Friday, May 4, 2018

ஆண்டவர் & கோ ... நாமக்கல்






 எனக்கு இடதுபுறம் இருப்பவர்  எம் . கே . வீ   என்று,  நாமக்கல் மக்களால் எப்போதும் அன்போடு அழைக்கப்படும்   திருமிகு . எம் . கே . வெங்கடாசலம் அவர்கள் . 

நாமக்கல் நகரத்தின் மிக மூத்த தொழில் முனைவர் . நாமக்கல் நகரத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் .

நாமக்கல் கவிஞர் விழாவில் அவரைச் சந்தித்தேன் .
முதல் சந்திப்பு .

மிகச் சிறிய உரை ஒன்றை நிகழ்த்தினார் .

உண்மையின் ஒளியோடு அமைந்த பேச்சு . 

அந்தக் கணமே , அவரைப் பாராட்டினேன் . 
எளிய புன்னகையோடு அதனை ஏற்றுக் கொண்டார் .

சில மாதங்கள் கழித்து மீண்டும் வேறொரு நிகழ்வுக்காக , நாமக்கல் போனபோது அவரது அன்பு மைந்தர் வந்தழைத்தார் ஆண்டவர் & கோ என்னும் அவர்களது நிறுவனத்திற்கு ....

 அன்று புதிதாக விற்பனைக்கு அறிமுகம் ஆன இரு சக்கர வாகனத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் .

அன்பும் , பண்பும் , தேச பக்தியும் , வணிக நேர்மையும் 
மிக்க மனிதர் எம் . கே . வீ .

இப்படி மனிதர்கள் ஊருக்கு நாலு பேர் இருந்தால் ஊர் சிறக்கும் .

எம் . கே . வீ .க்கு எனது பணிவான அன்பும் , வணக்கமும் .


படித்ததில் பிடித்தது - திரு பாலு மகேந்திரா

என் மதிப்பிற்குரிய மனிதர் திரு . பாலு மகேந்திரா . எனது சிறுகதைத்தொகுப்பு அவரது கைகளுக்குக் கிடைத்ததும் , அழைத்தார் .
ஓடிப் போனேன் .
கைகளைப் பற்றிக் கொண்டார் .
மனமாரப் பாராட்டினார் .
அகம் மிக மகிழ்ந்து போனேன் .
எவ்வளவு பெரிய ஆளுமை அவர் .

இந்த உலகை விட்டு மறைவதற்கு , சில வாரங்களுக்கு முன்பு ஒரு தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ...
என் சிறுகதைத் தொகுப்பு பற்றியும் பேசி இருக்கிறார் .
அவருக்குப் படித்ததில் பிடித்ததாம் .

எவ்வளவு படிக்கிற ஆள் அவர் என்று , அவரை அறிந்த அனைவரும் அறிவார்கள் . அவர் அறிந்த மகா சமுத்திரத்தில் , ஒரு துளி போன்ற எனது படைப்பை உயர்த்திக் காட்டினார் .

நீங்கள் இருந்தால் புன்னகையோடு நன்றி சொல்லி இருப்பேன்.
நீங்கள் இல்லையென்பதால் கண்ணீரோடு நன்றி சார் ....


https://youtu.be/VwhQclpDeWg


இந்த இணைப்பில் அவர் பேசுகிறார் .


Image result for பாலு மகேந்திரா

மறையூர் - காந்தளூரில் கேட்ட முன்னோர் கதை

கேரள மாநிலம் மறையூரில் இருந்து கிழக்காக மலைகளுக்கள் பயணம் செய்தால் வருகிறது காந்தளூர் .

கேரளாவின் ஹிமாசலம் என்று அறியப்படும் இடம் .
அங்கு வாழும் மக்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் .

காந்தளூரில் இருந்த அருவி ஒன்றில் , குளிக்கப் போகும் முன் , அங்கிருந்த நிழற் குடை ஒன்றில் வெற்றிலை மணக்கும் வாயோடு அமர்ந்திருந்தார் இந்த மனிதர் .

சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு , தமிழ் மணக்க ஆரம்பித்தது .

பழைய தமிழ் சினிமாப் பாடல்களை சிறப்பாகப் பாடினார் .

