Thursday, March 7, 2013

" பழக்கத்தின் தடத்தில் இருந்து ". . .

 எனது முதல் சிறுகதைத் தொகுப்பான
"அப்பத்தா " வில் இடம் பெற்றுள்ள
 "லுங்கி '' என்னும் சிறுகதையை
 மறு பிரசுரம் செய்துள்ளது
மலேசியாவில் இருந்து
வெளியாகும் "நம்பிக்கை" என்னும் இதழ் .

அந்த இதழுக்கு எனது நன்றி . இது பிரசுரம் காண்பதற்குப் பொறுப்பான சகோதரர் ஜனாப்.
பியாதுல்லாவுக்கு எனது சிறப்பான நன்றி .

இந்த சிறுகதையை முதலில் பிரசுரித்த
"சண்டே இந்தியன் " வார இதழுக்கும் , அதன் பொறுப்பாசிரியர் நண்பர் சுந்தரபுத்தனுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்லுகிறேன் .

இந்தக் கதையைப் படித்து விட்டு நான் மிக மிக மதிக்கும் பேராசிரியர் ச . மாடசாமி என்னிடத்தில் சொன்னார் . " பழக்கத்தின் தடத்தில் இருந்து விடுவிக்கும் ஒரு கதை . விடுவிக்கிற ஆள் நீங்கள் " என்றார் . இது போன்ற சொற்கள் தாயின் முலைப் பாலுக்கு நிகரானவை . அவர் பேசப் பேச நான் குழந்தையானேன் . அவர் எப்போதும் தாயுமானவர் .



1 comment:

ilangovan thayumanavar said...

பழகிய தடங்களிலிருந்து விலகி, புதுத் தடம் பதிக்கும் முன்னோடிகள், பயணப் பாதையை, தொடரும் அனைவருக்குமாக துலக்கமாக விட்டுச் செல்கிறார்கள். பேராசிரியரின் அவதானிப்பு உங்களுக்கு மிகப் பொருத்தம் பி.கே. தமிழ் மேடைகளின் முக்மன் சம்பிரதாயங்களை விடுவித்து, கருப் பொருளின் உள் அணுக்கூறுகளிலிருந்து விதிர்த்துக் கிளம்பும் உங்கள் உரைவீச்சுக்களை நினைவு கூர்கிறேன்..

Post a Comment