Friday, July 30, 2021
Monday, July 26, 2021
இயந்திரமும், மனிதனும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Wednesday, July 21, 2021
Monday, July 19, 2021
பெற்ற மகளும், பொதுச் சொத்தும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
இன்று 19 ஜூலை.
இதே நாளில் 1969 ஆம் ஆண்டு, தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கியது இந்திய அரசு. அதை நினைவு கூறுகிறோம்.
இன்று, நாட்டுடமையான நிறுவனங்கள் தனியாருக்கு விலைபேசப்படுவதை எதிர்க்கிறோம். வெறுக்கிறோம்.
விதை நெல்லை விற்றுத் திண்பது பாவம். குற்றம். தீமை.
பெற்ற மகளும், பொதுச் சொத்தும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Friday, July 16, 2021
Enru thaniyum ?| Bharathi krishnakumar |என்று தணியும் ...? | பாரதி கிரு...
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு
ஜூலை மாதம் 16ஆம் தேதி
அந்தக் கொடும் சம்பவம் நிகழ்ந்தது.
இன்றோடு பதினேழு ஆண்டுகள்.
கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில்,
பற்றி எரிந்த தீயில் 94 குழந்தைகள்
மாண்டு போயினர். 47 பெண் குழந்தைகள்.
47 ஆண் குழந்தைகள்.
அது பற்றிய ஆவணத் திரைப்படமே இது.
என்று தணியும்...? என்று இதற்குத்
தலைப்பிட்டோம். இந்த ஆவணத் திரைப்படம்
சொல்லும் செய்திகளுக்கும் மேலாக,
இதன் உருவாக்கம் பற்றிச் சொல்லுவதற்கு
என்னிடம் நிறையச் செய்திகள் இருக்கிறது.
அவைகளை அடுத்தடுத்து எழுதுகிறேன்.
பிறர் துன்பத்தில் பங்கேற்கும் மனித கடமைகளில் ஒன்றே
இந்த ஆவணப் படத்தின் உருவாக்கமும்,
அதனை ஒருவர் பார்ப்பதும் ஆகும்.
எனவே நேரம் ஒதுக்கிச் சிந்தனையில் இருந்து
இந்த ஆவணப் படத்தை முழுவதுமாகப் பாருங்கள்.
முழுவதும் பார்க்க "நேரம்" இல்லாதவர்கள்
அருள் கூர்ந்து பார்க்காமலேயே இருந்து கொள்ளுங்கள்.
இந்த ஆவணப் படத்தின் சில பகுதிகள்
மிகுந்த துன்பம் தருவதாக இருக்கும்.
சில காட்சிகளைப் பார்ப்பதற்கு இயலாது,
மனம் பரிதவித்துப் போகும்.
தங்கள் செல்வங்களை இழந்து தவிக்கும்
அந்த பெற்றோர்களின் துன்பத்தை விட,
படத்தை உருவாக்கிய, பார்த்த, பார்க்கப் போகிற
நமது துயரம் மிக மிகக் குறைவானது.
எந்த செய்தித்தாளும், தொலைக்காட்சியும்,
விசாரணைக் கமிஷன்களும், நீதிமான்களும்
சொல்லாத பேசாத எடுத்துரைக்காத உண்மையை
இந்த ஆவணத் திரைப்படம் பேசுகிறது.
உண்மைகளை அறிந்துகொள்ள மறுத்து
விலகிச் செல்வது, கொடூரக் குற்றங்களுக்குத்
துணை போவதே ஆகும்.
நடந்தது விபத்து அல்ல
விதிமீறலால் நடந்த படுகொலை.
கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி
செலுத்துகிறேன்.
சோகங்களிலேயே பெரியது புத்திர சோகம்.
அது தீராது. விலகாது. அதைப் போக்கும் வல்லமை,
எல்லாம் வல்ல காலத்திற்கும் இல்லை.
துன்புறும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி
மன்னிப்புக் கோருகிறேன்.
-பாரதி கிருஷ்ணகுமார்
Monday, July 12, 2021
கப்பலோட்டிய தமிழன் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
Subscribe to:
Posts (Atom)