Wednesday, January 30, 2013

அரிமா சங்க மண்டல மாநாடு

கோவையில் இருந்து , எனது நண்பர் திரு . பன்னீர்செல்வம் அவர்களின் அழைப்பில் இந்த நிகழ்வுக்குப் போய் இருந்தேன் .

னதுக்கு நிறைவான நிகழ்வு .

நிகழ்வில் எடுத்த நிழற் படங்களை அனுப்பச் சொல்லி இருக்கிறேன் .

வைகள் வந்ததும் விரிவாக எழுதுவேன் .

ப்போதைக்கு ஒன்றைச் சொல்லி விட வேண்டும் .

சிறந்த பார்வையாளர்கள், சிறந்த முறையில், நாம் நமது சிந்தனைகளை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கிறார்கள் .

ங்கள் கவனம் முழுவதையும் தந்து , விருந்தினரைச் சிறப்பித்து , நிகழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டார்கள் .

நிகழ்வைத் திட்டமிட்டவர்களும் , பங்கு பெற்றவர்களும் ஒத்திசைவாக இருந்த மண்டல மாநாடு அது .


செம்மலருக்கு நன்றி 01


செம்மலருக்கு நன்றி


Thursday, January 10, 2013

மிகச் சிறந்த ஒரு நல்லுதாரணம்

இன்று  ஒரு  குரியர்  வந்தது .
திருச்சியில்  இருந்து  எஸ் . ஆர் . வீ . பள்ளியின்  முதல்வர்  அன்புச்  சகோதரர் துளசிதாசன்  அனுப்பி  இருந்தார் .
கடந்த  ஐந்தாம்  தேதி அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவிற்குப்  போயிருந்தேன் .

விழா குறித்து  சில தினசரிகளின் திருச்சிப் பதிப்பில் வெளியாகி  இருந்த  பத்திரிகைச் செய்திகளை எனக்கு அனுப்பி இருந்தார் .


நேர்த்தியான , எளிய ஆங்கிலத்தில்  ஒரு நன்றி பாராட்டும் கடிதமும்  எழுதி இருந்தார் . விழா குறித்த சுருக்கமான பதிவாகவும் அது  இருந்தது .

விழாவில் எடுக்கப்பட்ட , சில புகைப்படங்களும் முன்னதாக  மின்னஞ்சலில் வந்தது . ஆறாம் தேதி என்னைத் தொலைபேசியில் அழைத்து  நலமாக  ஊர் போய்ச் சேர்ந்தீர்களா என்றும் கேட்டுக் கொண்டார் .

அழைத்தோம் ; வந்தார்கள் ; பேசினார்கள் ; போனார்கள்; எல்லாம் முடிந்தது  என்பது தான் இங்கு பொதுவான நடைமுறை .

ஆனால் , பத்திரமாகப் போய்ச் சேர்ந்ததை உறுதி செய்து கொண்டு , நிகழ்ச்சி குறித்த பதிவுகளையும் அனுப்பி வைத்து , நன்றிக் கடிதமும் எழுதியது  சிறந்த நல்ல உதாரணம் .

அதே போல , ஐந்தாம் தேதி காலை ரயிலடிக்கு வரவேற்க  பேராசிரியர் மோகனை அனுப்பி  வைத்து  இருந்தார் . ,அவரோ ,  மறு நாள் ஊர் திரும்புகிற வரை , என்னைக் கைக் குழந்தை போலப் பார்த்துக் கொண்டார் .

நான் சில இயக்கங்களுக்கும் , அமைப்புகளுக்கும்  தலைமையேற்று  பொறுப்பு வகித்த காலத்தில் இப்படி விழுந்து விழுந்து உபசரிக்கிற , பார்த்துக் கொள்ளுகிற  பணியைக்  குறைவின்றி  செய்து  இருக்கிறேன்  என்கிற பெருமிதமும்  எனக்கு  எப்போதும்  உண்டு .

என்னளவில் , இது  எதையும் நான் எதிர் பார்ப்பதில்லை என்ற போதும் , எதிர் பார்க்காமல் இருக்கிற  மன நிலைக்கு வந்து  நீண்ட காலமாகி விட்டது  என்ற போதும் ... இந்த அன்பும் , உபசரிப்பும் ,நம்மை ரொம்பவே படுத்தி விடுகிறது .

இதைப் போலவே, மூச்சுத் திணற அன்பு காட்டும் ,மேலும் சில நண்பர்கள் எனக்கு உண்டு என்பது என் வாழ்வின் ஆசீர்வாதங்களில் ஒன்று .

