Monday, April 8, 2013

...அறிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்...

வெண்மணி ஆவணப்படத்திற்க்கென நாங்கள் கொண்டு வந்த பிரசுரங்களில் இது மிக மிக முக்கியமானது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்திஐந்தாம் தேதி கீழவெண்மணியில் நடந்த படுகொலைக்குப் பிறகு, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலச் சுவான்தார்கள் அனைவரையும் விடுதலை செய்தது உயர் நீதி மன்றம்.அந்த செய்தி வெளியான நாளிதழ் தான் மேல் பகுதியில் காணப்படுவது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி நான்காம் ஆண்டு வெளியான தினசரிகளில் ஒன்று தான் ஆவணமாகக் கிடைத்தது. அது நீதித் துறையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்பது எங்கள் திடமான எண்ணம் .எனவே வடிவமைப்பில் அதைச் சுற்றி ஒரு கருப்பு வண்ணத்தில் ஒரு அடையாளம் இட்டோம் .

வெண்மணி வழக்கின் முதல் குற்றவாளியான இருஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படமே கீழே உள்ள புகைப்படம். அப்போது இந்த புகைப்படம் எந்த நாளிதழிலும் வராமல் அரசும் போலிசும் பார்த்துக்கொண்டது. எங்கள் தேடுதலில் எங்களுக்கு இந்த படம் கிடைத்தது. நாங்கள் வெளியிடும் முன்பு இந்த புகைப்படத்தை தமிழ்நாட்டில் எவரும் பார்த்தது இல்லை. அந்த வகையில் இது மிக முக்கியமானஆவணம்.

இந்த படத்தைச் சுற்றிலும் சிவப்பு வண்ணத்தில் ஒரு அடையாளம் இடுவதன் மூலம், நாங்கள் சொல்ல விரும்புகிற செய்தியை, நுட்பமான மனிதர்கள்  அறிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

2 comments:

ilangovan thayumanavar said...

ஆண்டைகள் கட்டம் கட்டப்பட்டுக், கணக்குகள் நேர் செய்யப்பட அன்று சிவப்பாய் சில் இதயங்கள் கொதித்தன.. தண்டனை விதித்தன.. பிசகாமல் நடத்தி முடித்தன்..
இன்று -
கொதிகலன்களில் பழுத்துக் காய்ந்து கொண்டிருக்கின்றன பல்வேறு திசைகளிலும் பல வகையான இரும்புகள்.. வார்த்தெடுக்கத்தான் சரியான கருமான்களைக் காணோம்..

venugopal said...

சிவப்பு அடையாளச்செய்தி புரிந்தது; சரியான கருமான்களும் வருவார்கள்..

Post a Comment