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் , அன்னியப் படையெடுப்புக்கு அஞ்சித் தமிழகத்தில் இருந்து தமது முன்னோர்கள் வந்து வாழ்ந்த பூமி என்றார் .
யாரும்  வரவும் , வாழவும் தகுதியற்ற இந்தக் காட்டினை மனிதர்கள் வாழும் இடமாக்கிய பெருமை தமது மூதாதைகளுக்கு உண்டு என்றார் .

" குளிருகிறதா " என்று கேட்டார் .
ஆம் என்றேன் .

இன்றைக்கு இப்போதே குளிர்கிறது என்றால் , முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்றார் .

எனக்கு உள்ளுக்குள் குளிர்ந்து விறைத்தது .

நாமக்கல் .. ட்ரினிட்டி பள்ளி விழாவில் ..



 ட்ரினிட்டி பள்ளி ஆண்டு விழாவில் ..
என் மனம் கவர்ந்த மருத்துவர் திரு . குழந்தைவேலு அவர்களுடன் ...

மருத்துவர் ஒரு மகத்தான மனிதர் .
உற்சாகமும் , குதூகலமும் நிறைந்தவர் .

எப்போதும் இழையோடும் நகைச்சுவை அவரது உரையாடலின் சிறப்பு .
ஆஞ்சநேயரின் பக்தர் .
ஆஞ்சநேயர் கோவிலில் பணியாற்றிய   குண்டுமணி  என்கிற பணியாளுக்கும் , ஆஞ்சநேயருக்கும் நடந்த உரையாடலை , இருவரும் சேர்ந்து விளையாடிய பகடை விளையாட்டை அவர் சொல்லியவிதம் அழகானது .

சில புராண , இதிகாச , பக்திக் கதைகளில் இருந்து பெறப்படும் நீதியும் அர்த்தமும் வியக்கவும் மலைக்கவும் வைப்பவை .

தனது மருத்துவ அனுபவங்களை அவர் சொன்னபோது ஆச்சர்யம் கொள்ள வைத்தார் . தீவிர சிகிச்சைப் பிரிவில் , தன்னோடு செல்பி எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு நோயாளியைப் பற்றி அவர் சொன்னது ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்கு ஒப்பானது .

உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டேன் . மேலும் சில அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டபிறகு .... அவரது பணிகளுக்கு இடையில், அந்தப் புத்தகத்தை எப்படி எழுத வேண்டும் என்கிற இரகசியத்தையும் அவருக்குச் சொல்லி இருக்கிறேன்.


தங்கள் நோயாளிகள் தங்கள் சொல் பேச்சு கேட்க வேண்டுமென்று மருத்துவர்கள் விரும்புவார்கள் ... அது எல்லோருக்கும் தெரியும் . மற்றவர்கள் சொன்னால் மருத்துவர்கள் கேட்பார்களா என்பது இனிமேல் தெரியும் ..

எதுவான போதும்
மருத்துவர் திரு . குழந்தைவேலு  ஒரு மகத்தான மனிதர் .
உற்சாகமும் , குதூகலமும் நிறைந்தவர் .
என் மனம் கவர்ந்த மனிதர் .


Thursday, March 22, 2018

ஓவியத்தால் நின்ற திருமணம்


ஒரே ஒரு முறை பங்கு பெற்ற ... நீயா நானா நிகழ்வில்

ஒரே ஒரு முறை நீயா நானா நிகழ்வில் பங்கு பெற்றேன் .

அதற்குப் பிறகு பங்கேற்கவில்லை .

உடன் இருப்பது மதிப்பிற்குரிய  தோழியர் ஓவியா .

Wednesday, March 21, 2018

ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்


 நாமக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் .
இரண்டாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்றார்கள் .
பயிற்சி முடிந்ததும் , நிகழ்வில் பங்கேற்ற ஒரு ஆசிரியருடன் ...

நல்ல அனுபவம் .
நிறைய ஆசிரியர்கள் பாராட்டினார்கள் .

பலர் இன்னும் தொடர்ந்து உரையாடுகிறார்கள் .
வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பற்றிக் கேட்கிறார்கள் .
வெகு சிலர் படித்த புத்தகங்கள் பற்றிப் பேசுகிறார்கள் .

ஆசிரியர்கள் அதிகம் படிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் .
வாசிப்பதை நிறுத்தி விட்ட ஒரு ஆசிரியர் , கற்பிக்கும் பணிக்குப் பொருத்தமில்லாதவர் . வேறு வேலைக்குப் போய் விடுவது , குழந்தைகளின் எதிர்காலத்திற்குப்  பேருதவி புரியும் .

