Monday, December 27, 2021
Sunday, December 26, 2021
மொழி இலக்கியமாகும் இடம் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Friday, November 12, 2021
Sunday, November 7, 2021
களவு போன காசு | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Sunday, October 24, 2021
பரிசீலனை என்பது யாது? | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Monday, October 18, 2021
Saturday, October 9, 2021
காற்றைப் போல் இரு | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Saturday, October 2, 2021
Friday, September 10, 2021
Friday, September 3, 2021
ஊசியும் நூலும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Friday, August 27, 2021
Sunday, August 15, 2021
Friday, July 30, 2021
Monday, July 26, 2021
இயந்திரமும், மனிதனும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Wednesday, July 21, 2021
Monday, July 19, 2021
பெற்ற மகளும், பொதுச் சொத்தும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Friday, July 16, 2021
Enru thaniyum ?| Bharathi krishnakumar |என்று தணியும் ...? | பாரதி கிரு...
Monday, July 12, 2021
கப்பலோட்டிய தமிழன் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Friday, June 18, 2021
Monday, June 14, 2021
மன்னார்சாமியும் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும் ...
மன்னார்சாமியும் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும் ...
1984 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
என் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட குழு தேர்தலில் போட்டியிட்டது. ஏற்கெனவே ஏழு ஆண்டுகள் சங்கம் நடத்திக்கொண்டு இருந்தவர்களை எதிர்த்து நாங்கள் போட்டியிட்டோம்.
அவர்கள் அனைவரும் தோற்றார்கள் . பெரும்பான்மை வாக்குகள் பெற்று நாங்கள் அனைவரும் வென்றோம்.
வெற்றி பெற்ற போதிலும் சங்கப் பணிகளைத் துவக்க முடியவில்லை . ஏன் ? ஆண்டு தோறும் மார்ச் மாத முடிவில் தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்க வேண்டிய வரவு செலவு அறிக்கையை முறைப்படி சமர்ப்பிக்க முந்தைய சங்க நிர்வாகிகள் தவறி இருந்தனர் . எனவே பதிவாளர் சங்கத்தின் பதிவு எண்ணை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தார் .எனவே முறையான பதிவு எண் இல்லாததால் சட்ட ரீதியாகச் செயல்படும் உரிமையை சங்கம் இழந்திருந்தது .
நியாயமாகப் பார்த்தால் பதிவு எண்ணை இழந்த ஒரு சங்கம் தேர்தலை நடத்த முடியாது. நடத்தினாலும் செல்லாது .
ஆனால் பதிவு எண் இல்லாமலேயே அவர்கள் தேர்தலை நடத்தினார்கள் . தெரிந்தே தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன் . எனக்குத் தெரிந்ததை யாருக்கும் சொல்லாமல் வைத்துக் கொண்டேன்.உண்மையில் சட்டப்படி பார்த்தால் அந்தத் தேர்தலே செல்லாது .
செல்லாத தேர்தலில் வென்றதை செல்லுபடியாக்கும் பணிகளில் ஈடுபட்டேன் . அதே தேதியில் ஒரு பொதுக்குழு நடந்ததாகவும் , அந்தப் பொதுக்குழுவில் நாங்கள் பதினைந்து பேரும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் "முறைப்படி" ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன .
அன்று ( செப்டம்பர் 16- 1984) பங்கேற்றவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட வருகைப் பதிவேடு வேண்டுமென்று ஏற்கெனவே சங்கம் நடத்தியவர்களிடம் சென்று கேட்டேன் . ஆளுக்கொரு திசையில் என்னைப் பந்தாடினார்கள் . முந்தைய சுற்றறிக்கைகள் ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு கேட்டேன் . அலைய விட்டார்கள் . இரண்டு மாதம் இதே வேலையாக நானும் அருமை நண்பன் பழையபேட்டை மணியும் அலைந்தோம் . ஒரு துண்டுக் காகிதம் கூடத் தராமல் இழுத்தடித்தார்கள் .
