Saturday, February 18, 2017

அதற்குள் ஏன் குளிர்ந்து போனாய் சிவா ?

அப்போது அவன் மதுரையில் புடவைகள் விற்றுக் கொண்டிருந்தான் .
ஒரு கலை இரவு முடிந்த பிறகு, பின்தொடர்ந்து வந்தான். தன் கவிதைகளை என்னிடம் வாசிக்கக் கொடுத்தான்.
மனம் கவரும் எழுத்து .
திருச்சியில் இருந்து கவிஞர் நந்தலாலா நடத்திக் கொண்டிருந்த இதழுக்கு நானே அனுப்பி வைத்தேன்.
அது பிரசுரமானது .
அதுவே அச்சில் வந்த அவனது முதல் எழுத்து .
அந்த இதழை எடுத்துக் கொண்டு ஒரு அதிகாலையில் என்னைத் தேடி வந்தான் .
Bk என்று என் கைகளைப் பற்றிக் கொண்டான் .
அந்த வெப்பம் இன்னும் இருக்கிறதே ....
அதற்குள் ஏன் குளிர்ந்து போனாய் சிவா ?
அய்யோ .....
Image may contain: one or more people and closeup

Event organised by Development Officers Association Life Insurance Corporation of India


Image may contain: 1 person, text

05 பிப்ரவரி 2017 இரவு 7மணி பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழா

05 பிப்ரவரி 2017 காலை 10 மணி நெய்தல் அரிமா நிகழ்வு காரைக்கால்Event organised by Development Officers Association Life Insurance Corporation of India 4th February 2017 Eve 07.00 pm Chennai .தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம்

அன்புத் தோழர் சண்முகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க , தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம் தயாரித்த இந்த ஆவணத்திரைப்படத்தை இயக்கும் நல் வாய்ப்பு கிடைத்தது .
ஆவணப்படத்தின் உருவாக்கம் பற்றி தனியே ஒரு புத்தகம் எழுத வேண்டும். எழுத்துக்கான கனவுகளில் இதுவுமொன்று .
மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும்,
தோழர் சண்முகத்திற்கும்
எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் மீண்டும்
சொல்லிக் கொண்டே இருப்பேன்.

08th February 2017 Chennai 10:00 hrs
புத்தகத் திருவிழா திருப்பூர் 10.02.2017 மாலை 7 மணி உரையரங்கு . தோழர் பாலபாரதி . தோழர் பாரதி கிருஷ்ணகுமார் . வருக !


11 02 2017 புதுக்கோட்டை மாலை 6 மணிஆசானுக்கு பணிவான பிறந்தநாள் வாழ்த்துக்கள்


Image may contain: 1 person, closeup

17 02 2017 காலை 10 மணி . அரசு கலை அறிவியல் கல்லூரி , ஈரோடு . முத்தமிழ் மன்றத் தொடக்க விழா .
18 02 2017 பிற்பகல் 2 மணி அம்பேத்கர் மணி மண்டபம் அடையாறு , சென்னை18 02 2017 மாலை 6 மணி ஏவிஎம் ராஜேஸ்வரி சிற்றரங்கம் வடபழனி சென்னை


18 02 2017 பிற்பகல் 2 மணி அம்பேத்கர் மணி மண்டபம் அடையாறு , சென்னை18 02 2017 பிற்பகல் 2 மணி அம்பேத்கர் மணி மண்டபம் அடையாறு , சென்னை


18 02 2017 மாலை 6 மணி ஏவிஎம் ராஜேஸ்வரி சிற்றரங்கம் வடபழனி சென்னை

Wednesday, February 15, 2017

Tuesday, February 14, 2017

ஸ்ரீமதி ப்ரஸன்னா சுப்ரமணிய ராஜா

ஸ்ரீமதி ப்ரஸன்னா சுப்ரமணிய ராஜா

நேற்றைய தினம் மாலை இராஜபாளையம் பி.எஸ்.கே மண்டபத்தில் 'செவ்வந்தி மாலை' நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்த விகடன் குழுமம், ஆனந்தா கல்வி நிறுவனம், நாற்று இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய மகத்தான நிகழ்ச்சி. விழா ஏற்பாடு சிறப்பாக இருந்தது. பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சியோடு தொடங்கியது விழா. தலைமை திரு. சந்திரன் ராஜா அவர்கள். சிறப்பு விருந்தினர்கள் திரு. பாரதி கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர் திரு. சிவராமன் அவர்கள்.

எழுத்துகளின் மூலம் பரிட்சயப்பட்ட இருவரையும் நேரில் காணும் வாய்ப்பு. டாக்டர் அவர்கள் நாகரிக உலகில் நம் ஆரோக்கியத்தை எப்படி எல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என பட்டியலிட்டார். உடல், மனம், சுற்றுச்சூழல் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது என அறிவியல்பூர்வமாக விளக்கினார். உணவு பொருட்களில் வணிகம் புகுந்து ஆட்சி செய்வதால் ஏற்படும் கேடுகளை கூறினார். மிக அற்புதமான பேச்சு அவருடையது.
அடுத்து பாரதி கிருஷ்ணகுமார். இவர் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைக்குமா என ஆவலோடு எதிர்பார்க்க வைத்த முன்னனி பேச்சாளர். தம் பேச்சின் ஆரம்பத்திலிருந்தே மொத்த கூட்டத்தையும் கட்டிப்போட்டுவிட்டார். நகைச்சுவையாக ஆரம்பித்த அவரது பேச்சு புத்தக வாசிப்பின் அவசியத்தை இன்றைய தலைமுறையினர் இன்னும் நன்றாக உணர வேண்டும் என அழுத்தமாக எல்லோர் மனதிலும் பதியவைத்தார். கருத்தாழமான பேச்சு, உணர்வுபூர்வமான சொல்லாடல், நகைச்சுவை, கேட்போரை புரிந்துகொள்ளும் வித்தை, எளிமை என பேச்சுக்கே சிறப்பு செய்த அற்புதமான பேச்சாளர். விழா ஏற்பாட்டாளர்களுக்கு மனம் கனிந்த நன்றியும் வாழ்த்துகளும்.

"இந்தியாவில் மதச்சார்பின்மையும் சந்திக்கும் சவால்களும்"

இன்று மார்த்தாண்டம் லெட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் வைத்து மாலை 4.00மணியளவில் "இந்தியாவில் மதச்சார்பின்மையும் சந்திக்கும் சவால்களும்" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் கருத்தரங்க உரையாற்றுகிறார்.

Image may contain: 1 person