
நண்பனும் , தோழனுமான பவா . செல்லத்துரை நடத்தும்" டயலாக் " என்னும் அமைப்பின் இரண்டாம் அமர்வு .
தேர்ந்த பார்வையாளர்கள் . அமைதியாக , ஈடுபாட்டுடன் ஆவணத் திரைப்படத்தைப் பார்த்தார்கள் .
விவாதங்களுக்கு நேரம் அமையவில்லை .
"நீ நல்லாப் படிக்கணும் என்று மாணவர்களைப் பார்த்துச் சொல்லும் ஆசிரியர்களைப் பார்த்து .. நீயும் கொஞ்சம் நல்லாச் சொல்லிக் கொடுக்கணும்னு " என்று எப்போதாவது சொல்ல முடியுமா ? என்று ஆவணத் திரைப்படத்தின் போக்கில் ஓரிடத்தில் பேராசிரியர் . ச . மாடசாமி குறிப்பிட்டதும் . முன் வரிசையில் இருந்து திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்களின் சிரிப்பும், கை தட்டலும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது .
இப்படித் தான் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து எதையும் மறக்க விடாமல் செய்து விடுகிறது .
அந்த சிரிப்புக்கும் , கை தட்டலுக்கும் பின்னே எவ்வளவு கசப்பும் , துயரமும் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள்
2 comments:
:)
:) :(
Post a Comment