எனவே எல்லாவற்றையும் புதிதாக உருவாக்குவது என்று தீர்மானித்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பணியைத் தவிர மற்றவர்களுக்கு இந்த சட்டப் பிரச்னைகள் பற்றி ஏதும் சொல்லவேயில்லை . மறைப்பது என் நோக்கம் அல்ல . எதிர்மறை விளைவுகள் வந்து விடக்கூடாது என்கிற கவனத்தில் இருந்தேன். அதனால் பகிர்ந்து கொள்ளாதிருந்தேன் .
வருகைப் பதிவேடும் முறையாகத் "தயாரிக்கப்பட்டது " பொதுக்குழு நடந்து நாங்கள் தேர்வு பெற்றது தொடர்பான அனைத்தும் தயாரிக்கப்பட்டது .
அதன்படி 16.09.1984 அன்று சாத்தூரில் நடைபெற்ற பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் பொது மாநாடு 1."பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் " என்றொரு சங்கம் தொடங்குவது எனப் பொதுக்குழு தீர்மானித்தது . 2.போட்டியிட்டவர்களில் பதினைந்து பேர் வெற்றி பெற்றதாக பொதுக்குழு அறிவித்தது.
3 . அதில் சங்கத்தை முறைப்படி பதிவு செய்ய ஏழு பேரைப் பொதுக்குழு தேர்வு செய்தது .
அனைத்தையும் சரிபார்த்து தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கு விண்ணப்பம் செய்தேன் . அப்போது மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான பதிவாளர் அலுவலகம் மதுரையில் காந்தி நகரில் இயங்கி வந்தது . பொதுக்குழு அதிகாரம் தந்திருந்த(?!) ஏழு பேரின் பெயர்களும் வரிசையாக எழுதப்பட்டு , அவர்களது கையெழுத்துடன் சங்கத்தைப் புதிதாகப் பதிவு செய்யும் மனுவும் பதிவாளருக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டது.
பதிவாளர் நாம் அனுப்பிய ஆவணங்களை ஆய்வு செய்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெயருக்கு ஒரு கடிதம் அனுப்புவார். அதை வங்கிக் கிளைக்கே அனுப்பினால் நாடகம் அம்பலமாகி விடும் என்பதால் சாத்தூரில் நம்பிக்கையான ஒரு முகவரி தேவைப்பட்டது. அருமை நண்பர் தோழர் ஜி மாரிமுத்து உதவினார் . அவரிடம் ஜுனியராகப் பணியாற்றிய வழக்கறிஞர் தோழர் சையது அகமதுவின் இல்ல முகவரியை சங்கத்தின் முகவரியாகத் தந்தேன் .
பொதுச் செயலாளர் , பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் மே/பா . வழக்கறிஞர் சையது அகமது 36, பங்களாத் தெரு சாத்தூர் என்பதே சங்கத்தின் முதல் முகவரி.
நான் தந்திருந்த முகவரிக்குப் பதிவாளர் கடிதம் அனுப்பி இருந்தார் . அதன்படி ஏற்கெனவே மனுவில் கையெழுத்துப் போட்ட , சங்கத்தின் பொதுக்குழு அங்கீகரித்த ஏழு பேரும் நேரில் ஆஜராகிப் பதிவாளர் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும். பிறகு தான் சங்கம் பதிவு செய்யப்பட்டு , பதிவு எண் வழங்கப்படும். அதற்குப் பிறகு தான் நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க முடியும். பேச்சுவார்த்தை நடத்த உரிமை வரும் . போராட்டங்கள் நடத்த முடியும். தொழில் தாவாக்களை தாக்கல் செய்ய முடியும். நீதி மன்றம் போக முடியும். மொத்தத்தில் அந்த எண்... பதிவு எண் வேண்டும்.
பதிவாளர் தனது கடிதத்தில் 1984 டிசம்பர் முதல் தேதி காலையில் பதினோரு மணிக்கு தனது அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டார்.
