Friday, November 18, 2011

மகாகவி பாரதி 129 ஆவது பிறந்த நாள் விழா - புத்தக வெளியீடு

ணக்கம்.

லம்.  நலமே வளர்க.

காகவியின் 129 ஆவது பிறந்த நாள் விழாவிற்கு உங்கள் அனைவரையும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் இரு கரம் கூப்பி அழைக்கிறோம். அன்றே இரண்டு புத்தகங்களையும் வெளியீடு செய்கிறோம்.

முதல் புத்தகம் "அருந்தவப்பன்றி சுப்பிரமணியபாரதி ".
பாரதியின் அக வாழ்வில், அவரைச் சூழ்ந்த சொல்லவொண்ணாத துயரமொன்றினை, அவர் காலமான, 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பதிவு செய்யும் அரிய புத்தகம்.
எனது எழுத்துலக வாழ்வின் முதல் புத்தகமும் ஆகும்.

ரண்டாவது புத்தகம் "அப்பத்தா" என்று தலைப்பிடப்பட்ட
எனது சிறுகதைகளின் முதல் தொகுப்பு.

விழாவில் திருவாளர்கள் பிரபஞ்சன் , தமிழருவிமணியன்,
"செம்மலர்" ஆசிரியர் எஸ். ஏ. பெருமாள் , பேரா. ச. மாடசாமி ,
எஸ். ராமகிருஷ்ணன் ,  பேரா.பாரதி புத்திரன்,
கவிஞர் நா. முத்துக்குமார் , கவிஞர் .ஜெய பாஸ்கரன்,
பேரா. பர்வீன் சுல்தானா, பாடகர் "கரிசல்" கருணாநிதி
ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பிக்க இசைவு தந்திருக்கிறார்கள் .
நீங்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

து முதல் அழைப்பு . அழைப்பிதழ் அச்சுக்குப் போயிருக்கிறது . வந்ததும் அதனையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

2011 டிசம்பர் 11 காலை 10 மணிக்கு , சென்னை - ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரெங்கன் சாலையில் உள்ள ருசியக் கலாசார மையத்தில் சந்திப்போம் . உங்கள் வருகை எங்களுக்குப் பெருமை சேர்க்கட்டும். 

ன்றும் மாறாத அன்புடன்,

பாரதி கிருஷ்ணகுமார்.

4 comments:

ஷைலஜா said...

"அருந்தவப்பன்றி சுப்பிரமணியபாரதி ?

ஏதும் எழுத்துப்பிழையா?

kashyapan said...

என்ன செய்ய! தன்னந்தனியாக தமிழகத்தைவிட்டு வேறுமாநிலத்தில் இருக்கிறெனே! அற்புதமான பெரியவர்களின் பெச்சைக் கெட்கமுடியாது தான்.பதிவிடுங்கள்.படித்துத் தெரிந்து கொள்கிறேன்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

bharathi krishnakumar said...

மதிப்பிற்குரிய காஷ்யபன் ... வணக்கம் .நலம் . நலமே வளர்க . உங்கள் ஏக்கம் தீர விழா நிகழ்வு முழுவதையும் உங்களுக்கு அனுப்பித் தருகிறேன் . முகவரி அனுப்புங்கள்

bharathi krishnakumar said...

வணக்கம் ஷைலஜா. எழுத்துப்பிழை எதுவுமில்லை . இது பாரதியின் வரலாற்றில் நேர்ந்த பிழை. புத்தக வெளியீட்டு விழாவிற்கு நீங்கள் வரத் தானே வேண்டும் .

Post a Comment