எழுபது லட்சம் குழந்தைகளை ஏதுமற்ற அரசுப் பள்ளிகளில் பரிதவிக்க விடும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான குழந்தைகளைப் பள்ளிகளை விட்டு வீதிக்கு விரட்டி விடும், ஏற்றத்தாழ்வுகள் நிரம்பி வழியும், ஒரு முடை நாற்றமெடுத்தக் கல்வி முறையை வைத்து கொண்டு, சமச்சீர் கல்வியைப் பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல் விவாதிக்கும் அரசுகளும், நீதிமன்றங்களும் நிறைந்த ஒரு நாட்டில் இந்த ஆவணப் படத்தின் அவசியம் தவிர்க்கவே முடியாதது.
ஜூலை ஒன்பதாம் தேதி மாலை சென்னையில் வெளியிடுகிறோம்.
வஞ்சிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, வீதிகளுக்கு விரட்டப் பட்ட, கல்வி மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் தவிர, எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.
யார் வேண்டுமானாலும் அதிகாரத்தில் இருக்கட்டும். ஊழல் செய்யட்டும். நீதிமன்றங்களில் மனுக்களோடு மண்டியிடட்டும். எல்லாக் குழந்தைகளையும் சமமாக, தரமாக பள்ளிக் கூடங்களில் உட்கார வைத்து விட்டு எதையும் சுரண்டிப் பிழைக்கட்டும். எதையும் தின்று தீர்க்கட்டும். தான் உண்ணும் உணவு இழிவானதென்று பன்றிகளுக்கு எப்போது தெரிந்திருக்கிறது?
அழைப்பிதழ் அடுத்த வாரம் தருகிறேன். குழந்தைகளின் கல்விக்காக கூப்பிடுகிறேன். வாய்ப்பிருந்தால் வந்து விடுங்களேன்.
சந்திக்கலாம். சம்பாஷிக்கலாம். சமர் தொடங்கலாம்.

2 comments:
கல்வியின் நிதர்சனமான நிலை இதுதான்.
எது கல்வி என்பதில் இன்னும் தெளிவில்லாமல் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருக்கும் காட்சி அவலமானது.
கல்வி புகட்டப்பட்டுவிட்டதாய் வருடம்தோறும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் விட்டு வெளியேறும் லட்சக்காணக்கான மாணவர்களின் நிலை என்ன? யாருக்குத் தெரியும் அவர்கள் கொடுக்கும் உதவித்தொகை டாஸ்மாக்குக்கா வேறெதற்குமா என்று?
சுறுக்கமாய் நறுக்குத் தெறித்தாற் போல் எழுதப்பட்ட உங்களில் எழுத்துக்களில் தகிக்கிறது அனல்பறக்கும் கோபம்.
கண்டிப்பாய்க் கலந்துகொள்ள முயல்கிறேன்.
நன்றி.
Miga nalla seyal.
Post a Comment