Wednesday, December 18, 2019
மகாகவி பாரதி நினைவஞ்சலி
13 செப்டம்பர் 2019
நிகழ்வில் என்னோடு பாரதி பாசறை நண்பர்கள் ....
திருவாளர்கள் மோகன் சங்கர். ஆடிட்டர் கிருஷ்ணகுமார் , ரவீந்திரன் ராமசாமி , பிரகாஷ் , மனோகரன் மற்றும் பலர் ...
தமிழ்த் துறைத்தலைவர், துறை சார்ந்த பேராசிரியர்கள் , பாரதி பாசறையின் பரிசு பெற்ற மாணவச் செல்வங்கள் ....
அரங்கை நிறைத்து பாரதியில் திளைத்த மாணவிகள் .
https://youtu.be/YEQTg8k98KM
இந்த இணைப்பில் அன்றைய உரையின் சுருக்கப்பட்ட பகுதியைக் காணலாம்.
Tuesday, December 17, 2019
கன்னியாகுமரி - ஆவணத்திரைப்படம் | இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார் | Kanniyakumari-A documentary film | Direction : Bharathi Krishnakumar
இயற்கையை அழித்து எந்த வளர்ச்சியையும எந்தக் கொம்பனாலும் உருவாக்கிவிட முடியாது. இயற்கையை அழிப்பதன் பெயர் வளர்ச்சியன்று, வீழ்ச்சி. இதுவே, இந்த ஆவணப்படம் சொல்லும் உண்மை. கன்னியாகுமரிக்கு மட்டுமல்ல, ககனம் முழுமைக்கும் பொருந்துவது.
இந்த ஆவணத் திரைப்படத்தை உருவாக்கும் நல்வாய்ப்பை எனக்குத் தந்தது, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு.தாமஸ் பிராங்கோ அவர்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றியும் எப்போதும் உரியது.
அவர் ஒரு தொழிற்சங்கத் தலைவர் மட்டும் அல்ல.
இயற்கையை நேசிப்பவர். ஆக்கபூர்வமான சிந்தனையாளர்.
செயல் திறன் மிக்கவர். கல்வியாளர். கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய மகளிர் சுயநிதிக் குழுவான "மலர்" அமைப்பை உருவாக்கிய பிதாமகர்களில் ஒருவர்.
இதன் உருவாக்கத்திற்கு உதவிய அனைத்துப் பெருமக்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் நன்றி பாராட்டுகின்றேன்.
என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.
இன்னும் மீதம் இருக்கும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் அழகை, அழகுற, என் எண்ணம் உணர்ந்து காட்சிப்படுத்திய புகைப்படக் கலைஞன் தம்பி ஏர்னெஸ்டோவிற்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
நம் காலத்தின் மிகத்தீவிரமான ஒரு சமூகப்பிரச்னையை கன்னியாகுமரி மாவட்டத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் இதை உலகம் முழுமைக்கும் பொருத்திப் பார்க்கவேண்டும். பார்க்க முடியும். மீத்தேன் , எட்டு வழிச்சாலை என இயற்கைக்கு எதிரான எல்லா அதிகார ஆடம்பரங்களுக்கும், ஆணவங்களுக்கும் இதுவே பதிலாகும். எனவே இதை எல்லோருக்கும் பார்க்கப் பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்.
இந்த ஆவணத் திரைப்படத்தை உருவாக்கும் நல்வாய்ப்பை எனக்குத் தந்தது, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு.தாமஸ் பிராங்கோ அவர்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றியும் எப்போதும் உரியது.
அவர் ஒரு தொழிற்சங்கத் தலைவர் மட்டும் அல்ல.
இயற்கையை நேசிப்பவர். ஆக்கபூர்வமான சிந்தனையாளர்.
செயல் திறன் மிக்கவர். கல்வியாளர். கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய மகளிர் சுயநிதிக் குழுவான "மலர்" அமைப்பை உருவாக்கிய பிதாமகர்களில் ஒருவர்.
இதன் உருவாக்கத்திற்கு உதவிய அனைத்துப் பெருமக்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் நன்றி பாராட்டுகின்றேன்.
என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.
இன்னும் மீதம் இருக்கும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் அழகை, அழகுற, என் எண்ணம் உணர்ந்து காட்சிப்படுத்திய புகைப்படக் கலைஞன் தம்பி ஏர்னெஸ்டோவிற்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
நம் காலத்தின் மிகத்தீவிரமான ஒரு சமூகப்பிரச்னையை கன்னியாகுமரி மாவட்டத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் இதை உலகம் முழுமைக்கும் பொருத்திப் பார்க்கவேண்டும். பார்க்க முடியும். மீத்தேன் , எட்டு வழிச்சாலை என இயற்கைக்கு எதிரான எல்லா அதிகார ஆடம்பரங்களுக்கும், ஆணவங்களுக்கும் இதுவே பதிலாகும். எனவே இதை எல்லோருக்கும் பார்க்கப் பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்.
