Wednesday, December 29, 2010

நீ சொன்னது தான் நடந்தது அம்மா

பொறுப்பற்றவனாக 
பிழைக்கத் தெரியாதவனாக
கோழையாக, கஷ்டம் தெரியாதவனாக
சம்பாதிக்கத் துப்பில்லாதவனாக
வீட்டுக்குப் பயனில்லாதவனாக,
போதையில் திரிபவனாக
தன்னிலை இழந்து தெருவில் கிடப்பவனாக
சோத்துக்குச் சிங்கி அடிக்கிறவனாக
போலீஸ் வீட்டுக்குத் தேடி வருகிற புள்ளியாக
பெண் பித்தனாக
சொத்தெல்லாம் வித்து வீதிக்கு வருபவனாக
ஏமாளியாக, ஏழையாக
எந்தச் சொந்தக்காரனும் சேர்த்துக் கொள்ளாதவனாக
ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவனாக
வேலை பார்த்தும் கூலி பார்க்கத் தெரியாத மூடனாக
நான் ஆவேன் என்று
மற்றவர்கள் சொன்னதெல்லாம்
பொய்த்து
நீ சொன்னது தான் நடந்தது அம்மா.
-  பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com)

8 comments:

பாலு சத்யா said...

வணக்கம் சார். கவிதை மிக அருமை. உங்கள் ப்ளாக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, நிறைய எழுதுங்கள்.

bharathi krishnakumar said...

நன்றி பாலு.

DANIEL JAMES said...

யதார்த்தமான கவிதை வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பிறர் மீது அன்பில்லாதவர்கள் அல்லது பிறரின் குறைகளோடு நிறைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கொடுக்கும் சாபம் போன்ற வார்த்தைகள் அவை.

பிறரை நேசிக்கும்-அம்மா உட்பட-எல்லோரின் வார்த்தைகளும் மேன்மையான மனது கொண்டவை.அவை வரம் போன்றவை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல இந்த உங்கள் கவிதை.

உங்களை முதல் முறை வாசிக்கிறேன்.நிறைவாக இருக்கிறது பாரதி கிருஷ்ணகுமார்.

bharathi krishnakumar said...

நன்றி டேனியல் .....

நன்றி சுந்தர்ஜி .... சாபங்கள் நிகழாது போகட்டும் . வரங்கள் வாய்க்கட்டும் .

Anonymous said...

"நிலாக்கள் மழலைகளை தேடி பூமி வரலாம்
அம்மாக்கள் தரும் ஒரு பிடி சோற்றுக்கு "

Youre words carries a pain of love ....

"நீ சொன்னது தான் நடந்தது அம்மா"

சித்திரவீதிக்காரன் said...

மற்றவர்கள் சொன்னதெல்லாம்
பொய்த்து
நீ சொன்னது தான் நடந்தது அம்மா.\\
அற்புதமான வரிகள். பகிர்விற்கு நன்றி.
சும்மா
சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா
அம்மாவுக்கு பிறகு எல்லாமும்
-விக்ரமாதித்தன் நம்பி.

rara said...

அதென்னவோ சார்...உங்கள் எழுத்தும் உங்களோடு
பேசிக்கொண்டிருக்கும் உணர்வை உள்ளுக்குள்
சென்று உட்கார வைத்து ஆணி அடிக்கிறது...
(ஒளிப்பதிவாளர்) மணவாளன் அண்ணன் மூலம்
எனக்குக் கிடைத்த அற்புத அறிமுகம் நீங்கள்...
நன்றி மணா அண்ணனுக்கும் சேர்த்து...

Post a Comment