்யாவின் குடிசை " எனும் ஆவணப்படத்தில் இருந்து எனது அனுமதியின்றி எடுத்துச் சேர்க்கப்பட்டிருக்கிறது .
அடிப்படை அறங்களின் படியும், காப்புரிமைச் சட்டப்படியும் புதியதலைமுறை தொலைக்காட்சி எனது அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும் . அனுமதி ஏதும் பெறவில்லை .
அல்லது எனது பெயரையும் , எனது படைப்பு பற்றியும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
அதனையும் குறிப்பிடவில்லை.
மாறாக , அது அவர்களே தயாரித்த படம் என்று தோன்றும் வண்ணம் , படம் முழுக்க புதியதலைமுறை என்று ஆங்கிலத்தில் water mark உம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டு கால உழைப்பும் , என் வாழ்நாள் சேமிப்பு முழுதும் முதலீடு செய்து உருவாக்கிய படைப்பு அது .
ஏழை விவசாயக் கூலிகளின் ,உழைப்பைத் திருடித் தின்ற முதலைகள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்தால் , அதையும் திருடுவதை எப்படி ஏற்க முடியும் ?
உங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு
அனைவரையும் அழைக்கிறேன் .

No comments:

Post a Comment