அத்தகைய அன்பும் , பரிவும் தான் எல்லாத் தடைகளையும் , இடையூறுகளையும்  மீறி  ஊர் ஊராக  ஓட  வைக்கிறது . இரவு , பகலாகப் பயணம் செய்யும் ஆற்றலைக் கொடுக்கிறது . சோர்வின்றிப் பேச வைக்கிறது . . புதிது புதிதாக சிந்திக்க இயலுகிறது ... 

நன்றி துளசி ...  நன்றி நண்பர்களே...நன்றி தோழர்களே ...

இன்றைக்கும் கற்றுக் கொண்டேன்...

 அருமை நண்பர் திரு . சௌமா . ராஜரத்தினம் அவர்கள் மண்டலத் தலைவராக பொறுப்பேற்று நடத்தும் இந்த மண்டலச் சந்திப்புக்கு நான் வர வேண்டுமென்று மூன்று மாதங்கள் முன்பே, என்னோடு பேசி எனது இசைவைப் பெற்று இருந்தார் .
அவருக்கும் எனக்குமான நட்பு கருதி, நானும் மகிழ்வோடு ஒப்புக் கொண்டேன் .


சிறந்த கவிஞரும் , திரைப்படப் பாடலாசிரியரும் , நண்பருமான திரு . தமிழ் மணவாளன் அவர்களுடன் விழாவிற்குப் போவது என்று மிக முன்னதாக தீர்மானமாகி இருந்தது .


 தனது கடினமான வேலைகளுக்கு இடையில் , இன்று அழைப்பிதழைத்  தந்து நேரில் அழைக்கக்  காலையில்  வந்தார் சௌமா .
அவர் வந்ததும் , நாங்கள் சந்தித்துக் கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியே தந்தது .

எனினும் அழைப்பிதழ் தருவதற்காக மணப்பாறையில் இருந்து சென்னை வந்தது ஒரு சேர வியப்பும் , சங்கடமும் தந்தது .

அழைப்பிதழ்  அஞ்சலில் வராது  இருந்தாலும் கூட , எங்கள்  நட்பின் சிறப்பு கருதி நான் அவசியம் நிகழ்ச்சிக்குப் போயிருப்பேன் .
அதனை , அவரும் அறிவார் .

என்ற போதும் , நேரில் வந்து அழைத்தது அவரது பண்பு .
நயத்தக்க நாகரீகம் .

நான்  கற்றுக் கொள்ள  நிறைய  இருக்கிறது  என்றெனக்குத் தெரியும் .
இன்றைக்கும்  கற்றுக் கொண்டேன்  என்பது  எனக்கு  மட்டுமே  தெரியும் .

Wednesday, January 9, 2013

"அப்பத்தாவுக்கு" மேலும் ஒரு விருது

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான " அப்பத்தா " திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதைப் பெறுகிறது .
திருப்பூர் தமிழ்ச் சங்கத்திற்கும் , நடுவர் குழுவிற்கும் எனது நன்றி.
இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் .

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா 10 வெண்மணி ஆவணத் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான பாரதி கிருஷ்ண குமாரின் நன்றியுரை / ஏற்புரை

Tuesday, January 8, 2013

தோழர் . தொல். திருமாவளவனுக்கு நன்றி


விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பில் , கடந்த டிசம்பர் ஆறாம் தேதி சென்னையில் ஒரு சிறப்பான கருத்தரங்கம் நிகழ்ந்தது .

அருமை நண்பன் ஆளூர் ஷா நவாஸ் நிகழ்வைத் திறம்பட ஒருங்கிணைத்தான் .

பார்வையாளர்கள் பாங்குடன் பங்கேற்ற நிகழ்வாக அது அமைந்திருந்தது .

புரட்சியாளர் மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளும் , பாபர் மசூதி தகர்க்கப்பட்ட இருபதாம் ஆண்டு நினைவு நாளும் கருத்தரங்கத்தின் மையப் பொருளாக இருந்தது .

சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கும் , தலித்துகளுக்கும் இடையில் மேலும்  உருவாகி , வளர வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்த அமர்வாக அது திகழ்ந்தது .

இந்துத்துவ பாசிச இழிவுக்கு எதிராக, இந்த ஒற்றுமை மாபெரும் வரலாற்றுக் கடமையை நிகழ்த்தும் .

கீழ்மையான எதிரிகளை , ஆயுதங்களால் அன்றி அறிவினால் எதிர் கொள்ளும் தோழர் . தொல். திருமாவளவனுக்குநன்றியும் ,பாராட்டுதல்களும் .

