Monday, December 24, 2012

ஆசிரியர் தினம் 2012



































ருமை நண்பனும் தோழனுமான கவிஞர் முகமது சபி , தேனியில் இருந்து அலைபேசியில் பேசினார் . அவரது நண்பர் ஒருவருக்கு எனது மேடைப் பேச்சு பிடிக்குமாம் . அவர் மகள் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் , அங்கு நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் பேச நான் இசைவு தெரிவிக்க வேண்டும் என்றும் சொன்னார் .

ந்தக் கல்லூரியில் இருந்து , பேசச் சொல்லுங்கள் என்றேன் . முறைப்படி பேசினார்கள் . கல்லூரியின் பெயர் தான் எனக்கு புதுமையாக , நினைவில் நிறுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது . அப்படி ஒரு கல்லூரி இருப்பதே , பல முறை ஈரோடு போன எனக்குத் தெரியாமல் இருந்தது .

செப்டம்பர் ஐந்தாம் தேதி நிகழ்வுக்குப் போனேன் . எங்கோ தேனியில் இருந்து படிக்கப் போன மாணவியின் தந்தை வழியே , ஒரு தொடர்பு உண்டாகி , சபி சொல்லி அங்குபோனேன் .  அழைப்பிதழில் எனது  ஊர்  தேனி  என்று
போட்டிருந்தார்கள். யாதும் ஊரே என்பது இதுவாகவும் இருக்கலாம் , சிந்தனை மழை பொழிய வருவதாகவும் போட்டிருந்தது . "அப்படிதானா "என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் . ஆனால் நான் போன அன்றைக்கு, இதமான ஒரு தூறல் விழுந்தது என்னவோ உண்மை .

ல்லூரி , விழா அரங்கம் என எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது . ஒரு சிறிய குன்றின் மேல் இருப்பது போல நல்ல உயரத்தில்  இருந்தது கல்லூரி.
இப்போது நினைத்துப் பார்க்கிற தருணம் , அந்த வளாகம் மனதுக்கு ரொம்பப் பிடித்ததாக இருக்கிறது .

ன்றைக்கு , விழாவில் நடந்தவைகள் பற்றி தனியே சொல்லணும் . கோபமும் ,குதூகலமும் ஒருங்கே கலந்த நிகழ்வு அது .

No comments:

Post a Comment