ஏழு பேருக்கும் முறையாக தனித்தனியாக தகவல் தரப்பட்டது . அனைவரும் விடுமுறை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது . அன்றைய சந்திப்பின் முக்கியத்துவமும் முறையாக விளக்கப்பட்டு விட்டது அன்று பணியில் இருந்தது போன்ற பதிவுகள் இருந்தால் அது பிழையாகி விடும் என்றும் எல்லோருக்கும் சொல்லப்பட்டு விட்டது .
மதுரையில் ஒரு பொது இடத்தில் சந்தித்து அங்கிருந்து பதிவாளர் அலுவலகம் போவது என்று திட்டமிட்டேன் . நேராகப் பதிவாளர் அலுவலகத்தில் சந்திப்பது என்ற யோசனை நிராகரிக்கப்பட்டது.
ஏனெனில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் பற்றி யாருடைய வாயையும் பதிவாளர் "கிண்டி " விடக்கூடாது என்பதால் சந்திப்பதற்கான வேறு பொது இடம் தேர்வு செய்யப்பட்டது.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கும் , அப்போதைய திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கும் நடுவில் அவிழ்த்துப் போடப்பட்ட நீண்ட கோவணம் போல ஒரு பாதை இருந்தது . மலமும் சிறுநீரும் கலந்து பெருகிக் கிடக்கும் அந்த நீண்ட கோவணத் தெருவின் இறுதியில் , இடது பக்கம் திரும்ப "திடீர் நகர்".
திரும்பி நூறடி நடந்ததும் வலது பக்கத்தில் மூலையில் மின்வாரியத் தொழிலாளர் சங்கம். VMS என்றழைக்கப்பட்ட தோழர் V . மீனாட்சிசுந்தரம் அங்கு பொறுப்பில் இருந்தார்
அதை ஒட்டியே வலது புறம் திரும்பினால் இருபதடி கடந்ததும் இடது பக்கத்தில் பாண்டியன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம். இரண்டு சங்கங்களும் இந்திய தொழிற்சங்க மையத்துடன்(CITU) இணைக்கப்பட்டவை.
சாலையில் இருந்து நான்கு அங்குலப் பள்ளத்தில் இருந்த அந்த அலுவலகத்தின் வாசலுக்கு நேரே அமர்ந்து இருப்பார் SM என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட தோழர் எஸ். மன்னார்சாமி . இடது கையில் எப்போதும் சிசர்ஸ் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். உரையாடும் போது உள்ளிருந்து புகை வாயில் கசிந்து கொண்டே இருக்கும். பிறருக்கு இடையூறு இல்லாமல் முகத்துக்குப் பக்கத்திலேயே புகையை ஊதிக் கொள்வதால் , கண்கள் புகைச்சல் பொறுக்க மாட்டாமல் பெரும்பாலும் சிறுத்து சுருங்கிக் கிடக்கும். அவரது கண்ணுக்கும் கண்ணாடிக்கும் நடுவில் புகை நின்று அசைந்தாடிப் பின் வெளியேறும்.
அவரைத் தெரியாத போக்குவரத்துத் தொழிலாளி இருக்க ஏலாது. அவரைத் தெரியாத அதிகாரிகளும் இருக்கவே முடியாது. நிர்வாகங்கள் தரும் குற்றப் பத்திரிக்கைகளைத் தவிடு பொடி ஆக்குவார் . கோப்புகளைப் படித்தபடி, புகை பிடித்த படி , புகை பிடித்த படி , கோப்புகளைப் படித்தபடி அவர் நிர்வாகத்திற்குத் தர வேண்டிய பதிலை சொல்லிக் கொண்டே இருப்பார். தட்டச்சில் அதை அடித்துக்கொண்டே இருப்பார்கள். தட்டச்சு ஓசை கூட நிற்கும் . நகரும். டிக்டேஷன் நிற்காது. அவர் வென்ற வழக்குகள் எல்லையற்றவை. தட்டச்சு ஓசையும் , கரகரத்த குரலும், முகம் சுற்றித் தவழும் புகையும் கொண்ட SM எப்போதும் தீவிரமான செயல்பாட்டுத் தன்மை கொண்டவராக இருந்தார். எனில் அவருக்கு நகைச்சுவை உணர்வே இருக்காதா என்று கேட்டு விடாதீர்கள் . ஒரு சிறு வறட்டு இருமலுடன் குலுங்கிக் குலுங்கி வலது கை விரல்களை மேசையில் தட்டிச் சிரிக்கும் SM ... பகடி செய்வதில் அசகாய சூரன் . மெத்தப் படித்த அதிகாரிகளின் மூடத்தனத்தை அவர் பகடி செய்து சிரிப்பதைக் கேட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
