Saturday, January 28, 2017

தேசம்

தேசம் என்றால் என்ன ?
தேசீய கீதம் என்றால் என்ன?
எழுதியது யார்?
எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது?
அதன் பொருள் என்ன?
எந்த ஆண்டு எழுதப்பட்டது?
இந்தியா எப்போது தேசமானது?
ஒரு நாட்டிற்கு எதற்கு தேசீய கீதம் ?
எப்போதெல்லாம் இசைக்க வேண்டும்?
எங்கெல்லாம் இசைக்க வேண்டும்?
எதற்காக எழுந்து நிற்க வேண்டும்?
யாருக்கெல்லாம் விதி விலக்குண்டு?
எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்?
இது தான் தேசீய கீதம் என்று தீர்மானித்தது யார்?
எப்போது, எங்கே,எப்படித் தீர்மானித்தார்கள்?
இது குறித்து ஏதேனும் சட்டம் உள்ளதா?
எனில், அது என்ன சொல்லுகிறது?
நின்றால் பரிசா?
நிற்காவிட்டால் தண்டனையா?
எந்த மெட்டில் பாட வேண்டும்?
இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாமா?இதற்கெல்லாம் விடை தெரிந்து கொள்ளும் உரிமை உண்டா?
அல்லது
எந்தக் கேள்வியும் கேட்காமல் நின்றால் போதுமா?
கோடிக் கணக்கானக் குழந்தைகளை அடிப்படைக் கல்வி இன்றி, வீதிகளில் நிறுத்திவிட்டு அவர்களை தேசீய கீதத்திற்கு நிற்குமாறு சொல்லுவது , அன்றி உத்தரவிடுவது.... அவமானகரமானது.
இப்போதெல்லாம் சாத்தான்கள் வேதங்களை ஓதுவதில்லை ;
எழுதத் துவங்கி விட்டன.

No comments:

Post a Comment