Monday, December 16, 2019
கவிஞர் மானசீகன் எனக்களித்த பிறந்தநாள் பரிசு...
****மானசீகன்****
இந்த உலகத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் பிடித்தது, தேறுவது, நன்றென்று பெயர் பெற்றது, சிறந்தது என்று பலவகைகள் இருக்கும். அனைத்துமே கொண்டாடப்படப் வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் ஆகச் சிறந்தது என ஒன்றிருக்கும். அதை அல்லது அப்படிப்பட்ட நபரை உச்சி முகர்ந்து எப்போதும் கொண்டாடிக் கொண்டே இருப்பதுதான் தேர்ந்த ரசனையின் அடையாளம்.
அநத வகையில் ,
ஞானி- புத்தர், நபிகள்
சுய சிந்தனையாளர் - ஓஷோ
வாழ்வாசிரியன்- வள்ளுவன்
உலகத் தலைவர் - காந்தி
சீர்திருத்தவாதி- பெரியார்
இந்தியத் தலைவர் -நேரு ,விபி.சிங்
தமிழகத் தலைவர் -அண்ணா
தேர்ந்த அரசியல்வாதி- கலைஞர்
கவிஞர் - கம்பன்
புனைவாளர் - வண்ணதாசன்
எழுத்தாளர்- ஜெயமோகன்
பல்துறை வித்தகர் - சுஜாதா
இயக்குநர் - மணிரத்னம், மிஷ்கின்
பாடலாசிரியர் - கண்ணதாசன், வைரமுத்து
இசை - ராஜா, ரஹ்மான்
நடிப்பு - சிவாஜி, கமல்
பாடகர் - எஸ்பிபி, ஹரிஹரன்
பாடகி - ஜானகி, ஸ்ரேயா கோஷல்
கிரிக்கெட் ஆட்டக்காரர் -லாரா , சச்சின்
ஆளுமை - கவிக்கோ அப்துல் ரகுமான்
அமைப்பாளர் - ச.தமிழ்ச்செல்வன்
அதிகாரி - உதயச்சந்திரன் ஐஏஎஸ்
ஆசிரியர் - முனைவர். பீ.மு.மன்சூர்
அழகி - ஐஸ்
ஆகியோரே பல்வேறு துறைகளில் நான் வியக்கும் ஆகச்சிறந்தவர்கள்.
அந்த வகையில் 'மேடைப் பேச்சு' என்றால் சந்தேகமே இல்லாமல் பாரதி கிருஷ்ணகுமார்தான். தமிழ்நாட்டில் எல்லா பேச்சாளர்களுக்கும் அவர்தான் சிலபஸ். இப்போது பேசுகிறவர்களில் நான் உட்பட அவர் மீது பொறாமைப்படாத , வியக்காத, ரசிக்காத பேச்சாளர் எவரும் கிடையாது.
பேச்சின் தொடக்கத்தில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் ஒரு கதையோ . சம்பவமோ சொல்வார். அதைக் கேட்டால் சிலுவையில் ஆணி அறைந்து கொண்டிருப்பவனும் கூட ,இயேசுநாதரை அதிலிருந்து இறக்கி விட்டு மேடைக்கு முன்னே முதல் வரிசையில் அமர்ந்து கொள்வான். உண்மையில் அது வெறும் கங்கு மட்டுமே. அதற்குப் பிறகுதான் தீ எரியும். தீ என்றால் சாதாரணத் தீ அல்ல. சகலத்தையும் எரித்து விட்டு மானுடப் பேரன்பை சாம்பலாக மிச்சம் தந்து உண்ணச் சொல்லும் ஊழித் தீ.
பேச்சின் இடையிடையே வெளிப்படும் அவரது நகைச்சுவை நினைத்து நினைத்து இன்புறத்தக்கது. அது யாரையோ அறையும்.யாரிடமோ கொஞ்சும். யாரையோ நினைவு கூர வைத்து கண்ணீராகிக் கசியும்.அரிவாளோடு யாரையோ மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு சண்டியரின் வேட்டியை அவிழ்த்து விட்டு எக்களிக்கும். ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் காரியக் கோமாளிகளை எட்டி உதைக்கும்.
1996 ல் ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக படம் காட்டிக் கொண்டிருந்த நேரம். கிருஷ்ணகுமார் இப்படிப் போட்டுடைத்தார்.
' நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரியா? அப்ப ஒரு தடவையாவது சொல்லுங்க சாமி . வர்றேன் இல்ல வர்லன்னு'.23 ஆண்டுகளுக்கு முந்தைய பேச்சாளனின் தீர்க்கதரிசனம் அது.
தமிழ் சினிமாவின் போலித்தனங்களை அவரளவிற்கு நுட்பமாக அம்பலப்படுத்தியவர்கள் வெகுசிலரே(நன்மாறனும் அப்படித்தான்)எஜமான் படம் வந்தபோது அவர் ஒரு மேடையில் கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. ' பொண்டாட்டி வயித்துல இருக்கிறது புள்ளயா? தலகாணியான்னு தெரியாதவனுக்கு எப்புடிடா புள்ள பிறக்கும்?'
அவர் பேச்சில் ஓர் இடத்திலாவது கண்கள் கசியாமல் எவரும் இருக்க முடியாது. கல்நெஞ்சத்தையும் அசைத்து நகர வைக்கும் காட்டாறொன்றை அவர் நாவில் வைத்திருக்கிறார். அவருடைய குரலில் வெளிப்படும் நவரசங்களுக்காக ஆஸ்காரே தரலாம். ஆனால் அது நடிப்பல்ல. அவருடைய உணர்வுதான் குரல் வழியே நதியாகித் தளும்பி நம்மை நகர விடாமல் நனைக்கிறது.
பேச்சே கேட்காத ஓர் ஆரம்ப கட்ட ரசிகனுக்கும். ஆயிரம் மேடைகள் கண்ட சாதனைப் பேச்சாளனுக்கும் ஒரே நேரத்தில் பிடித்த பேச்சாளர் அவராக மட்டுமே இருக்க முடியும்.
பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு நேர்சந்திப்பில் (மலேசியாவில்)என்னிடம் சொன்னார்' ரஃபீக் நம் பேச்சு மேக்ரோ லெவலில் சமகாலத்தின் மாபெரும் பிரச்சினையொன்றைப் பேச வேண்டும். அதேநேரத்தில் இணைகோடாக அது மைக்ரோ லெவலில் ஒவ்வொருவரின் மன ஆழத்தையும் அன்றாட வாழ்வியல் அனுபவம் வாயிலாகத் தொட வேண்டும் '. சிறந்த மேடைப் பேச்சுக்கு Bk யின் இந்த இலக்கணம் ஒன்றே போதுமானது.
பாடலில் எஸ்பிபி மாதிரி எந்த ஏரியாவிலும் ஜெயிக்கிற பேச்சாளரும் கிருஷ்ணகுமார்தான்.பள்ளி, கல்லூரி, மக்கள் மன்றம், கோவில் திருவிழா, ரோட்டரி,அரசு ஊழியர் சங்கக் கூட்டங்கள், பிரிவு உபச்சார விழா, இலக்கியக் கூட்டங்கள், பெண்கள் மாநாடு,நவீன இலக்கிய அரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள், மதிப்பீட்டு உரைகள், மாநாடுகள், அரசியல் கூட்டங்கள், மீலாது விழாக்கள், புத்தாண்டு விழாக்கள், திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் என்று எந்த இடத்திலும் அவர் தோற்று நான் பார்த்ததே இல்லை. அவுட்டாக்கவே முடியாத அதிரடி பேட்ஸ்மேன் அவர். சிக்ஸ் அடித்தால் அவுட்டாகி விடுகிற அபாயமிருக்கிற முட்டுச் சந்திலும், தொலைதூரத்தில் எல்லைக்கோடிருக்கிற ஈடன்கார்டன் மைதானத்திலும் சதமடிக்காமல் ஓயாத மேடை அபூர்வம் அவர். மைக்கேல் பெவனுக்குள் சேவாக்கின் வெறித்தனம் புகுந்து கொண்டால் அதன் விளைவு எப்படி இருக்குமோ? அதுவே கிருஷ்ணகுமாரின் பேச்சு. ஒரே நேரத்தில் மனுஷ்யபுத்திரனையும், அப்துல் காதரையும் ,நாஞ்சில் சம்பத்தையும் ,கு. ஞானசம்மந்தனையும்,சுகி.சிவத்தை யும், அவ்வை நடராசனையும் அவரால் கண்களில் நீர் துளிர்க்க நெகிழ்வோடு ஆச்சர்யப்படுத்தி விடமுடியும். இதுவரை அங்கு பேசியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் சுவிஷேசக் கூட்டங்களில் கூட அவரால் பால்தினகரனை விட சிறப்பாகப் பேச முடியும். ஆனால் பால்தினகரன் பலமுறை அழைத்தும் வராத இயேசு, கிருஷ்ணகுமார் தன் கிசுகிசுப்பான குரலால் ' அம்மா ' பற்றி பேசினால்( அவருடைய மாஸ்டர் பீஸ் அந்த ஏரியா. பாரதியின் அம்மா ஏக்கத்தை அவர் பேசிக் கேட்க வேண்டும் )
