Monday, January 30, 2017

கரிகாலன்

கரிகாலன்
ஜெயந்தன் விருதும் பி.கே உரையும்..
----------------------------------------------------------
நல்லபேச்சு எதுகை மோனை கொண்டதல்ல.
அது உள்ளத்தின் அடியாழத்திலிருந்து வருவது.
கேட்பவரைச் சிந்திக்க, உணர்ச்சி வயப்டட
வைப்பது.இன்று ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதில் பாரதி கிருஷ்ணகுமார் ஜெயந்தனின் சம்மதங்கள் கதையைத் தன் பேச்சினூடாகக் கூறினார்.அதன் ஆதார ஸ்ருதி அழியாமல் அத்தனை லாவகமாய்க் கூறினார்.அவர் பேசப் பேச ஜெயந்தனின் பிள்ளை சீராளன் அழுதார்.நான் கண்கள் கசிந்தேன்.கூட்டம் உணர்ச்சியில் உறைந்திருந்தது.
Bharathi Krishnakumar...
மேடையை உங்களுக்கு அத்தனை இலகுவாய்க் கையாளத்தெரிந்திருக்கிறது.நீங்கள்
தொலகாப்பியத்தையும் தொடுகின்றீர்கள்.மறு வாசிப்பைக் குறித்தும் பேசுகின்றீர்கள்.இதுதான் உங்கள் பலம்.ஒரு பேச்சாளன் சமகாலத்தோடு ஒட்டி உறவாட வேண்டும்.
உங்கள் மேடைத் தமிழ் நீண்ட காலம் தமிழன்னையின் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அன்பும் வாழ்த்துக்களும் பிகே!

No comments:

Post a Comment