Tuesday, March 5, 2013

அது ஒரு சந்தோசமான துயரம் .

 இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டுக்கான இலக்கிய விருதுகளை கடந்த ஆண்டு ஜூன் மாதம் , சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் .

எனது இயக்கத்தில் வெளியான "எனக்கு இல்லையா கல்வி ? " என்னும் ஆவணப் படம் மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசு பெற்றது .

அது ஒரு சந்தோசமான துயரம் .
விருது பெற்றது சந்தோசம் .
 ஆனால் , விருது மிக இளம் வயதில் காலமான என் மிக நெருங்கிய நண்பனும் , தோழனும் ஆன பா . ராமச்சந்திரன் நினைவு விருது .

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உலகில் , உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே பேசிய கபடமற்ற மனிதன் .
மலர்ந்த புன்னகை ததும்பும் முகம் . கொஞ்சம் கனத்த சாரீரம் .
 வட சென்னைக் கலை இரவுகளில் பங்கு பெறப் போன தருணங்களில் , வரவேற்கும் அவனது கனிவை , அன்பை , தோழமையை இனி யாராலும் தர இயலாது . எப்போது தொலைபேசியில் பேசினாலும் காலக் கணக்கின்றி பேசிக் கொண்டே இருக்கும் அளவுக்கு செய்திகளும் , சிந்தனைகளும் கொண்டிருந்தான் .

என்ன இருந்தாலும் , நீ இவ்வளவுவிரைவாக விடைபெற்றுக் கொண்ட இருக்கக் கூடாது ராமச்சந்திரன் .அதிலும் , உன் நினைவாகத் தரப்படும் விருதை நான் வாங்கும் துயரத்தை எனக்கு நீ தந்து இருக்கவே கூடாது என் நண்பனே ....

மரணம் பெருமைக்குரியது என்கிறான் வள்ளுவன் .
உன் விசயத்தில் அது சிறுமையாகத் தான் நடந்து கொண்டது .

2 comments:

ilangovan thayumanavar said...

நெகிழ்வான பகிர்வு..

ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்) said...

உண்மைதான் தோழர். பா ரா என செல்லமாக அழைத்த பா ராமச்சந்திரனின் துயரம் பாரியதுதான்... இரு புறமும் மரங்கள் இருக்கும் சாலைகளில் நாம் நடந்துகொண்டிருக்கும்போது பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கும் அவனின் வார்த்தைகள். காலைத் தடுக்கிவிடும் சரளைக் கற்களைக் கவனமாகக் கால்களால் எத்திக்கொண்டே இமயமலையைப் பற்றிக் கனவு கண்டவன்..அவனுடன் இருந்த மகிழ்ச்சியைவிடவும் அவன் இன்று இல்லாத துயரம் பிரம்மாண்டமாக மிரள வைக்கிறது..நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...அவனுக்காக மீண்டும் கூடுவோம்

Post a Comment