Saturday, January 28, 2017

Kadayanallur Benzy

Kadayanallur Benzy 


தோழர் பி.கே., பாரதிகிருஷ்ணகுமார், Bharathi Krishnakumar.
13.10.1991 ல் எங்களது முதல் சந்திப்பு.
ஸ்ரீவைகுண்டம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகியாக நானும், அகில இந்திய கிராமிய வங்கி ஊழியர் சம்மேளத்தின் தேசிய இணைச் செயலராகத்
தோழர் பி.கே யும்.
அரசு ஊழியர் சங்க மாநாட்டின் பொதுமேடையின் சிறப்புப் பேச்சாளர்.
"பாரதி" அப்போது அவரது பெயரோடு ஒட்டவில்லை. ஆனால் அவர் பாரதியைக் கொஞ்சுவதைப் பார்த்தால், ஒரு இளம் தாய் தனது குழந்தையை அள்ளி முடித்து, அனைத்தும் பற்றி, அணைத்து, முத்தி... அதைவிட ஒருபடி மேலே போய் அந்த முண்டாசுக் கவிஞனின் ரௌத்திரத்தை முத்தினார்.
90 களில் அனைத்துத் தொழிற்சங்க மேடைகளும் அந்த ஒருவரைக் குத்தகைக்கு எடுத்திருந்தது. மேடையின் இலக்கணங்களை தமிழ் கொண்டும், விஞ்ஞானம் கொண்டும் அடித்து நொறுக்கிச் சிந்தனைகளை வளர்த்த மேடைக் கலைவாணர் பி்கே.
"நம்பிக்கையோடு பேசுவதற்கு ஒருவாயும், நம்பிக்கையோடு கேட்பதற்கு ஒரு ஜோடிக் காதுகளும் இருக்கும்வரை, உரையாடலுக்கான தேவையும் இருந்துகொண்டே இருக்கும்" - என்பது இவர் உதிர்த்த பொன்மொழி.
ஆவணப்படங்கள் :
"ராமையாவின் குடிசை",
"உண்மையின் போர்க்குரல்",
"எனக்கு இல்லையா கல்வி?"
கீழவெண்மணி மற்றும் கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் படுகொலைபற்றிய அவரது ஆவணப் படங்களில் அவரது உழைப்புப் பிரமிக்கவைக்கும்.
"உண்மை புதிதன்று,
இருள் விலக்கும் ஒரு திசை ஒளியே இலக்கியம்" எனச்
சொல்லிச்சென்ற,
"என்று தணியும்", அவரை இயக்குநனாராகத் தமிழ்ப்பட உலகிற்கு அறிமுகம்
செய்தது.
இன்று, 01.12.2016. அந்த மகா கலைஞன் பிறந்தநாள்.
நெஞ்சம்நிறை வாழ்த்துக்கள், பி்கே.
***

No comments:

Post a Comment