அந்த அலுவலகத்தில் தான் நாங்கள் எல்லோரும் சந்திப்பது என்று தீர்மானித்தோம்
அன்றைக்கு எனக்குப் பிறந்த நாள் . அதை யாருக்கும் சொல்லவில்லை. நான் காலையிலேயே முன்னதாகவே வந்திருந்தேன். இலக்கிய நிகழ்ச்சிகள் , பொது மேடைகள் சிலவற்றில் எனது பேச்சைக் கேட்டு இருந்ததால் SM என் மீது கொஞ்சம் பிரியமாக இருப்பார். நான் எஸ் ஏ பெருமாளின் மாணவன் நான் என்பதும் அவரது அன்புக்குக் கூடுதல் காரணம். நான் அவரைப் போலவே தீவிரமான புகை பிடிக்கிறவன் என்பதாலும் அவருக்கு என்னைப் பிடித்திருக்கலாம். பதிவுக்குப் பெயர் கொடுத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டு இருந்தார்கள். பத்து மணிக்குள் நான்கு பேர் வந்து விட்டார்கள் . மீதமுள்ள மூவருக்காக காத்திருந்தோம். இடைப்பட்ட நேரத்தில் "என்ன கூட்டம்" என்று விசாரித்தார் SM. நான் சுருக்கமாக விளக்கமாகச் சொன்னேன் . "முதல்ல நம்பரை வாங்கீருங்க ... அதுக்கு அப்புறம் தான் வாயைத் தொறக்கணும் " என்று சொல்லிவிட்டுத் தோள்கள் குலுங்கப் புகை படர்ந்து முகமெங்கும் மகிழ்ச்சி பரவச் சிரித்தார் SM.
PGBEA என்று பின்னாளில் அறியப்பட்ட Pandian Grama Bank Employees Association இன் பதிவுக்கும் மன்னார்சாமிக்கும் என்ன சம்பந்தம்....
அதைச் சொல்வதற்கு முன் ஒரு தகவலைச் சொல்லி விடுகிறேன்.
அந்தப் புகழ் பூத்த அருமைத் தோழர் SM என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட எஸ் . மன்னார்சாமி தனது 95 ஆவது வயதில் கடந்த 27 05 2021 அன்று உடல்நலக்குறைவால் மறைந்தார்.அவரது நினைவைப் போற்றுகிறேன். PGBEA சார்பில் அவருக்கு எழுந்து நின்று தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன் .
RMD / 360 என்கிற பதிவு எண் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கு கிடைக்க வழியும் வகையும் செய்தது SM...
என்ன செய்தார்...
எப்படிச் செய்தார் ...
தொடர்கிறேன்.
- பாரதி கிருஷ்ணகுமார்
"ஒரு சிறு சேமிப்புக் கணக்கு"
தொடரின் இடையில் ஒரு பகுதி .
Saturday, June 12, 2021
அக்காவுக்கு அஞ்சலி
இரண்டாயிரத்துப் பன்னிரெண்டாம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி என் உடன்பிறந்த சகோதரிகளில் ஒருவர், திருமதி கனகலட்சுமி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மூத்தவர் மதுரையில் மாரடைப்பால் காலமானார்.
என்னோடு பிறந்தவர்கள் மூவர். மூவரும் பெண்கள். மூவரும் எனக்கு மூத்தவர்கள் . கனக லட்சுமி , விஜய் லட்சுமி , சாந்த லட்சுமி என்பது அவர்களது பெயர்கள் . எங்கள் இளமைக்காலம் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்தது. நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் . ஒற்றுமையாகவே வளர்ந்தோம்.
