Wednesday, November 27, 2013

மகரிஷி வேதாத்திரியின் 103ஆவது பிறந்த நாள் விழா

ஏழாயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்வு அது .
ஒரு சந்தடி , கூச்சல் , குழப்பம் ஏதுமில்லை .
அரங்கத்தில் அங்கும் இங்கும் யாரும் ஓடிக்கொண்டிருக்கவில்லை .
கூட்டம் நடந்து முடிகிற வரை ஒரு கைபேசி கூட ஒலிக்கவில்லை .
எங்கும் யாரும் மொபைலில் ரகசியமாகக் கூடப் பேசவில்லை .
அரங்கம் நிறைந்த பிறகு, வந்தவர்கள் வெளியில் அமர்ந்து கொண்டார்கள் .
வழி காட்டிய தொண்டர்கள் சைகையிலேயே கூட்டத்தை ஆற்றுப் படுத்தினார்கள் .

மிகச் சரியாகக்  , குறித்த நேரத்தில் விழா துவங்கியது .
அனைவரும் தங்களுக்குத் தரப்பட்ட கால அளவுக்குள் பேசினார்கள் .
எனக்குத் தந்திருந்த ஒரு மணி நேரத்திற்குள் நானும் பேசினேன் .

மகரிஷி வேதாத்திரி சமாதானத்தின் தூதுவர் . மனித குலம் வளமுடன் வாழ பதினான்கு அடிப்படைக் கோட்பாடுகளை முன் மொழிகிறார் .
அதில் முதன்மையானது "போரில்லா நல்லுலகம் ".
அதுவே அன்றைய சிறப்புரைக்கான தலைப்பு .

உலகில் போர்களுக்கு அடிப்படைக் காரணம் பேராசை கொண்ட ஆயுத வியாபாரிகளே என்று தயக்கமின்றி சொல்லுகிறார் .
மிக நீண்ட இந்திய ஞான மரபின் அழுத்தமான, உன்னதமான தொடர்ச்சியாக மகரிஷி உரையாடுகிறார் .

இரண்டு உலக மகா யுத்தங்களின் தீமைகளையும் , இன்றும் தொடரும் போர்களின் அழிவையும் விவரித்தேன் .வல்லரசுகள் ஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவோம் என்பதன் பொருள் , அவர்களைத் தவிர வேறு எவரிடமும் ஆயுதங்கள் இருக்கலாகாது என்பது தான் , என்பதைச்



Add caption
Add caption

சான்றுகளுடன் எடுத்துரைத்தேன் .

ஐக்கிய நாடுகள் சபை, ஏகாதிபத்திய  முதலைகளின் பல்லிடுக்கில் உள்ள இறைச்சியை உண்டு வாழ்கிற ஒரு சிட்டுக்குருவி வாழ்க்கையை வாழும் அவலத்தை அவைக்குச் சொன்னேன் .

வாழ்வதற்கு இந்த உலகத்தை விட்டால் , மனிதனுக்கு வேறு இடம் இல்லை என்பதை மனிதனுக்கு உணர்த்துவது நமது கடமை என்பதை மகரிஷி வேதாத்திரியின் சொற்களில் விவரித்தேன் .பேசிய அனைத்தையும் இங்கு எழுதி விட இயலாது ,

நான் சிறப்பாகக் குறிப்பிட விரும்புவது விழாவில் பங்கேற்ற பார்வையாளர்களின் சமூக நடத்தை.
அத்தகைய ஒழுக்கம் எல்லோரும் கற்று உணர வேண்டிய மாபெரும் பண்பு .
அற்புதம் . அளவாகக் கைதட்டி , அளவாகச் சிரித்து , முழுமையாகக் கவனித்து விழாவைப் பெருமை மிக்கதாக நடத்தினார்கள் .

ஆழியாறு அறிவுத் திருக்கோவிலின் அறங்காவலர்கள் இருவர் , தலைமை அறங்காவலர் திரு எஸ் .கே .எம் . மயிலானந்தம் , திரு பொள்ளாச்சி மகாலிங்கம் ,சி .பி .ஐ முன்னாள் இயக்குனர் திரு டி.கார்த்திகேயன் ஆகிய பெருமக்கள் விழாவைச் சிறப்பித்தனர் .

அனைத்தையும் பார்த்து விட்டு , விழாவில் உரையாற்றி விட்டுப் புறப்படுகிற பொழுது மனதில் தோன்றியது இது தான் ...

வாழ்க வளமுடன்




4 comments:

rishi said...

மிக்க மகிழ்ச்சி பாரதி கிருஷ்ணகுமார். கம்யூனிச இயக்கங்களில் சுற்றியபொழுது பெற்ற அதே அறிவினை வேதாத்திரி மகரிஷியிடமும் கண்டதால் காந்தமென ஈர்க்கப்பட்டு அவரிடம் பாடம் பயின்றேன். அவரிடம் உரையாடியபொழுது கடவுள் இல்லை என்று அவர் சொன்னது என்னை மிகவும் ஈர்த்தது. அதனால் அவரிடம் காந்தமென ஈர்க்கப்பட்டு பாடம் பயின்றேன்.

The Veteran said...

பேசிய அனைத்தையும் பதிவு செய்திட இயலாதுதான். ஒலிப்பதிவு செய்து you tube-ல் பதிவேற்றுங்களேன்.நாங்களும் கேட்க உதவுங்கள்.

Editor Palanivel said...

Arivu, Anbu, Amaithi, ivai moondrum kidaitha unarvu yerpadugirathu, ARUMAI
Oru kurai nivarthi seithal sonthosam, Ungal Uraiyadal pathivum Inaikka muyarchi seiya vendugiren (mudinthal)

Unknown said...

I had an wonderful oppurtunity to hear your valuable speech delivered on that day in Youtube..I reallu surrenderred..

Post a Comment