Tuesday, May 8, 2018

தர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...

 அண்மையில் தர்மபுரி தமிழ்சங்க விழாவில் பேச அழைத்தார்கள் .
தோழர் . பாலனும் , தோழர் . கரு . பாலனும் தான் அதை சாத்தியமாக்கியவர்கள் .

அங்கு சென்றபோது , அவர்களுடன் ...

இடமிருந்து வலமாக 
பாரதி கிருஷ்ணகுமார் 
நாகை பாலு 
கரு. பாலன் 

Saturday, May 5, 2018

புதியதலைமுறை விருது விழாவில் ...

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கு
நீங்கள் வரவேண்டும் என்று புதியதலைமுறையில்
இருந்து அழைத்தார்கள் .

வருகிறேன் ... ஆனால் நான் யாருக்கு விருது தரப் போகிறேன்
என்பது எனக்கு சொல்லப்பட வேண்டும் .

அதை விடப்  , பெற்றுக்கொள்ளுகிறவருக்கு ,
என்னிடம் அதை பெறுவதற்கு சம்மதமா என்றும் கேட்க வேண்டும்
என்று இரண்டு நிபந்தனைகள் விதித்தேன் .

சரி ... அரை மணி நேரம் கழித்து அழைப்பதாகச் சொன்னார்கள் .
அப்படியானால் , நம்மை அழைக்க மாட்டார்கள் என்று நம்பினேன் .

அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள்.
விருது பெறுகிறவர் இசைவு தெரிவித்து விட்டார் .
இனி நீங்கள் சொல்லுங்கள் என்றார்கள் .
யாரென்று கேட்டேன்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கு என்றார்கள் .
மகிழ்ச்சி , சம்மதம்  என்றேன் .

@ S S N INSTITUTIONS ...தமிழகத்தின் தலைசிறந்த
பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான எஸ். எஸ் . என் . 
பொறியியல் கல்லூரியில்
நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கு பெற்ற போது எடுக்கப்பட்ட படம் .Friday, May 4, 2018

42 பி எல் , எப் தெருவில் இருந்து ...

அவன் எனது நண்பன் , தோழன் .
எனது தொழிற்சங்க , கலை இலக்கியப் பணிகளைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தவன் .
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன் .
மனிதர்களை அவர்களது நிறைகளோடும் , குறைகளோடும் ஏற்றுக்கொள்ளத் தெரிந்தவன் ... மென்மையாகப் பேசுகிறவன் ....

எல்லாவற்றிற்கும் மேலாக ஓவியன் .
எங்கள் சங்க அலுவலகம் தாண்டித் தான் அவன் பணியாற்றிய பள்ளி இருந்தது .
மாலையில் பள்ளி முடிந்து , வீட்டுக்குப் போகிற வழியில், எங்கள் சங்க அலுவலகம் வந்து போவது அவன் வழக்கம் .

அப்படி ஒருமுறை வந்தபோது , என்னை அவன் வரைந்த ஓவியம் இது .
அவன் அன்பு நண்பன் அழகர்சாமி .
நாங்கள் அழகு என்று தான் எப்போதும் அழைப்போம் .

அவன் உண்மையிலும் அழகு தான் . 

த மு எ க ச நடத்திய கலை இரவொன்றில் .... கோவை பீளமேடுபாரதி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகளுடன்

 நாமக்கல் மாவட்டம் , ரெட்டிபட்டியில் இயங்கி வரும் 
பாரதி மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகிகள் திரு என் . கே . இராமசாமி , 
அவரது துணைவியார் திருமதி கே . சாரதா மணி  ஆகியோருடன் ....

அவர்கள் பரிசளித்த சிறந்த புத்தகங்களுடன் ....


ஆண்டவர் & கோ ... நாமக்கல்


 எனக்கு இடதுபுறம் இருப்பவர்  எம் . கே . வீ   என்று,  நாமக்கல் மக்களால் எப்போதும் அன்போடு அழைக்கப்படும்   திருமிகு . எம் . கே . வெங்கடாசலம் அவர்கள் . 

நாமக்கல் நகரத்தின் மிக மூத்த தொழில் முனைவர் . நாமக்கல் நகரத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் .

நாமக்கல் கவிஞர் விழாவில் அவரைச் சந்தித்தேன் .
முதல் சந்திப்பு .

மிகச் சிறிய உரை ஒன்றை நிகழ்த்தினார் .

உண்மையின் ஒளியோடு அமைந்த பேச்சு . 

அந்தக் கணமே , அவரைப் பாராட்டினேன் . 
எளிய புன்னகையோடு அதனை ஏற்றுக் கொண்டார் .

சில மாதங்கள் கழித்து மீண்டும் வேறொரு நிகழ்வுக்காக , நாமக்கல் போனபோது அவரது அன்பு மைந்தர் வந்தழைத்தார் ஆண்டவர் & கோ என்னும் அவர்களது நிறுவனத்திற்கு ....

 அன்று புதிதாக விற்பனைக்கு அறிமுகம் ஆன இரு சக்கர வாகனத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் .

அன்பும் , பண்பும் , தேச பக்தியும் , வணிக நேர்மையும் 
மிக்க மனிதர் எம் . கே . வீ .

இப்படி மனிதர்கள் ஊருக்கு நாலு பேர் இருந்தால் ஊர் சிறக்கும் .

எம் . கே . வீ .க்கு எனது பணிவான அன்பும் , வணக்கமும் .