கண்டிப்பாக குழந்தை இயேசுவாகி மரியன்னையின் முலையைப் பற்றியபடி வந்து விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது
தமுஎகசவின் இன்றைய வளர்ச்சிக்கு அவரும் ஒரு காரணம். மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் நிகழ்வில் பல நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகும் அலுப்பில்லாமல் ஒரு பெருங்கூட்டம் Bk என்கிற இரண்டெழுத்துக்காகக் காத்திருக்கும். இரவு 12 மணி அல்லது 1 மணிக்கு Bk கூட்டத்தின் நடுவிலிருந்து எழுந்து வருவார். தோல்வியே காணாத மாபெரும் தளபதி களத்தில் வீரர்களுக்கு முன்னால் புரவியில் வரும் போது எழும் ஆரவாரமாய் சபை அதிரும். அந்த மாபெரும் வரவேற்பை மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியபடியே கம்பீரமாக நடத்து போய் மைக்கை தன் உயரத்திற்குக் கீழே இறக்கி அந்தப் பெருங்கலைஞன் தன் கிசுகிசுப்பான குரலால் 'தோழர்களே ! ' என்று ஆரம்பிப்பான். அந்தப் பனி விழும் இரவில் இந்தக் குரலைக் கேட்டால் அம்பானியே ஒரு மணிநேரத்திற்கு கம்யூனிஸ்டாகியே தீர வேண்டும்.வேறு வழியில்லை. Bk யின் பேச்சு நம் உடம்பில் வெடிகுண்டைக் கட்டி விட்ட பிறகு சுற்றி வளைத்துக் கொள்கிற வனநெருப்பை ஒத்தது. வெடித்துச் சிதறாமல் எவனும், எவளும், எதுவும் தப்பி விடமுடியாது.
எங்கள் கல்லூரிக்கு வராத பேச்சாளர்களே இல்லை.மறைந்த அடிகளார் தொடங்கி பர்வீன் சுல்தானா வரை சகலரையும் அங்கு பணியாற்றிய மூட்டா சண்முகசுந்தரம், முனைவர்.சங்கிலி,முனைவர்.அப்து ல் சமது போன்ற பெரும்பேராசிரியர்கள் அங்கே அழைத்து வந்திருக்கிறார்கள் . பேச்சாளர்களின் வேடந்தாங்கல் எங்கள் கல்லூரி. அந்த வகையில் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களை வைரவிழா கண்ட எங்கள் கல்லூரி பார்த்திருக்கிறது. ஆட்சிமன்றக் குழுத்தலைவராக இருந்த மர்ஹூம் சேக்மைதீன் ஐயா அவர்கள் எல்லா நிகழ்வுகளுக்கும் வந்து விடுவார். அனைவரின் பேச்சினையும் அவர் ஐம்பது ஆண்டுகளாகக் கேட்டிருப்பார். அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். சந்திக்கும் போதெல்லாம் கைகளைப் பற்றிக் கொண்டே உற்சாகப்படுத்திப் பேசுவார். அவர் அடிக்கடி சொல்கிற விஷயம்
ஒன்றுண்டு ' வளத்தியா ஒருத்தர் வந்து பேசுனாருல. அவரு மாதிரி நீங்க பேசனும். அதான் எங்களுக்குப் பெருமை ' எத்தனையோ பேரைத் தாண்டி இரண்டே தடவைகள் வந்து போன இந்த வளந்தவர்தான் ( BK)அவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை பேச்சென்பது தகவல்களின் தொகுப்பு அல்ல. தகவல்கள்தான் புத்தகங்களிலும், கூகுளிலும் நிறைய கொட்டிக் கிடக்கின்றனவே? பேச்சென்பது மாபெரும் நிகழ்த்துக்கலை. அபூர்வமாக சிலர் பேச்சையே படைப்பாக மாற்றி விடுவார்கள். ஒவ்வொரு மேடையிலும் விரல்களாலும், குரலாலும் ஒரு புத்தகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எழுதிவிடுகிற படைப்பாளிதான் அவர். அவர் பேச்சைக் கேட்ட பிறகு நாம் பார்க்கும் வள்ளுவரும், பாரதியும், கம்பனும், மார்க்ஸூம் முற்றிலும் வேறானவர்கள்.வரலாற்றுப் புத்தகங்களில் நாம் கண்ட சிலவரிக் குறிப்புகளுக்கு ரத்தமும், சதையுமாய் உயிர் தந்து நம் முன்னால் நடமாட விட்டு, கொஞ்ச விட்டு , காதலிக்க விட்டு, சண்டையிட விட்டு , அந்தக் கனவு கலைவதற்கு முன்னால் நம் முன்னிலையிலேயே மரிக்கச் செய்து பார்ப்பவர்களைக் கதற வைக்கும் மேடை திரிமூர்த்தி அவர்.