எனக்குப் பன்னிரெண்டு வயதான போது மூத்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் மதுரையில் அலங்கார் திரையரங்கிற்கு அருகில் இருந்த ஶ்ரீ சோலை முருகன் திருமண மண்டபத்தில் நடந்தது . மாப்பிள்ளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் இருந்தார். மாதச் சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளை என்பது அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது . சும்மா சொல்லக்கூடாது ... முப்பது பவுன் போட்டு எல்லா சீரும் செய்து மிக மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்தினார் அப்பா.
அப்புறம் மற்ற இருவரும் அதே போல சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து கொண்டு போனார்கள் .
நான் தான் சரியாகப் படிக்காமல் , வீடு தங்காமல், எல்லா வகையான பழக்க வழக்கங்களும் கொண்டவனாக மாறி இருந்தேன் . என் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தான் எல்லோருக்கும் ஒவ்வாமை தந்ததே தவிர , எந்த சமூக விரோதச் செயல்களிலும் நான் ஈடுபட்டதில்லை என்பதை அனைவருமே அறிந்து வைத்திருந்தார்கள் .
எனவே, திருமணமாகிப் போன எனது சகோதரிகளின் இல்லத்திற்கு எப்போது போனாலும் நன்கு உபசரிக்கப்பட்டேன் . குறையொன்றுமில்லை.
ஆண்டுகள் கடந்து , ஆளுக்கொரு திசையில் வாழ்ந்தாலும் எங்களுக்குள் பகைமை இருந்ததில்லை .
இப்போது சில ஆண்டுகளாக அந்த உறவில் கொஞ்சம் பின்னடைவு உண்டாகி விட்டது. அது சீர்ப்படுமா அன்றி சீர்ப்படாமலே காலம் கடந்து விடுமா என்பது காலத்திற்குத் தான் தெரியும்.
சரி ... துவங்கிய இடத்திற்கு வருகிறேன் . மதுரையில் அக்கா இறந்த அன்று நான் சென்னையில் இருந்தேன். அக்காவின் கணவர் நான்கு ஆண்டுகள் முன்பே இறந்து போயிருந்தார் . அக்கா மன உறுதி நிறைந்த மனுஷி . அவர் நடத்தி வந்த நிறுவனங்களைத் தானெடுத்து நடத்தி வந்தார் . மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து மீண்டார் . மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு இயல்பாகத் திரும்பி இருந்தார் . வழக்கமான மாதாந்திர பரிசோதனைக்காக செப்டம்பர் முதல் தேதி மாலை மருத்துவமனைக்குப் போய் இருக்கிறார் . ஆட்டோவில் போய் இறங்கி நடந்து மருத்துவ மனைக்குள் போய் இருக்கிறார். மருத்துவரைப் பார்க்க பார்வையாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார். உடன் துணைக்கு வந்த பெண்ணிடத்தில் தனக்கு மயக்கம் வருவதாகச் சொல்லி ,நாற்காலியிலேயே மயங்கிச் சரிந்திருக்கிறார். பார்த்தவர்கள் பதறி மருத்துவர் வந்து பரிசோதிப்பதற்குள் உயிர் பிரிந்திருக்கிறது .
எனக்குத் தகவல் வந்தபோது இரவு 7மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் அதிகாலை விமானத்திற்கு பயணச்சீட்டு பதிவு செய்தேன். இரவெல்லாம் உறக்கமில்லை. ஏனோ ஒரு துளிக்கூட கண்ணீர் இறங்கி வரவில்லை. துக்கம் அதிகமாகி தொண்டை அடைத்தது . ஒரு மணி நேரத்தில் தொண்டை வலிக்க ஆரம்பித்தது. நிறையத் தேநீர் அருந்தினேன். நிறைய்ய நிறைய்ய புகை பிடித்தேன்.
