Tuesday, December 25, 2012

கண்டனமும் , தண்டனையும்

தலைநகர் தில்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிராகக் கடும் கண்டனக் குரல்கள் .... குஜராத்தில் , வாச்சாத்தியில் இன்னும் வேறு பல இடங்களில் இதனினும் இழிவான வன் கொடுமைகள் நடந்த போதும்... அது குறித்து இப்போதும் ...  இவர்கள் எல்லோரும் இவ்வளவு பெருங் குரலில் எதுவுமே பேசியதில்லை .
எந்தக் கொடுமையும் நகரத்தில் , படித்தவர்களுக்கு நடந்தால் அதற்கான எதிர் விளைவுகள் தனிச் சிறப்புடன் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது .

என்ற போதும் , இது தொடர்பான எல்லாக் கண்டனக் குரல்களையும் நான் மதிக்கிறேன் . அப்படியாவது நமது சமூகம் குரல் எழுப்புவது பாராட்டுதலுக்குரியது .

ஆனால் கண்டனக் குரலோடு , அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பையும் எல்லா
நீதி மான்களும் சேர்த்து எழுதுகிறார்கள் .
அதில் நானும் கை நாட்டுப் போட வேண்டுமென்று என் முக நூலில் மனுக்களைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள் .

அத்தகைய மனுக்கள்
அனைத்தையும் நீக்கி இருக்கிறேன் .
குற்றத்தை விட தண்டனை குரூரமாக , அவமானகரமாக , இழிவாக இருக்கலாகாது


பாலியல் வன்கொடுமை பெண்மைக்கு எதிரானது .
மரண தண்டனை தாய்மைக்கு எதிரானது .

1 comment:

ilangovan thayumanavar said...

பாலியல் வன்கொடுமை பெண்மைக்கு எதிரானது,, மரண தண்டனை தாய்மைக்கு எதிரானது... அற்புதம் பி.கே. இந்த உயிர் வாசகம் எல்லாத்தரப்பாலும் இன்னும் வெகுகாலம் மேற்கோளாகக் கையாளப்பட்டுக் கொண்டே இருக்கப் போகிறது..

Post a Comment