Tuesday, February 13, 2018

அம்பேத்கரின் புகழ் பாடிக்கொண்டே ....


 மாமேதை அம்பேத்கரின் நூற்றி இருபத்தைந்தாவது பிறந்தநாள் விழாவை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனம் நடத்தியது . அதில் பங்கேற்கும் வாய்ப்பை பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலாளர் தோழர் . ஆனந்த் உருவாக்கித் தந்தார் .

"ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக , உறங்காது உழைத்த அந்த மேதமை மிக்க மனிதரின் உயிர் உறக்கத்தில் பிரிந்தது ஒரு இயற்கை முரண் "
என்று எனது உரையைத் துவங்கினேன் .


நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் பேசினேன் .
ஆழ்ந்த அமைதியுடன் கேட்டார்கள் .
அவரது உயர்வை , சிறப்பை , தனித்துவத்தை உரக்கச் சொன்னேன் .

வாழ்வின் இறுதிக்கணம் வரை மாறாத அர்ப்பணிப்புடன் , முனைப்புடன் , ஈடுபாட்டுடன் அந்தப் பணியைச் செய்து கொண்டே இருப்பேன் .

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் ,
சிறப்பாக தோழர் ஆனந்த்துக்கும் மனமார்ந்த நன்றி .