செப்டம்பர் 2 காலையில் மதுரை வந்து பிறந்த வீட்டுக் கோடிப் புடவை எடுத்துப் போட்டேன் . எப்போதும் பார்த்ததும் குமாரு என அழைக்கும் அக்கா ஐஸ் பெட்டிக்குள் பேச்சற்று மூச்சற்றுப் படுத்திருந்தாள். பிற்பகலில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மயானம் சென்று எரியூட்டியதும் , தயாராக நின்ற வாடகைக் காரில் ஏறி கோவைக்குப் புறப்பட்டேன் .
செப்டம்பர் 2 மாலை 6.30 மணிக்கு கோயம்புத்தூர் கிக்கானி பள்ளி வளாகத்தில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் , நமது நம்பிக்கை மாத இதழும இணைந்து நடத்தும் "வல்லமை தாராயோ "
என்னும் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சியில் தனியுரை - சிறப்புரை நிகழ்த்த ஒப்புக் கொண்டிருந்தேன் . மிக மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது எனக்கும் தெரியும்.
இரண்டாம் தேதி காலை மதுரை வந்து சேர்ந்ததும் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவிடம் பேசினேன். அவர் தான் என்னை நிகழ்வுக்கு அழைத்திருந்தார். அவர் தான் நிகழ்வின் பொறுப்பாளர் . சூத்ரதாரி ... எல்லாமே...
என் இழப்பை உணர்ந்து கொண்டு "சரி ... நான் பார்த்துக் கொள்கிறேன்
நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க " என்று கனிவோடு சொன்னார் .
நான் சொன்னேன் " நன்றி முத்தையா ... ஆனாலும் இறுதிச்சடங்குகள் நடைபெறும் நேரத்தைப் பொறுத்து எதையும் முடிவு செய்யலாம். மாலை வரை இது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் . இங்கு நேரம் தள்ளிப் போனால் நான் உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். எதுவானாலும் பிற்பகல் வரை காத்திருங்கள் " என்று சொல்லி இருந்தேன்.
மதுரையில் இருந்து புறப்பட்டதும் முத்தையாவுக்குச் சொன்னேன் . "6.30 மணிக்குள் கூட்ட அரங்கிற்குள் வந்து விடுவேன் . ஒருவேளை பத்து பதினைந்து நிமிடங்கள் தாமதமானால் அதை மட்டும் சமாளித்துக் கொள்ளுங்கள் ... ஒரு வேண்டுகோள். அக்காவின் மரணச் செய்தியை நீங்கள் யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் " என்றேன். எனக்குத் தந்த வாக்குறுதியை முத்தையா காப்பாற்றினார்.
கோவை வந்து ஒரு விடுதியில் விரைந்து குளித்து உடைமாற்றி பத்து நிமிடத் தாமதத்தில் அரங்கம் போய்ச் சேர்ந்தேன் . அரங்கம் நிறைந்த கூட்டம் . ஆயிரம் பேர் அமரும் அரங்கம் .காரில் இருந்து இறங்கியதும் என் கைகளை மிக மிக இறுக்கமாக பற்றிக்கொண்டு என் கண்களைப் பார்த்தார் முத்தையா. என் கண்கள் சிவந்திருந்தன . வறண்டு போய் இருந்தன. நான் முத்தையாவின் கண்களைப் பார்த்தேன் . கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. நான் ஒரு வறண்ட , மிக மிக வறண்ட புன்னகையை அவருக்கும் அங்கு நின்ற எல்லோருக்கும் தந்தேன்.
இரண்டொரு நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கி விட்டது . வரவேற்பு அறிமுகம் மரியாதை எல்லாமே தராசில் நிறுத்தது மாதிரி நடந்து ஏழு மணிக்கு என்னைப் பேசச் சொல்லி விட்டார்கள்.
ஒன்றரை மணிநேரம் பேசினேன் . கூட்டம் என்னோடு சேர்ந்து சிரித்தது.
