Monday, January 30, 2017

"கேணப் பயலுக ஊருல கிறுக்குப் பய நாட்டாம"

1978 ஆம் ஆண்டு அப்போதைய பாரதப் பிரதமர் திரு . மொரார்ஜி தேசாய் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, உயர் மதிப்புடைய 1000,5000,10000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என்று அறிவித்தார் .
அதைப் பகடி செய்து தி்ரு .ஆர். கே. லஷ்மண் வரைந்த கேலிச்சித்திரம் இது .....
இன்று ஆர்.கே .லஷ்மண் இருந்திருந்தால் , புலிக்குப் பதிலாகப் பெரிய எலியின் படத்தைத் தான் வரைந்திருப்பார் ....
இப்போதைய ஆட்சியாளர்களால் எலி வாலை மட்டுமல்ல .... வாலில் இருக்கும் .......க் கூடப் பிடுங்க இயலாது .
ஏனெனில் , எலியின் வாலே இவர்கள் தான் ....
இந்த நயவஞ்சகமான அறிவிப்பால் எளிய மக்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது ....
இதன் அரசியல் அறிந்தே வரவேற்கும் கயவர்களுக்கும் ,
அரசியல் அறியாது ஆதரிக்கும் அரை வேக்காட்டுப் படிப்பாளிகளுக்கும் ,
சொல்லுகிறேன் ....
"கேணப் பயலுக ஊருல
 கிறுக்குப் பய நாட்டாம"
உண்மை ஒரு நாள் வெளியாகும்
அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்
என்று பாடினார் பட்டுக்கோட்டை .
உண்மை என்றைக்கு வெளியாகும்?
அது தெரியாது என்பதில் தான் உங்கள் நிகழ்காலமும் , எங்கள் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது .

No comments:

Post a Comment