அன்புத் தம்பி பரிதியுடன்


நாமக்கல் தந்த நண்பர்கள்


Thursday, March 1, 2018

பத்மபூஷண் கமல்ஹாசனுடன்

கடந்த பெப்ரவரி இருபத்தி ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெற்ற எங்கள் கட்சியின் துவக்க விழா நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம் .

மதுரைக்குப் போகும் வழியில் , விமானத்தில்  எங்கள் கட்சித் தலைவருடன்  
உரையாடிய வண்ணம் ...

Monday, February 19, 2018

கம்பன் என்றொரு மானுடன்




















கம்பனின் கவித்துவ மேன்மையை உலகுக்குச் சொல்லும் உன்னத திருப்பணியே கம்பன் கழகங்கள் ஆற்றும் பெரும்பணி .

ராஜபாளையம் கம்பன் விழாவில் அந்த அரும்பணியை அவர்களோடு இணைந்து செய்யும் நல் வாய்ப்பு வாய்த்தது .

பட்டிமன்றம் ஒன்றில் நடுவராகப் பணி ஆற்றும் பொறுப்பு கிடைக்கப் பெற்றேன் .

ஒருமனதாக எல்லோரும் பாராட்டினார்கள் .

மூன்று மணி நேரம் நடந்தது பட்டிமன்றம் .
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் .
வெறும் பார்வையாளர்கள் அல்ல .
தேர்ந்த ரசனைக் கூர்மை கொண்ட , தகுதி மிக்க மக்கள் திரள் .

கம்பன் கழகத்திற்கு நன்றி .

Thursday, February 15, 2018

காஞ்சீபுரத்தில் .....



ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலர்கள் மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது .

மாநாட்டின் ஒரு பகுதியாக கருத்தரங்கம் நடைபெற்றது .

அரங்கில் நடத்தாமல் , திறந்த வெளியில் பொதுமக்கள் கேட்க 
கருத்தரங்கு நடைபெற்றது . 

அந்த உரையின் காணொளித் தொகுப்பு ,
மாநிலமெங்கும் சுற்றுக்குப் போகிறது 
என்று நண்பர்கள் சொன்னார்கள் .

எனக்கொரு பிரதி வேண்டுமென்று கேட்டேன் . 
தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் .
காத்திருக்கிறேன் .


ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையம் 01


 ஹாங்காங் சர்வதேச விமான நிலையம்.
ஜப்பானில் இருந்து திரும்பும் போதும் , போகும்போதும்  சில மணி நேரங்கள் இங்கு காத்திருக்க வேண்டும் .
விமானநிலையம் மட்டுமல்ல ... மாபெரும் வணிக வளாகம் .
உலகின் எல்லா நாட்டு  உணவு வகைகளும் கிடைக்கும் .
தரமான , சுத்தமான , கலப்படமில்லாத உணவு ...
வாசிக்க ஏராளம் சஞ்சிகைகள் , புத்தகங்கள் .
ஒரு வாசலில் இருந்து இன்னொரு வாசலுக்கு சில கிலோமீட்டர் இடைவெளி தூரம்  இருக்கிறது .
ஆனால், அனைத்து  வசதிகளும்    செய்யப்பட்டுள்ளது  .
பயணிகளின் சுகமான  பயணத்திற்காக ...
தரையோடு நகரும் நடைபாதை , மின்தூக்கிகள் , தூய்மையான கழிப்பறைகள் , எஸ்கலேட்டர்கள் , பேட்டரி கார்கள் ... சொல்லி முடியாது ... அத்தனை தூய்மை .

1200 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் , 100 க்கும் அதிகமான விமான நிறுவனங்களின் விமானங்கள் , 220 க்கும் குறையாத விமான நிலையங்களுக்கு , பல்லாயிரக்கணக்கான பயணிகளுடன் இருபத்துநான்கு மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் விமானநிலையம் .

உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்று . அதனை நிர்வகிக்கும் மனிதர்கள் , யாராக இருந்தாலும் பாராட்டுதலுக்கு உரியவர்கள் .

இணைந்து செயலாற்றும் திறன் இன்றி , இது எதுவும் சாத்தியமில்லை .