கைதட்டிக் கொண்டாடியது . கண் கலங்கியது. ஜீவரசம் ததும்பும் பார்வையாளர்கள் நமது எல்லா ஊற்றுக்கண்களையும் திறந்து விடுகிறார்கள் . மலை அருவி போல நம்மை விழுந்து எழுந்து புரண்டோடச் செய்கிறார்கள் .நமக்குள் கோடி மின்னல்களை வெட்டி எழுப்புகறார்கள். அன்றைக்கும் அதுதான் நடந்தது . ஆனால் மனமெங்கும் அக்கா ... அக்கா ... அக்காவோடு வாழ்ந்தது பேசியது விளையாடியது எனக் காட்சிகள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்ததை யார் அறிவார் ? கவிஞர் அபி எழுதியது போல் " பழத்தின் அழகைப் பாராட்டுவார்; உள்ளிருந்து குடையும் வண்டின் குடைச்சலை யாருணர்வார் ? "
நான் நிறைவு செய்யப் போவதை அவதானித்துக் கொண்ட நண்பர் முத்தையா ஒருவரை ஏற்கனவே மேடைக்கு அனுப்பி இருந்தார். அந்தப் பெண்மணி மேடையின் வலது புறத்தில் மறைந்து நின்றுகொண்டு நான் உரையை நிறைவு செய்யக் காத்திருந்தார். ஆனால் ,இதனால் நான் பேச்சை முடித்து விடக்கூடாது என்கிற கவனத்தோடு எல்லோரது உடல்மொழியும் இருந்தது. எனவே நிறைவாகப் பேசி நான் நிறைவு செய்தேன் .அரங்கம் நிறைந்த கரவொலி. நிறையப்பேர் எழுந்து நின்று கை தட்டிக்கொண்டு இருந்தார்கள்.
அந்தப் பெண்மணி ஒலிபெருக்கிக்கு முன் ஓடி வந்து " ஒரு முக்கிய அறிவிப்பு " என்றார்கள். நான் திகைக்க, அரங்கமே திகைக்க என் சகோதரியின் மரணச் செய்தியை அறிவித்தார்கள் . அஞ்சலி செலுத்தும் முகமாகவும் அவரது ஆன்மா அமைதி பெறவும் ,நாம் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம் என்றார்கள்.
அரங்கம் முழுவதும் அமைதியில் உறைந்தது . ஆயிரம் பேரும் மௌனமாக அஞ்சலி செலுத்தினார்கள். நான் தடுமாறி எழுந்து நின்றேன். எங்கோ மதுரையில் பிறந்து வாழ்ந்து மறைந்த அக்காவுக்குக் கோவையில் ஆயிரம் பேர் தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தார்கள்.
நேற்றில் இருந்து உள்ளுக்குள் பெருகிப் பெருகிச் சேர்ந்திருந்த கண்ணீர் சட்டெனக் கோடை மழை போலக் கொட்டியது.
அம்மா ... அம்மா ... அம்மா ...
அக்காவை எப்போதும் அக்கா என்று அழைத்ததில்லை .
Thursday, June 10, 2021
Friday, June 4, 2021
அறிந்தே செய்த பிழை
இலக்கணத்தில் மொழிக்கு முதலில் என்றால் , இந்த இந்த எழுத்துக்களோடு சொற்கள் தொடங்கும் என்பதே ஆகும். உயிர்எழுத்துக்களோடு கூட க,த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங போன்ற மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அனைவரும் அறிவோம்.
இவை தவிர உள்ள இந்த எட்டு மெய்யெழுத்துக்களும் ( ட,ண,ர,ல,ழ,ள,ற, ன ) மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இந்த எழுத்துக்களைக் குறித்துச் சொல்லும் போது மட்டும் , இவை மொழிக்கு முதலில் வரும். அதாவது ட என்னும் எழுத்து, ழ என்னும் எழுத்து என்று இந்த எழுத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது மட்டும், மொழி முதலில் இவை இடம்பெறும்.
தமிழர்கள் பிற மொழி பேசுபவர்களுடன் கலந்து பழகி வாழும் பண்பு கொண்டவர்கள். அவ்வாறு மற்றவர்களுடன் கொண்ட உறவினால் , பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப் பேச்சுத் தமிழில், தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன.
அத்தகைய பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்யெழுத்துக்களும் சில இடங்களில் மொழி முதலில் வருகின்றன.
