Tuesday, February 26, 2013

மூதாதையின் குரல்

து சினிமாவில் வேலைக்குச் சேர்ந்த புதிது .1998 ஜூலை .

டப்பிடிப்புக்கு இடம் தேர்வு செய்யச் சுற்றி அலைந்து கொண்டிருந்தசமயம்.

டிமரம் எது, விழுது எதுவென்று, பிரித்துப் பார்க்க இயலாத
 ஒரு ஆலமரத்தைப் பார்க்க நேர்ந்தது .
அதன் பிரம்மாண்டம் வியக்க வைத்தது .

தேனீ மாவட்டத்தின் மேற்கு மூலையில் ஒரு சிறிய கிராமத்தில் கால் பரப்பி நின்றது . அதன் வயதுக்கு, அது குறையாத இளமையோடு இருந்தது .
எத்தனை மனிதர்கள் , எத்தனை பறவைகள் அதன் நிழலில் வாழ்ந்து இருப்பார்கள் . எத்தனை பெரிய மௌன சாட்சி .

தன் மீது தோழமையோடு சாய்ந்து கொண்டு ஒரு படம் எடுத்துக் கொள்ள விரும்பினேன் . அதன் நிழலில் கூடி இருந்த ஒரு அலாதியான மணம்
இன்னும் நினைவில் இருக்கிறது .

பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னும், அந்த நிழலும் அதன்  மணமும் மனதின் அடியாழத்தில் இருந்து எந்தப் பிரயாசையும் இல்லாமல், உள்ளிருந்து மேலேறி வருகிறது .

ரு நாவல் எழுதுவதற்குக் குறிப்புகள் சேர்த்துக் கொண்டிருக்கிறேன் . அதில் தன்னையும் சேர்த்து எழுதுமாறு இந்த மரம் எனக்குச் சொல்லி இருக்கிறது .
அந்த மூதாதையின் குரலுக்கு நான் தலை சாய்த்துச் சம்மதம் சொல்லி இருக்கிறேன் .

மூதாட்டி ... உன்னைப் பற்றி எழுதுவேன் .

1 comment:

தீபா நாகராணி said...

எழுதுங்க எழுதுங்க :)

Post a Comment