Tuesday, January 9, 2018

சென்னை புத்தகக் கண்காட்சி 2017 - 03

மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் , அன்பு நண்பருமான 
"ஜனாப்" அப்துல் நாசரின் புத்தகத்தை வெளியிட்ட தருணம் ...

உடனிருப்பது ... அப்துல் நாசர் சொன்னதை எழுத்தாக்கிய அன்புச் சகோதரன் பழனி ஷஹான் ,ஆழி செந்தில்நாதன் , உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் ....

ஒரு பயணத்தின் போது கோவைக் கலவரங்கள் தொடர்பாக பல உண்மைகளை நாசர் என்னோடு பகிர்ந்து கொண்டார் . அந்த உண்மைகள் எழுதப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன் .

என் தொடர்ந்த வேண்டுகோளை ஏற்று அதனை எழுதி முடித்தார் .
நானே முதல் பிரதியை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .

என்னிடம் பகிர்ந்து கொண்ட எல்லா உண்மைகளையும் அவர் எழுதி விடவில்லை ...எல்லா உண்மைகளையும் எழுதி விடமுடியாது என்பதே நம் காலத்தின் பெரும் சாபக்கேடு .

எழுத்துச் சுதந்திரமாம் ... பிச்சைக்காரச் சுதந்திரம்