Thursday, April 25, 2013

காடு போலப் பூத்துக் கிடக்கிறது . . .



என் ஆருயிர் நண்பனும் , அருமைத் தோழனுமான சென்றாயனின் கவிதை நூல் வெளியீட்டு விழா மதுரை , திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தின் முன்பாக , பெப்ரவரி மூன்றாம் தேதி  திறந்த வெளியில் நடந்தது .
நூலின் முதல் பிரதியை வெளி இட்டுப் பேசினேன் .

விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிக மிக அதிகம் . என் அன்பு நண்பன் , காமிராக் கலைஞன் மகேஷ் எடுத்துக் குவித்துக்கொண்டே இருந்தான் .  

ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இத்தனை பார்வையாளர்கள் என்கிற அதிசயம் மதுரையில் மட்டும் தான் நடக்கும் .

இரு நூற்று ஐம்பது பிரதிகள் அன்றே விற்றது என்பதும் , இன்னொமொரு அதிசயம் .

ஆனால் , இந்த இரண்டு அதிசயங்களுக்குப் பின்னே ஒரு இருபதாண்டு கால நட்பும் , உறவும் , தோழமையும் ஒரு காடு போலப் பூத்துக் கிடக்கிறது . அதை நானும் , சென்றாயனும் இணைந்து , உருவாக்கிக் காத்து வருகிறோம் .

அன்று நான் மிக சிறப்பாகப் பேசினதாக நிறைய நண்பர்கள் சொன்னார்கள் .
மனம் கனிந்து , கசிந்து ,ஒன்றில் ஈடுபடுகிறபொழுது , அது சிறப்பாக அமைவதில் வியப்பேதுமில்லை . அப்படித்தான் அந்த நாளும் , அந்த நிகழ்வும் , அதற்கு அடுத்தடுத்த நாட்களும் அமைந்தது .

"உருவி எடுக்கப்பட்ட கனவு" என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கவிதைத் தொகுதி , அந்த விழா , இது பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது எனக்கு .
பேசுவேன் இனி வரும் நாட்களில் ...


1 comment:

Muscat Mu.Basheer said...

அருமையான பதிவு !

Post a Comment