என் மனம் கவர்ந்த படைப்பாளிகளில் ஒருவர் குமரகுருபரர்.அவரது நீதி நெறி விளக்கம் ஒரு ஒப்பற்ற படைப்பு . அதன் ஈற்றடிகளில் நான் மயங்கி இருக்கிறேன் .
அவரைப் பற்றியும் ,அவரது படைப்புகள் பற்றியும் நண்பர்களிடம் நிறையப்பேசி இருக்கிறேன் . ஆனால் , ஒரு இடதுசாரி சிந்தனையாளன் என்பதாக மட்டுமே என்னை அறிந்தவர்களும் , அதாக மட்டுமே என்னை அறிமுகப்படுத்த விரும்பியவர்களும் ,கம்பனை, குமரகுருபரரை, அருட்பிரகாச வள்ளலாரை, கண்ணதாசனைப் பற்றி நான் பேச மாட்டேன் என்று தாங்களே நம்பினார்கள் .விரும்பினார்கள் .
சிலர் அதை ஒரு செய்தியாகவே எல்லோருக்கும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் .
கம்பனைப் பற்றி பேசுமாறு இராஜபாளையம் கம்பன் கழகம் வாய்ப்பளித்தது. குமரகுருபரரைப் பற்றி பேசும் வாய்ப்பை திருப்பூர் தமிழ்ச் சங்கம் தந்தது.
ஒரு தனிப்பட்ட உரையாடலில் நான் குமரகுருபரரின் பாடல் ஒன்றை மேற்கோளாகச் சொன்னதும் மகிழ்ந்து போனார் திருப்பூர் தமிழ்ச் சங்க செயலாளர், ஆடிட்டர் திரு. லோகநாதன். அதன் விளைவே இந்த உரை.
திருப்பூர் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி.
https://youtu.be/ZAOVq5h6c7E
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .
https://youtu.be/ZAOVq5h6c7E
இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .