Tuesday, May 6, 2014

வள்ளுவனின் வானுயர் சிறப்பு



புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவியல் துறையும் , சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் , செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய "உலகமயமாக்கல் சூழலில் திருக்குறளின் பொருத்தப்பாடு குறித்த தேசியக் கருத்தரங்கில, நிறைவு விழாவில் சிறப்புரை நிகழ்த்தும் மகத்தான வாய்ப்பு அமைந்தது .

இந்தக் காலத்திற்கும் வள்ளுவன் வழி காட்டுவதை , உலகமயமாக்கல்  என்னும் சர்வதேச வர்த்தகச் சூழலை ,வள்ளுவன் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்பதை , ஒன்றரை மணி நேர உரையில் விவரித்தேன் .

விடுமுறை நாளாக இருந்தும் அரங்கம் நிறைந்து இருந்தார்கள் இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் . நன்கு ஆழ்ந்து , கவனித்துக் கேட்டார்கள் .

பேசியதை எல்லாம் இங்கு எழுத வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது ..ஆனால் ,
அதற்குரிய வாய்ப்பு இப்போது எனக்கில்லை .ஒரு சிறு நூலாக எழுதும் அளவுக்குச் செய்திகள் இருப்பதாக எல்லோரும் சொன்னதும் ஒரு காரணமாக இருக்கலாம் .

மறு வாசிப்பில் , வள்ளுவனின் வானுயர் சிறப்பை நான் உணர்ந்தேன் என்பதைச் சொன்னால் போதும் ... இப்போதைக்கு .


2 comments:

Ponra said...

உங்கள் பேச்சை கேட்டு காலம் பலவாயிற்று.
ஆயினும் விகடன் மூலம் உங்கள் குரலை கேட்க முடிந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

Post a Comment