கனத்த மழைக்குப் பின்னும் அரங்கம் நிறைந்தது .
வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க, புத்தகத் திருவிழா நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை , கேட்கும் பழக்கத்தையும் வளர்த்து வைத்திருக்கிறது .
வெகு மக்களின் கேட்கும் திறனை , ரசனையை வளர்ப்பது எளிதான செயல் அல்ல . ஒன்பது ஆண்டு கால தொடர் உழைப்பு , முயற்சி இவைகளால் விளைந்த பயன் அது .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் , மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனருமான தோழர் . ஸ்டாலின் குணசேகரன் தான் இதனை சாத்தியப் படுத்திய பெருமைக்கு உரியவர் .
மூட நம்பிக்கைகளை உருவாக்கும் ,வளர்க்கும் , பதிப்பகங்களின் புத்தகங்களை புத்தகத் திருவிழாவிற்குள் அவர் அனுமதிப்பதே இல்லை.
இது தனியே குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய செய்தி .
பொது அரங்கில் பேச அழைக்கப்படும் எவருக்கும் எந்தத் தடையும் இல்லாத சுதந்திரத்தையும் அவர் தருவார் . அதுவே நமது கடமையையும் , பொறுப்பையும் நமக்கு உணர்த்தி விடும் .
பத்து நாள் நடந்த விழாவில் இந்த ஆண்டும் எனக்குப் பேச வாய்ப்பளித்தார் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் . "நன்றின் பால் உய்ப்பது அறிவு " என்னும் பொருளில் பேசினேன் . எனது பேச்சின் வீடியோ பதிவையோ அல்லது அதன் சாரத்தையோ விரைவில் தர முயல்கிறேன் .
முன்பே இது பற்றி நான் எழுதி இருக்கிறேன் என்றபோதும் , சிறந்த சமூகக் கடமைகளைத் தொடர்ந்து பாராட்டுவதும் , பேசுவதும் கூட ஒரு தொடர்ந்த கடமை என்பதை நான் அறிந்திருக்கிறேன் .
இந்த புகைப்படங்களை எடுத்த நண்பர் நந்தா பாஸ்கருக்கு நன்றி.
புத்தகத் திருவிழா அரங்கம்
தோழர் . ஸ்டாலின் குணசேகரன் துவக்கவுரை

1 comment:
arumai sir
Post a Comment