2011 என்று நினைக்கிறேன். குற்றாலத்தில் படைப்பிலக்கியப் பயிலரங்கை இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பாக சமது சார் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகுமார்தான் நிறைவுரை. நான் தொகுப்புரை. அரங்கில் பிரபஞ்சன், எஸ்ரா, தோப்பில், நாகூர் ரூமி,நைமு இக்பால்,கவிமாமணி அப்துல் காதர்,அண்ணன் ஹாமீம் முஸ்தபா, எழுத்தாளர் களந்தை, மீரான் மைதீன், போன்ற பெரும் ஆளுமைகள் அமர்ந்திருந்தனர். கவிக்கோவும் ஸ்டைலாக கால் மேல் காலிட்டபடி அமர்ந்திருந்தார். அவர் பிறரின் பேச்சைக் கேட்பதே அபூர்வம். அவர் முன்னால் பிறர் பேசுவதென்பது பல்கலைக்கழகத்தின் முன்னால் நின்றபடி வாய்ப்பாடு விற்பதற்குச் சமம். சுலபத்தில் பிறரைப் பாராட்டி விடமாட்டார்( அவர் என்னைப் பாராட்டிய தருணங்களையெல்லாம் விருதுகளாகக் கருதி நெஞ்சில் ஃபிரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிறேன்) அன்று கிருஷ்ணகுமாரின் ஒருமணி நேர உரையை உற்றுக் கவனித்துக் கேட்டார். உண்மையில் அது பேச்சே இல்லை. கண்கட்டப்பட்ட நீதி தேவதை தன் கறுப்புத் துணியை அவிழ்த்து விட்டு பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு தனிமைப்பட்டுக் கிடக்கும் ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களை மடியில் போட்டுப் பாடிய கண்ணீர் நிரம்பிய தாலாட்டு அது. கோடானுகோடி பக்தர்களின் பிரார்த்தனையை நெஞ்சில் சுமந்தபடி சாமியாடும் தொல்குல மூதாதை ஒருவனின் கேவல் நிரம்பிய ஆராதனை அது. ஒரே ஒரு மாயக்கரத்தால் ஆயிரக்கணக்கான உடல்களை தொட்டு வருடி இதயம் மீட்டும் மாயக்கண்ணனின் ஸ்பரிசம் அது. இதுவரை உலகத்தில் பேசப்பட்ட அனைத்து உரைகளையும் காலடியில் போட்டு எக்களிக்கும் மாகாளியின் உக்கிரச் சிரிப்பு அது. அந்தப் பேச்சில் சபை உறைந்து கிடைத்தது. எப்போதும் நூறு ரன்கள் அடிப்பவன் ஒரு டெஸ்ட் மேட்சை ஒன்டேயாக்கி விளாசிய இரண்டு இரட்டைச் சதம் அது. சகலரும் அழுதார்கள். விம்மினார்கள். கேவினார்கள்.உறைந்தார்கள். குலுங்கிய முதுகுகளைக் காட்டியபடி முகத்தை மறைத்துக் கொண்டார்கள். கண்களின் வழியே கொட்டிய வரலாறை பிறரியாமல் துடைத்துக் கொண்டார்கள். அந்த தழுதழுத்த குரலை விரல்களாகப் பிடித்துக் கொண்ட மழலையாய் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். ஒரே ஆள் ஆயிரம் பேரை ஒரு தருணத்தில் சாக வைத்து உயிர்ப்பித்தான். நிகழ்வு முடிந்ததும் சகலரும் கிருஷ்ணகுமாரைச் சூழ்ந்து கொண்டார்கள். கோவிலை சுற்றி வளைத்த நதியாக சபை நுரைத்துக் கிடந்தது. அதுவரை தானும் ஒரு சிலையாகி உறைந்து கிடந்த கவிக்கோ எழுந்து வந்தார். அந்த வெள்ளை ஜிப்பா, வேட்டியைக் கண்டதும் திரிவேணி சங்கமம் வளைந்து ஒதுங்கியது. கவிக்கோ பக்கத்தில் போனார். கிருஷ்ணகுமார் சற்றே குனிந்தார். கவிக்கோவே உயரம். இது அதுக்கும் மேலே. கட்டித் தழுவி கிருஷ்ணகுமாரின் தோளில் முகம் வைத்து கவிக்கோ குலுங்கினார். சபை இரண்டாவது தடவையாக உறைந்தது. எல்லோரும் பொது இடத்தில் கவிக்கோ அழுவதை முதல்முறையாக ஆச்சர்யமும், கண்ணீரும் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தோம். உம்மா இறந்ததற்கு அழும் தந்தையைத் தேற்றும் பிரிய மகனின் கிசுகிசுப்பான குரலில் கவிக்கோவின் முதுகில் உரிமையோடு தடவிக் கொடுத்தபடி கிருஷ்ணகுமார் சொன்னார் ' அழாதீங்க வாப்பா! அழாதீங்க வாபபா'. ஒரு பேச்சாளன் தன் ரசிகர்கள் முன்னிலையிலேயே பெற்ற ஞானபீட விருது அது.
