Saturday, November 16, 2013

ஈட்டுவதற்கு எதுவுமில்லை எனக்கு ...

 ஒரு சாலை விபத்திற்குப் பிறகு , கடுமையான கால் வலியோடு இந்த விழாவிற்குப் போனேன் .


அன்பினால் அரவணைத்துப் போற்றிப் பாதுகாத்து நெகிழ வைத்தார்கள் விழா அமைப்பாளர்கள் . மனமுருக நன்றி சொல்லுகிறேன் அவர்கள் அனைவருக்கும் .


இலக்கியக் கழகத்தின் தலைவரும் , பேராசிரியருமான சகோதரி குருவம்மாள் என்னை எப்போதும் " கிருஷ்ணா " என்று தான் அழைப்பார் . என் வலி உணர்ந்து அமர்ந்து பேசுகிறாயா ? என்று சலுகை தந்தார் . அந்த அன்பை வணங்கி ஏற்றுக் கொண்டு , அமர்ந்து பேசுவது மிகுந்த சிரமம் தருமென்பதால் நின்று தான் பேசினேன் .எனக்கான நினைவுப் பரிசை அவரே எனக்குத் தந்ததும் அளவற்ற மகிழ்ச்சி தந்தது .


.
நண்பர்கள் ஆர் . எஸ் . மணி , இளங்கோ என்று எல்லோரும் பார்த்துப்பார்த்து அன்பினால் நனைத்தார்கள் . அதிலும் இளங்கோ நான் இரவு உறங்கிப் போகிற வரை , தான் ,கண் விழித்து என்னைப் பராமரித்துக் கொண்டார் . எனக்கான பரிசுக்குரிய புத்தகங்களை ஒரு குழந்தை போல ஓடி ஓடிக்  கொண்டு வந்து தந்தார் மணி .



என் சிரமங்களைக் கடந்து நான் சிறப்பாகப் பேச எல்லாம் செய்து கொடுத்தார்கள் . விழாவில் பேசியவை குறித்தும் , விழாவில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களையும் விரைவில் பதிவிடுகிறேன் .



இத்தகைய மகத்தான , மாசற்ற , எந்தப் பலனும் எதிர்பாராத இதயங்களின் அன்பைப் பெற்று இருக்கிறேன் என்பதை விடவும் , நான் ஈட்டுவதற்கு எதுவுமில்லை இந்த உலகத்தில் .

2 comments:

Geetha said...

வணக்கம் சார்.தற்போது நலமாக இருக்கின்றீர்களா?புதுகை வந்த போதும் கால் வலியால் சிரமப்பட்டீர்கள்.சமுக அக்கறை உள்ளவர்களுக்கு அக்கறையுள்ளவர்களே சுற்றமாய் அமைவார்கள்.விரைவில் குணமடைய விரும்புகின்றேன்

vimalanperali said...

உண்மைதான்/

Post a Comment