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா 09
ஆவணப் படத்தின் முதல் பிரதியை வெளியிட்டு விழா நிறைவுப் பேருரை ஆற்றிய இயக்குனர் இமயம் பாரதிராஜா

வெண்மணி ஆவணப்பட வெளியீட்டு விழா 08.1

 வெண்மணி மக்களோடு களத்தில் நின்ற , மதிப்பிற்குரிய அன்புத் தோழர் ஜி . வீரைய்யனின் நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துரை

வெண்மணி ஆவணப்பட வெளியீட்டு விழா 08
 வெண்மணி மக்களோடு களத்தில் நின்ற , மதிப்பிற்குரிய அன்புத் தோழர் ஜி . வீரைய்யனின் நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துரை

வெண்மணி ஆவணப்பட வெளியீட்டு விழா 07இந்து நாளிதழின் முதன்மை ஆசிரியர் திரு என் .ராம் வழங்கும் வாழ்த்துரை

Monday, January 7, 2013

வெண்மணி ஆவணப்பட வெளியீட்டு விழா 06.1


 விழாவில் ஆய்வுரை வழங்கும்  நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளி , எழுத்துச் சித்தன் , என் இனிய நண்பன் எஸ் . ராமகிருஷ்ணன்

தினமணிக்கு நன்றி

முன்னதாக ,திருச்சி எஸ் . ஆர் . வி . பள்ளி விழாவிற்குப் போவது குறித்த அழைப்பிதழை இங்கு இட்டிருந்தேன் . விழா மிகுந்த சிறப்பாக , நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது .

மொத்தம் நான்காயிரம் மாணவர்கள் , இரண்டாயிரம் பெற்றோர்கள் கூடி இருந்த நிகழ்வு . ஐம்பது நிமிடங்கள் பேசினேன் . ஆழ்ந்த கவனத்துடனும் , ஈடுபாட்டுடனும் செவி மடுத்தார்கள் .பேசி முடித்ததும் , எல்லோரும் தாமாக எழுந்து நின்று கரவொலி எழுப்பி எனது உரையை அங்கீகரித்தார்கள் . தலை வணங்கி அதனை ஏற்றுக் கொண்டேன் .

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மிகுந்த , உயர்ந்த தரத்தில் அமைந்திருந்தது. முனைவர் பார்த்திபராஜாவின் இயக்கத்தில் உருவான நாடகமும் , தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த மௌன நாடகமும் தனிச் சிறப்புக்கும், பாராட்டுக்கும் உரியவை . இரண்டையும் காட்சிப் படுத்தி குறும் படங்களாகக்கினால் பெரும் பதிவாகும் . அவைகளின் உள்ளடக்கம் , சிறப்பு குறித்து பிறகு தனியே எழுதுவேன் என்று நினைக்கிறேன் .

எனது ஐம்பது நிமிட உரையின் சாரத்தைச் செய்தியாக்கிய தினமணிச் செய்தியாளர் திரு . ஜெயப்பிரகாஷுக்கு தனித்த நன்றி .
பிரசுரித்த தினமணிக்கும் நன்றி .

இந்த சிறந்த நாளுக்காகவும் , அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆக அந்தப் பள்ளியின் முதல்வர் சகோதரர் துளசிதாசனுக்கும் , பள்ளியின் நிர்வாகக் குழுவுக்கும் நன்றி சொல்வது எனது கடமையாகிறது .


ஏழு ஜனவரி 2013     21.30    சென்னை  

வெண்மணி ஆவணப்பட வெளியீட்டு விழா 06


 விழாவில் ஆய்வுரை வழங்கும்  நவீனத் தமிழ் இலக்கியப் படைப்பாளி , எழுத்துச் சித்தன் , என் இனிய நண்பன் எஸ் . ராமகிருஷ்ணன்

Wednesday, January 2, 2013

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா 05எனது ஆசானும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர்களின் ஒருவரும், செம்மலர் இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் வாழ்த்துரை.

நூல்கள் அறிமுக விழா


நாளை  ஈரோட்டில் எனது இரண்டு நூல்களுக்கு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது . அறிமுக உரை நிகழ்த்துகிறார் கவிஞர் முகம்மது சபி . ஏற்புரையும் , சிறப்புரையும் நிகழ்த்தும் கடமை எனக்குத் தரப்பட்டிருக்கிறது  . நிகழ்வை நடத்தும் அரிமா நண்பர்கள் எனது அன்புக்கும் , நன்றிக்கும் உரியவர்கள் . அரிமா மேனாள் ஆளுநர் நண்பர் தனபாலுக்கு தனித்த நன்றி சொல்லத்தான் வேண்டும் .

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா 04விழாவில் வாழ்த்துரை வழங்கும் தமிழ் சினிமாவின் அற்புதங்களில்  ஒருவரான கதாசிரியர் ஒளிப்பதிவாளர்  இயக்குனர் திரு.பாலு மகேந்திரா.