படித்ததில் பிடித்தது - திரு பாலு மகேந்திரா

என் மதிப்பிற்குரிய மனிதர் திரு . பாலு மகேந்திரா . எனது சிறுகதைத்தொகுப்பு அவரது கைகளுக்குக் கிடைத்ததும் , அழைத்தார் .
ஓடிப் போனேன் .
கைகளைப் பற்றிக் கொண்டார் .
மனமாரப் பாராட்டினார் .
அகம் மிக மகிழ்ந்து போனேன் .
எவ்வளவு பெரிய ஆளுமை அவர் .

இந்த உலகை விட்டு மறைவதற்கு , சில வாரங்களுக்கு முன்பு ஒரு தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ...
என் சிறுகதைத் தொகுப்பு பற்றியும் பேசி இருக்கிறார் .
அவருக்குப் படித்ததில் பிடித்ததாம் .

எவ்வளவு படிக்கிற ஆள் அவர் என்று , அவரை அறிந்த அனைவரும் அறிவார்கள் . அவர் அறிந்த மகா சமுத்திரத்தில் , ஒரு துளி போன்ற எனது படைப்பை உயர்த்திக் காட்டினார் .

நீங்கள் இருந்தால் புன்னகையோடு நன்றி சொல்லி இருப்பேன்.
நீங்கள் இல்லையென்பதால் கண்ணீரோடு நன்றி சார் ....


https://youtu.be/VwhQclpDeWg


இந்த இணைப்பில் அவர் பேசுகிறார் .


Image result for பாலு மகேந்திரா

மறையூர் - காந்தளூரில் கேட்ட முன்னோர் கதை

கேரள மாநிலம் மறையூரில் இருந்து கிழக்காக மலைகளுக்கள் பயணம் செய்தால் வருகிறது காந்தளூர் .

கேரளாவின் ஹிமாசலம் என்று அறியப்படும் இடம் .
அங்கு வாழும் மக்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் .

காந்தளூரில் இருந்த அருவி ஒன்றில் , குளிக்கப் போகும் முன் , அங்கிருந்த நிழற் குடை ஒன்றில் வெற்றிலை மணக்கும் வாயோடு அமர்ந்திருந்தார் இந்த மனிதர் .

சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு , தமிழ் மணக்க ஆரம்பித்தது .

பழைய தமிழ் சினிமாப் பாடல்களை சிறப்பாகப் பாடினார் .

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் , அன்னியப் படையெடுப்புக்கு அஞ்சித் தமிழகத்தில் இருந்து தமது முன்னோர்கள் வந்து வாழ்ந்த பூமி என்றார் .
யாரும்  வரவும் , வாழவும் தகுதியற்ற இந்தக் காட்டினை மனிதர்கள் வாழும் இடமாக்கிய பெருமை தமது மூதாதைகளுக்கு உண்டு என்றார் .

" குளிருகிறதா " என்று கேட்டார் .
ஆம் என்றேன் .

இன்றைக்கு இப்போதே குளிர்கிறது என்றால் , முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்றார் .

எனக்கு உள்ளுக்குள் குளிர்ந்து விறைத்தது .

நாமக்கல் .. ட்ரினிட்டி பள்ளி விழாவில் .. ட்ரினிட்டி பள்ளி ஆண்டு விழாவில் ..
என் மனம் கவர்ந்த மருத்துவர் திரு . குழந்தைவேலு அவர்களுடன் ...

மருத்துவர் ஒரு மகத்தான மனிதர் .
உற்சாகமும் , குதூகலமும் நிறைந்தவர் .

எப்போதும் இழையோடும் நகைச்சுவை அவரது உரையாடலின் சிறப்பு .
ஆஞ்சநேயரின் பக்தர் .
ஆஞ்சநேயர் கோவிலில் பணியாற்றிய   குண்டுமணி  என்கிற பணியாளுக்கும் , ஆஞ்சநேயருக்கும் நடந்த உரையாடலை , இருவரும் சேர்ந்து விளையாடிய பகடை விளையாட்டை அவர் சொல்லியவிதம் அழகானது .

சில புராண , இதிகாச , பக்திக் கதைகளில் இருந்து பெறப்படும் நீதியும் அர்த்தமும் வியக்கவும் மலைக்கவும் வைப்பவை .

தனது மருத்துவ அனுபவங்களை அவர் சொன்னபோது ஆச்சர்யம் கொள்ள வைத்தார் . தீவிர சிகிச்சைப் பிரிவில் , தன்னோடு செல்பி எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு நோயாளியைப் பற்றி அவர் சொன்னது ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்கு ஒப்பானது .

உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டேன் . மேலும் சில அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டபிறகு .... அவரது பணிகளுக்கு இடையில், அந்தப் புத்தகத்தை எப்படி எழுத வேண்டும் என்கிற இரகசியத்தையும் அவருக்குச் சொல்லி இருக்கிறேன்.


தங்கள் நோயாளிகள் தங்கள் சொல் பேச்சு கேட்க வேண்டுமென்று மருத்துவர்கள் விரும்புவார்கள் ... அது எல்லோருக்கும் தெரியும் . மற்றவர்கள் சொன்னால் மருத்துவர்கள் கேட்பார்களா என்பது இனிமேல் தெரியும் ..

எதுவான போதும்
மருத்துவர் திரு . குழந்தைவேலு  ஒரு மகத்தான மனிதர் .
உற்சாகமும் , குதூகலமும் நிறைந்தவர் .
என் மனம் கவர்ந்த மனிதர் .