கேரள மாநிலம் மறையூரில் இருந்து கிழக்காக மலைகளுக்கள் பயணம் செய்தால் வருகிறது காந்தளூர் .
கேரளாவின் ஹிமாசலம் என்று அறியப்படும் இடம் .
அங்கு வாழும் மக்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் .
காந்தளூரில் இருந்த அருவி ஒன்றில் , குளிக்கப் போகும் முன் , அங்கிருந்த நிழற் குடை ஒன்றில் வெற்றிலை மணக்கும் வாயோடு அமர்ந்திருந்தார் இந்த மனிதர் .
சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு , தமிழ் மணக்க ஆரம்பித்தது .
பழைய தமிழ் சினிமாப் பாடல்களை சிறப்பாகப் பாடினார் .
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் , அன்னியப் படையெடுப்புக்கு அஞ்சித் தமிழகத்தில் இருந்து தமது முன்னோர்கள் வந்து வாழ்ந்த பூமி என்றார் .
யாரும் வரவும் , வாழவும் தகுதியற்ற இந்தக் காட்டினை மனிதர்கள் வாழும் இடமாக்கிய பெருமை தமது மூதாதைகளுக்கு உண்டு என்றார் .
" குளிருகிறதா " என்று கேட்டார் .
ஆம் என்றேன் .
இன்றைக்கு இப்போதே குளிர்கிறது என்றால் , முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்றார் .
எனக்கு உள்ளுக்குள் குளிர்ந்து விறைத்தது .