அன்பின் Bk !உங்கள் வாப்பா இப்போது இல்லை. ஆனால் கைவிடப்பட்டவர்களின் முதுகுகளை இன்னும் நீங்கள் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதை உங்கள் வாப்பா நாடி நரம்புக்குச் சமீபமாக இருந்தபடி பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்.
இந்தப் பிறந்த நாளில் நீங்கள் பல்லாண்டு வாழப் பிரார்த்தனை செய்யச் சொல்லி ஆன்மாவாகி விட்ட உங்கள் வாப்பாவின் சூட்சமக் காதுகளில் கிசுகிசுப்பான குரலில் நான் வேண்டிக் கொள்ளட்டுமா Bk?
Wednesday, December 11, 2019
Monday, July 30, 2018
Tuesday, July 10, 2018
Friday, July 6, 2018
Thursday, July 5, 2018
Sunday, June 17, 2018
Tuesday, May 8, 2018
Saturday, May 5, 2018
புதியதலைமுறை விருது விழாவில் ...
இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கு
நீங்கள் வரவேண்டும் என்று புதியதலைமுறையில்
இருந்து அழைத்தார்கள் .
வருகிறேன் ... ஆனால் நான் யாருக்கு விருது தரப் போகிறேன்
என்பது எனக்கு சொல்லப்பட வேண்டும் .
அதை விடப் , பெற்றுக்கொள்ளுகிறவருக்கு ,
என்னிடம் அதை பெறுவதற்கு சம்மதமா என்றும் கேட்க வேண்டும்
என்று இரண்டு நிபந்தனைகள் விதித்தேன் .
சரி ... அரை மணி நேரம் கழித்து அழைப்பதாகச் சொன்னார்கள் .
அப்படியானால் , நம்மை அழைக்க மாட்டார்கள் என்று நம்பினேன் .
அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள்.
விருது பெறுகிறவர் இசைவு தெரிவித்து விட்டார் .
இனி நீங்கள் சொல்லுங்கள் என்றார்கள் .
யாரென்று கேட்டேன்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கு என்றார்கள் .
மகிழ்ச்சி , சம்மதம் என்றேன் .
நீங்கள் வரவேண்டும் என்று புதியதலைமுறையில்
இருந்து அழைத்தார்கள் .
வருகிறேன் ... ஆனால் நான் யாருக்கு விருது தரப் போகிறேன்
என்பது எனக்கு சொல்லப்பட வேண்டும் .
அதை விடப் , பெற்றுக்கொள்ளுகிறவருக்கு ,
என்னிடம் அதை பெறுவதற்கு சம்மதமா என்றும் கேட்க வேண்டும்
என்று இரண்டு நிபந்தனைகள் விதித்தேன் .
சரி ... அரை மணி நேரம் கழித்து அழைப்பதாகச் சொன்னார்கள் .
அப்படியானால் , நம்மை அழைக்க மாட்டார்கள் என்று நம்பினேன் .
அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள்.
விருது பெறுகிறவர் இசைவு தெரிவித்து விட்டார் .
இனி நீங்கள் சொல்லுங்கள் என்றார்கள் .
யாரென்று கேட்டேன்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கு என்றார்கள் .
மகிழ்ச்சி , சம்மதம் என்றேன் .
Friday, May 4, 2018
42 பி எல் , எப் தெருவில் இருந்து ...
அவன் எனது நண்பன் , தோழன் .
எனது தொழிற்சங்க , கலை இலக்கியப் பணிகளைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தவன் .
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன் .
மனிதர்களை அவர்களது நிறைகளோடும் , குறைகளோடும் ஏற்றுக்கொள்ளத் தெரிந்தவன் ... மென்மையாகப் பேசுகிறவன் ....
எல்லாவற்றிற்கும் மேலாக ஓவியன் .
