Wednesday, November 14, 2012

அமைவதெல்லாம் . . . .

து ஒரு தீர்க்கதரிசனமான கவிதை .
நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கு முன்பு எழுதப்பட்டது .
" கருப்பு ஆட்சிக்கு வரும் - இன்று
 அந்தியிலும் , நாளை
  ஆப்பிரிக்காவிலும்". இந்தக் கவிதையை எழுதியதால் எனக்கு அறிமுகமான கவிஞன் தான் தங்கம் மூர்த்தி. அன்று தொடங்கிய நட்பு , துருப்பிடிக்காமல் இப்போதும் தொடர்கிறது .


டந்த  மார்ச் மாதம் ஒரு நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து,
"திருச்சியில், ரோட்டரி மாநாடு ஒன்று நடக்கிறது. நீங்க பேச வரணும்' என்றான். அவன் அழைத்ததால் ஒப்புக் கொண்டேன். அது தொடர்பாக, விழாக் குழு சார்பில் கரூரில் இருந்து ரமேஷ் பேசுவார் என்றான்.
ரமேஷும் பேசினார். எல்லாம் சரியாகத்தான் நடந்தது .


னால், விழாவுக்கு முதல் நாள் கடும் உடல் நலக் குறைவாகி ,சுருண்டு படுத்துக் கொள்ளும்படியாகி விட்டது.
திருச்சிக்குப் போக முடியவில்லை.
விழாவன்று காலை ரமேஷ் கூப்பிட்டார் . நண்பன் சதீஷ் செல்லையா தான் அவரோடு பேசினான். நான் பேசுகிற நிலையில் இல்லை.
"கடைசி நேரத்துல இப்பிடி செஞ்சா எப்பிடி ? எப்பிடியாவது அவர்
வரணும்" ... என்று கோபமாகத் துவங்கி ... " சரி.. அப்ப .. அவரு வர மாட்டாரு" என்று வெறுப்போடும், சலிப்போடும் உரையாடலை ரமேஷ் முடித்துக் கொண்டதாக சதீஷ் பிறகு சொன்னான்.
சிறிது குணமான பிறகு, என்னால் வர இயலாது போனது குறித்து ரமேஷுடன் பேச வேண்டும் என்று பத்திருபது முறை நினைத்துக் கொண்டேன்.
ஆனால் பேசவில்லை.


மூன்று மாதங்கள் கழித்து, ஒரு நாள் கரூரில் இருந்து ரமேஷே அழைத்தார். இம்முறையும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார். எவ்வளவு பெருந்தன்மை ... எவ்வளவு நம்பிக்கை.
உடல் நலத்தில் பெரிதாக மாற்றம் இல்லாத போதும் ஒப்புக்கொண்டேன்.
இந்த முறை நிகழ்ச்சிக்குப் போகிற அன்று உடம்பு படுத்தாது என்கிற மனக் கணக்கு. சண்முக வள்ளி என்றொருவர் பேசுவார் என்றார் ரமேஷ் .


ANGELS OF KARUR என்பது அந்த மகளிர் ரோட்டரி அமைப்பின் பெயர். அதன் CHAIR PERSON சண்முக வள்ளி. ரொம்ப அளவாக, செறிவாகப் பேசினார்.
நான் சொன்ன தலைப்புகளில் சிறந்ததைத் தேர்வு செய்தார்.
புகைப்படம், தன்  விவரக் குறிப்பு அனுப்பச் சொன்னார்.
பயணச் சீட்டுகள் அனுப்பினார்.  எல்லாம் முறையாக, சரியாக குறும் செய்திகள்  மூலமே செய்தார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நிகழ்ச்சி என்று முடிவு.