ராமன் , லலிதா முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அவற்றை நமது மொழியின் இயல்புக்கும் இலக்கணத்திற்கும் ஏற்பத் தான் பயன்படுத்த வேண்டும்.
ர, ல போன்ற எழுத்துக்கள் மொழி முதலில் வருவதில்லை என்பதால் , அவற்றுக்கு முன் 'இ' என்னும் எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.
ராமன் ----- இராமன்
ரவி -----. இரவி
லாபம் ------ இலாபம்
லாடம் -----. இலாபம்
சில இடங்களில் இ சேர்ப்பது போலவே 'அ' என்னும் எழுத்தும் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.
சில இடங்களில் 'உ' சேர்ந்து வரும்.
ரங்கன் ---- அரங்கன்
ரோமம் ---- உரோமம். ...
இவ்வாறு பிற மொழிகளில் இருந்து பயன்படுத்தும் சொற்கள் அனைத்துமே பெயர்ச் சொற்கள் என்பதையும் நினைவில் இருத்த வேண்டும். பிற மொழிப் பெயர்ச் சொற்களைப் பயன்படுத்துவது போல, வினைச் சொற்களையும் பிற சொற்களையும் பயன்படுத்தக்கூடாது என்கிறது நமது இலக்கணம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தை மொழியாக்கம் செய்த போது , அனைத்து வடமொழிப் பெயர்களையும் , தமிழ் இலக்கண மரபிற்கு ஏற்ப மாற்றித் தான் எழுதினார் .
ராமன் ---- இராமன்
லக்ஷ்மண் ---- இலக்குவன்
ராவணன் ---- இராவணன்.
இந்த இலக்கணக் குறிப்பை நான் அறிந்திருந்த போதும், கீழவெண்மணி குறித்த எனது ஆவணப்படத்திற்கு இராமய்யாவின் குடிசை என்று பெயர் வைக்காமல் ராமய்யாவின் குடிசை என்று தான் பெயரிட்டேன்.
அறிந்தே பிழை செய்தேன் .
ஆனால், எதிர்பார்த்தது போலவே, என்மீது அன்பு கொண்ட , தமிழை முறையாகப் படித்த நண்பர் ஒருவர் , ஆவணப்படம் கையில் கிடைத்த அடுத்த நிமிடம் என்னை அழைத்தார்.
" Bk என்னது ... எடுத்ததுமே இலக்கணப் பிழை"
"என்ன பிழை "
" இராமய்யாவின் குடிசை என்று தானே இருக்க வேண்டும். ராமய்யாவின் குடிசை என்று ஏன் வைத்தீர்கள் ?"
" தெரிந்தே , அறிந்தே வைத்தேன்."
"என்ன சொல்றீங்க ? நீங்க தெரியாம செய்த பிழை என்றல்லவா ... நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
தெரிந்தே பிழை செய்யலாமா ?
தெரிந்தே செய்வது குற்றமாகாதா ? "
நான் மௌனமாக இருந்தேன்.
" பதில் சொல்லுங்க " என்றார்.
44 உயிர்கள் அநீதியாகப் பொசுக்கப்பட்ட குற்றத்தின் முன்பு , ஒரு உயிரெழுத்து இல்லாமல் போவது குற்றமா ? என் அறச் சீற்றத்தை மொழியின் மீதும் , இலக்கணத்தின் மீதும் காட்டினேன்" என்றேன்.
அவர் மௌனமாக இருந்தார்
" பதில் சொல்லுங்க " என்றேன்.
"நீங்க செஞ்சது குற்றமில்லை"என்றார்.
Friday, May 28, 2021
Sunday, May 23, 2021
Monday, May 17, 2021
..என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம்
என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம் !
- பாரதி கிருஷ்ணகுமார்.
Saturday, May 15, 2021
சபரி - பாரதி கிருஷ்ணகுமார் | Sabari | Bharathi Krishnakumar
Sunday, May 9, 2021
Saturday, May 1, 2021
ஒரு முன்னுரையும் , மேதினிக்கு மே தின வாழ்த்துகளும் ...
என்றும் தோழமையுடன்