எங்கள் சங்க அலுவலகம் தாண்டித் தான் அவன் பணியாற்றிய பள்ளி இருந்தது .
மாலையில் பள்ளி முடிந்து , வீட்டுக்குப் போகிற வழியில், எங்கள் சங்க அலுவலகம் வந்து போவது அவன் வழக்கம் .
அப்படி ஒருமுறை வந்தபோது , என்னை அவன் வரைந்த ஓவியம் இது .
அவன் அன்பு நண்பன் அழகர்சாமி .
நாங்கள் அழகு என்று தான் எப்போதும் அழைப்போம் .
அவன் உண்மையிலும் அழகு தான் .
எனது தொழிற்சங்க , கலை இலக்கியப் பணிகளைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தவன் .
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன் .
மனிதர்களை அவர்களது நிறைகளோடும் , குறைகளோடும் ஏற்றுக்கொள்ளத் தெரிந்தவன் ... மென்மையாகப் பேசுகிறவன் ....
எல்லாவற்றிற்கும் மேலாக ஓவியன் .
எங்கள் சங்க அலுவலகம் தாண்டித் தான் அவன் பணியாற்றிய பள்ளி இருந்தது .
மாலையில் பள்ளி முடிந்து , வீட்டுக்குப் போகிற வழியில், எங்கள் சங்க அலுவலகம் வந்து போவது அவன் வழக்கம் .
அப்படி ஒருமுறை வந்தபோது , என்னை அவன் வரைந்த ஓவியம் இது .
அவன் அன்பு நண்பன் அழகர்சாமி .
நாங்கள் அழகு என்று தான் எப்போதும் அழைப்போம் .
அவன் உண்மையிலும் அழகு தான் .
ஆண்டவர் & கோ ... நாமக்கல்
எனக்கு இடதுபுறம் இருப்பவர் எம் . கே . வீ என்று, நாமக்கல் மக்களால் எப்போதும் அன்போடு அழைக்கப்படும் திருமிகு . எம் . கே . வெங்கடாசலம் அவர்கள் . நாமக்கல் நகரத்தின் மிக மூத்த தொழில் முனைவர் . நாமக்கல் நகரத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் .
நாமக்கல் கவிஞர் விழாவில் அவரைச் சந்தித்தேன் .
முதல் சந்திப்பு .
மிகச் சிறிய உரை ஒன்றை நிகழ்த்தினார் .
உண்மையின் ஒளியோடு அமைந்த பேச்சு .
அந்தக் கணமே , அவரைப் பாராட்டினேன் .
எளிய புன்னகையோடு அதனை ஏற்றுக் கொண்டார் .
சில மாதங்கள் கழித்து மீண்டும் வேறொரு நிகழ்வுக்காக , நாமக்கல் போனபோது அவரது அன்பு மைந்தர் வந்தழைத்தார் ஆண்டவர் & கோ என்னும் அவர்களது நிறுவனத்திற்கு ....
அன்பும் , பண்பும் , தேச பக்தியும் , வணிக நேர்மையும்
மிக்க மனிதர் எம் . கே . வீ .
இப்படி மனிதர்கள் ஊருக்கு நாலு பேர் இருந்தால் ஊர் சிறக்கும் .
எம் . கே . வீ .க்கு எனது பணிவான அன்பும் , வணக்கமும் .
படித்ததில் பிடித்தது - திரு பாலு மகேந்திரா
என் மதிப்பிற்குரிய மனிதர் திரு . பாலு மகேந்திரா . எனது சிறுகதைத்தொகுப்பு அவரது கைகளுக்குக் கிடைத்ததும் , அழைத்தார் .
ஓடிப் போனேன் .
கைகளைப் பற்றிக் கொண்டார் .
மனமாரப் பாராட்டினார் .
அகம் மிக மகிழ்ந்து போனேன் .
எவ்வளவு பெரிய ஆளுமை அவர் .
இந்த உலகை விட்டு மறைவதற்கு , சில வாரங்களுக்கு முன்பு ஒரு தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ...
என் சிறுகதைத் தொகுப்பு பற்றியும் பேசி இருக்கிறார் .
அவருக்குப் படித்ததில் பிடித்ததாம் .
எவ்வளவு படிக்கிற ஆள் அவர் என்று , அவரை அறிந்த அனைவரும் அறிவார்கள் . அவர் அறிந்த மகா சமுத்திரத்தில் , ஒரு துளி போன்ற எனது படைப்பை உயர்த்திக் காட்டினார் .
நீங்கள் இருந்தால் புன்னகையோடு நன்றி சொல்லி இருப்பேன்.
நீங்கள் இல்லையென்பதால் கண்ணீரோடு நன்றி சார் ....
https://youtu.be/VwhQclpDeWg
இந்த இணைப்பில் அவர் பேசுகிறார் .