நான்காம் தேதி நள்ளிரவே கரூர் போய் சேர்ந்தேன், தங்கி இருந்த விடுதியில் தான் கூட்ட அரங்கு. காலை சரியாக  நிகழ்வைத் துவக்கினார்கள் . குத்து விளக்கு ஏற்றச் சொன்னார்கள். இரண்டு ஐந்து முக விளக்குகள். பத்துப் பேர்  ஆளுக்கொரு முகமாக விளக்கேற்றினோம். இரண்டாவது வரிசையில் ஒரு இடம் இருந்தது. அமர்ந்து கொண்டேன். யாரும் மேடைக்கு அழைக்கவில்லை. சந்தோசமாக இருந்தது.

ன்றைய நிகழ்வில், மொத்தம் மூவர் பேசுவதாக ஏற்பாடு. மற்ற இருவர் பேசுவதைக் கேட்க வேண்டுமென மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
இருவர்  பேச்சும் மறக்க முடியாத அனுபவங்கள் .
ஒருவர் கலா பாலசுந்தரம்  (Alert , Chennai )
மற்றொருவர் முனைவர் . நேருஜி  ( Banglore)





சேவையின் மகத்துவத்தை , அது செயல் வடிவம் பெறுகிற  இயக்கங்களின் கூட்டுணர்வை  இருவரும் எளிய சொற்களில் , பாசாங்கு இல்லாமல் பரிமாறினார்கள் . அடுத்து பேச வேண்டும்  என்பதை மறந்து கேட்ட உரைகள் . இருவரது உரைகளும் பெருங் கனவுகள் .


ன்னைப் பேச அழைத்தார்கள் . மனதில் கூடி இருந்த உற்சாகம் சொற்களில் பெருக்கெடுத்தது .வியர்வை பொங்கி வழிந்தது . சிறப்பாகப் பேசினேன் என்று  பிறகு  எல்லோரும் சொன்னார்கள் .



மிக , மிக முன்னதாக ஒத்திகை பார்க்கப்பட்ட சிறந்த நாடகம் போல அந்தக் கருத்தரங்கு  அமைந்திருந்தது . நிகழ்வுக்கான  Chair person சண்முக வள்ளி அனைத்தையும் நேர்த்தியாக , திறம்பட , வடிவமைத்திருந்தார் . அவரது ஆளுமையும் , தலைமைப் பண்பும், மதிப்பிற்கும் , பாராட்டுதலுக்கும் உரியது .



மேஷ் என்னை சாப்பிட அழைத்துப் போனார் . உணவு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தார் ரவிக்குமார் . ரமேஷ் அறிமுகம் செய்தார் . " சண்முக வள்ளி இருக்காங்கள்ள ... அவங்க வீட்டுக்காரர் ". அறிமுகம் செய்து கொண்டோம் . நன்கு , நின்று , பார்த்து உபசரித்தார் . எல்லோரையும் அதே போல பார்த்துக் கொண்டார் .
" ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் " என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் ,
"ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பக்கத்திலேயேயும்  ஒரு ஆண் துணை நிற்கிறான் " . தகுதி மிக்க பெண்கள் அதனைக்  கூடுதல் திறமையாக உயர்த்திக் கொள்கிறார்கள் .
ஆகஸ்ட் ஐந்து  மறக்க முடியாத நாளாகி விட்டது .
தங்கம் மூர்த்தி , ரமேஷ் , ரவிக்குமார் , ராஜாத்தி , என் . ஷண்முக வள்ளி என  எல்லோருக்கும் நன்றி .  ரோட்டரி மாவட்ட ஆளுநர் குமணனுக்கு நன்றி .


லைமைப் பொறுப்பாளர் சண்முக வள்ளிக்கு , அவர் அளித்த மகத்தான வாய்ப்பிற்காக எனது தனித்த நன்றி .
karur angels என்று தான் சொன்னார்கள் . ஆனால் அசுரத்தனமான ஏற்பாடுகள் .
அமைப்பாளர்கள் , அரங்கம் , பங்கேற்பாளர்கள் ,பேச்சாளர்கள் , உபசரிப்பு , உணவு , நேரக் கட்டுப்பாடு , நினைவுப் பரிசு ... என எல்லாமே அமைந்திருந்தது .
இப்படி " அமைவதெல்லாம் " அபூர்வமானது .






No comments:

Post a Comment