Tuesday, November 13, 2012

இல்லாதவர்க்கும் இருக்கும் தீபாவளி

தீபாவளி கொண்டாடுகிற எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
இந்த ஆண்டு தீபாவளி "இல்லாத" எல்லோருடனும் மனத்தால் நான் உடனிருக்கிறேன் .
யார் யாரைக் கொன்றதால் தீபாவளி என்பதில் நிறையக் கதைகள் புகுந்து கொண்டன .
கொல்லப்பட்டது நரகாசுரன் . சரி ...
கொன்றது யார் ?
கிருஷ்ணனா ... சத்ய பாமாவா ... சக்தியா ...

ந்தக் கதைக் குழப்பத்தை விட முக்கியமான உண்மை... தேவர்களும் , அசுரர்களும் இணைந்து மனிதர்களைக் கொல்லும் பண்டிகையாகி விட்டது இந்த இனிய தீபாவளி.

சென்னையின் பிரம்மாண்டமான துணிக்கடை வாசலில் தன் மகளிடமும் , மகனிடமும் இருக்கிற காசுக்குள் துணி எடுத்துக் கொள்ளுமாறு மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதான தாயின் வயோதிகக் கண்களும் , அதில் திரண்டிருந்த கண்ணீரும் எந்தப் பண்டிகையையும் கொண்டாட விடாது . கொண்டாட முடியாது .



பாரதி  கிருஷ்ணகுமார்

4 comments:

vimalanperali said...

கண்ணீரை பிரமாண்டங்கள் அறியாது/

puduvairamji.blogspot.com said...

கண்கள் கலங்கி சத்தமில்லாமல் விம்முகிறேன் தோழா...!

Swaminathan K said...

வயதான தாயின் வயோதிகக் கண்களும் , அதில் திரண்டிருந்தகண்ணீரும் எந்தப் பண்டிகையையும் கொண்டாட விடாது . கொண்டாட முடியாது.

உண்மை... உண்மை... உண்மை...

Anonymous said...

பொட்டில் அறைந்தாற் போன்று உள்ளது. அருமையான பதிவு!!
லோகேஷ் அரவிந்தன்

Post a Comment