Wednesday, April 25, 2018
Thursday, March 22, 2018
Wednesday, March 21, 2018
ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
நாமக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் .
இரண்டாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்றார்கள் .
பயிற்சி முடிந்ததும் , நிகழ்வில் பங்கேற்ற ஒரு ஆசிரியருடன் ...
நல்ல அனுபவம் .
நிறைய ஆசிரியர்கள் பாராட்டினார்கள் .
பலர் இன்னும் தொடர்ந்து உரையாடுகிறார்கள் .
வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றிக் கேட்கிறார்கள் .
வெகு சிலர் படித்த புத்தகங்கள் பற்றிப் பேசுகிறார்கள் .
ஆசிரியர்கள் அதிகம் படிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் .
வாசிப்பதை நிறுத்தி விட்ட ஒரு ஆசிரியர் , கற்பிக்கும் பணிக்குப் பொருத்தமில்லாதவர் . வேறு வேலைக்குப் போய் விடுவது , குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் பேருதவி புரியும் .
Tuesday, March 13, 2018
Saturday, March 3, 2018
Friday, March 2, 2018
Thursday, March 1, 2018
Monday, February 19, 2018
கம்பன் என்றொரு மானுடன்
கம்பனின் கவித்துவ மேன்மையை உலகுக்குச் சொல்லும் உன்னத திருப்பணியே கம்பன் கழகங்கள் ஆற்றும் பெரும்பணி .
ராஜபாளையம் கம்பன் விழாவில் அந்த அரும்பணியை அவர்களோடு இணைந்து செய்யும் நல் வாய்ப்பு வாய்த்தது .
பட்டிமன்றம் ஒன்றில் நடுவராகப் பணி ஆற்றும் பொறுப்பு கிடைக்கப் பெற்றேன் .
ஒருமனதாக எல்லோரும் பாராட்டினார்கள் .
மூன்று மணி நேரம் நடந்தது பட்டிமன்றம் .
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் .
வெறும் பார்வையாளர்கள் அல்ல .
தேர்ந்த ரசனைக் கூர்மை கொண்ட , தகுதி மிக்க மக்கள் திரள் .
கம்பன் கழகத்திற்கு நன்றி .
Thursday, February 15, 2018
காஞ்சீபுரத்தில் .....
மாநாட்டின் ஒரு பகுதியாக கருத்தரங்கம் நடைபெற்றது .
அரங்கில் நடத்தாமல் , திறந்த வெளியில் பொதுமக்கள் கேட்க
கருத்தரங்கு நடைபெற்றது .
அந்த உரையின் காணொளித் தொகுப்பு ,
மாநிலமெங்கும் சுற்றுக்குப் போகிறது
என்று நண்பர்கள் சொன்னார்கள் .
எனக்கொரு பிரதி வேண்டுமென்று கேட்டேன் .
தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் .
காத்திருக்கிறேன் .
ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையம் 01
ஜப்பானில் இருந்து திரும்பும் போதும் , போகும்போதும் சில மணி நேரங்கள் இங்கு காத்திருக்க வேண்டும் .
விமானநிலையம் மட்டுமல்ல ... மாபெரும் வணிக வளாகம் .
உலகின் எல்லா நாட்டு உணவு வகைகளும் கிடைக்கும் .
தரமான , சுத்தமான , கலப்படமில்லாத உணவு ...
வாசிக்க ஏராளம் சஞ்சிகைகள் , புத்தகங்கள் .
ஒரு வாசலில் இருந்து இன்னொரு வாசலுக்கு சில கிலோமீட்டர் இடைவெளி தூரம் இருக்கிறது .
ஆனால், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது .
பயணிகளின் சுகமான பயணத்திற்காக ...
தரையோடு நகரும் நடைபாதை , மின்தூக்கிகள் , தூய்மையான கழிப்பறைகள் , எஸ்கலேட்டர்கள் , பேட்டரி கார்கள் ... சொல்லி முடியாது ... அத்தனை தூய்மை .
1200 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் , 100 க்கும் அதிகமான விமான நிறுவனங்களின் விமானங்கள் , 220 க்கும் குறையாத விமான நிலையங்களுக்கு , பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் இருபத்துநான்கு மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் விமானநிலையம் .
உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்று . அதனை நிர்வகிக்கும் மனிதர்கள் , யாராக இருந்தாலும் பாராட்டுதலுக்கு உரியவர்கள் .
இணைந்து செயலாற்றும் திறன் இன்றி , இது எதுவும் சாத்தியமில்லை .
Wednesday, February 14, 2018
பாரதி பாசறை - கோயம்புத்தூர் -10.12. 2017 - பகுதி 01
பாரதி பாசறை கோவையில் இருந்து இயங்குகிறது ...
அது பற்றிய விரிவான செய்திகளைப் பிறகு எழுதுகிறேன் .
இந்தப் புகைப்படங்கள் 2017 ஆம் ஆண்டு பாரதி பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .
இந்த ஆண்டு பாரதி விருது திரு . பெ . சு . மணி அவர்களுக்கு ,
பாரதி இயலுக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்கிற்காக அவருக்கு வழங்கப்பெற்றது .
அதே அரங்கில் திரு . இளசை மணியன் அவர்கள் தொகுத்த பாரதி பற்றி அவரது நண்பர்களும் , உறவினர்களும் எழுதிய நினைவுக் குறிப்புகள் நூலாக்கம் பெற்று வெளியிடப்பட்டது .
பசுமைத் தாயகம் அமைப்பின் நிறுவனர் , மருத்துவர் , சிந்தனையாளர் , ஈரோட்டுத் தோழர் ஜீவானந்தம் , இளசை மணியன் , நான் ( இடமிருந்து வலமாக )
இந்தப் புகைப்படங்களை எடுத்தது என் நண்பன் , சகோதரன் , அன்புக் கவிஞன் அய்யப்பமாதவன் ...
எழுச்சித் தமிழருடன் ...
என்று தணியும் ... எனப் பெயரிடப்பட்ட எனது கதை , திரைக்கதை , உரையாடல் மற்றும் இயக்கத்தில் உருவான,
ஒரு முழு நீளத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அழைப்பதற்காக,
எழுச்சித் தமிழர் தோழர் . திருமாவளவனை
நேரில் அழைக்க ஒரு காலையில் அவரது இல்லத்திற்குப் போயிருந்தோம் .
அருமை நண்பரும் , ஆவணப்பட இயக்குனருமான ஆளூர் ஷாநவாஸ்
தான் அதற்குரிய ஏற்ப்பாடுகளைச் செய்திருந்தார் .
காலையிலும் மிக அதிகமான பார்வையாளர்கள் காத்திருந்தார்கள் .
பரபரப்பான பணிகளுக்கு இடையிலும் மிகுந்த நேரம் ஒதுக்கி , நீண்ட நேரம் எங்களோடு உரையாடினார் .
திரைப்படம் பார்க்க வருவதாக உறுதி தந்தார் .
அதன்படியே வந்து சிறப்பித்தார் .
நான் அவர் மீதும் , அவர் என் மீதும் பரஸ்பரம் எப்போதும் மதிப்பும் , அக்கறையும் கொண்டிருப்போம் .
அவர் தனது உடல்நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என்று எப்போதும் அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் .
அவர் தமிழ்நாட்டுக்குத் தேவை .
Tuesday, February 13, 2018
விடுதலைச்சிறுத்தைகள் கலை இலக்கியப் பேரவை
திருப்பரங்குன்றத்தில் நடந்த இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்துச் சிறப்பித்த பேரவைக்கும் , சிறப்பாகத் தோழன் . சென்றாயனக்கும் மனம் நிறைந்த நன்றி .
அம்பேத்கர் தலித் மக்களின் தலைவர் மட்டுமல்ல ; ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமான ஒப்பற்ற தலைவர் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினேன் .
Subscribe to:
Posts (Atom)






































