நலம். நலமே வளர்க .
எனது படைப்பு நிறுவனமான THE ROOTS, மேலும் இரண்டு சமூக அக்கறையுள்ள SPEECH, CCF என்னும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும், இந்த ஆவணப்பட குறும்படப் போட்டியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இத்தகைய போட்டிகள் ஸ்தூலமான நன்மைகளை விளைவிக்கும் ஆற்றல் கொண்டவை. புதிய படைப்பாளிகளை, படைப்புகளை இனங் காண வழி வகுக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களின் மேன்மைகளையும், சந்திக்கும் சவால்களையும் திரை மொழியில் நமக்கு அறிமுகம் செய்விக்கிறது. ஒத்த கருத்துடைய படைப்பாளிகள் சந்திக்கும் புதிய களத்தை உருவாக்குகிறது.
எனவே இந்தப் போட்டி குறித்து, நீங்கள் அறிந்த அனைத்துப் படைப்பாளிகளுக்கும் சொல்லுங்கள்.
என்றும் மாறாத அன்புடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
SPEECH - (Media Division)
சின்னபொட்டல் பட்டி, மாரனேரி அஞ்சல்,
சிவகாசி (மேற்கு ) 626 124
04562 - 221401 , 98421 44699.
mdu_speech@sify.com
No comments:
Post a Comment