ஓடிப் போனேன் .
கைகளைப் பற்றிக் கொண்டார் .
மனமாரப் பாராட்டினார் .
அகம் மிக மகிழ்ந்து போனேன் .
எவ்வளவு பெரிய ஆளுமை அவர் .
இந்த உலகை விட்டு மறைவதற்கு , சில வாரங்களுக்கு முன்பு ஒரு தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ...
என் சிறுகதைத் தொகுப்பு பற்றியும் பேசி இருக்கிறார் .
அவருக்குப் படித்ததில் பிடித்ததாம் .
எவ்வளவு படிக்கிற ஆள் அவர் என்று , அவரை அறிந்த அனைவரும் அறிவார்கள் . அவர் அறிந்த மகா சமுத்திரத்தில் , ஒரு துளி போன்ற எனது படைப்பை உயர்த்திக் காட்டினார் .
நீங்கள் இருந்தால் புன்னகையோடு நன்றி சொல்லி இருப்பேன்.
நீங்கள் இல்லையென்பதால் கண்ணீரோடு நன்றி சார் ....
https://youtu.be/VwhQclpDeWg
இந்த இணைப்பில் அவர் பேசுகிறார் .

மறையூர் - காந்தளூரில் கேட்ட முன்னோர் கதை
கேரள மாநிலம் மறையூரில் இருந்து கிழக்காக மலைகளுக்கள் பயணம் செய்தால் வருகிறது காந்தளூர் .
கேரளாவின் ஹிமாசலம் என்று அறியப்படும் இடம் .
அங்கு வாழும் மக்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் .
காந்தளூரில் இருந்த அருவி ஒன்றில் , குளிக்கப் போகும் முன் , அங்கிருந்த நிழற் குடை ஒன்றில் வெற்றிலை மணக்கும் வாயோடு அமர்ந்திருந்தார் இந்த மனிதர் .
சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு , தமிழ் மணக்க ஆரம்பித்தது .
பழைய தமிழ் சினிமாப் பாடல்களை சிறப்பாகப் பாடினார் .
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் , அன்னியப் படையெடுப்புக்கு அஞ்சித் தமிழகத்தில் இருந்து தமது முன்னோர்கள் வந்து வாழ்ந்த பூமி என்றார் .
யாரும் வரவும் , வாழவும் தகுதியற்ற இந்தக் காட்டினை மனிதர்கள் வாழும் இடமாக்கிய பெருமை தமது மூதாதைகளுக்கு உண்டு என்றார் .
" குளிருகிறதா " என்று கேட்டார் .
ஆம் என்றேன் .
இன்றைக்கு இப்போதே குளிர்கிறது என்றால் , முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்றார் .
எனக்கு உள்ளுக்குள் குளிர்ந்து விறைத்தது .
கேரளாவின் ஹிமாசலம் என்று அறியப்படும் இடம் .
அங்கு வாழும் மக்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் .
காந்தளூரில் இருந்த அருவி ஒன்றில் , குளிக்கப் போகும் முன் , அங்கிருந்த நிழற் குடை ஒன்றில் வெற்றிலை மணக்கும் வாயோடு அமர்ந்திருந்தார் இந்த மனிதர் .
சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு , தமிழ் மணக்க ஆரம்பித்தது .
பழைய தமிழ் சினிமாப் பாடல்களை சிறப்பாகப் பாடினார் .
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் , அன்னியப் படையெடுப்புக்கு அஞ்சித் தமிழகத்தில் இருந்து தமது முன்னோர்கள் வந்து வாழ்ந்த பூமி என்றார் .
யாரும் வரவும் , வாழவும் தகுதியற்ற இந்தக் காட்டினை மனிதர்கள் வாழும் இடமாக்கிய பெருமை தமது மூதாதைகளுக்கு உண்டு என்றார் .
" குளிருகிறதா " என்று கேட்டார் .
ஆம் என்றேன் .
இன்றைக்கு இப்போதே குளிர்கிறது என்றால் , முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்றார் .
எனக்கு உள்ளுக்குள் குளிர்ந்து விறைத்தது .
நாமக்கல் .. ட்ரினிட்டி பள்ளி விழாவில் ..
ட்ரினிட்டி பள்ளி ஆண்டு விழாவில் ..
என் மனம் கவர்ந்த மருத்துவர் திரு . குழந்தைவேலு அவர்களுடன் ...
மருத்துவர் ஒரு மகத்தான மனிதர் .
உற்சாகமும் , குதூகலமும் நிறைந்தவர் .
எப்போதும் இழையோடும் நகைச்சுவை அவரது உரையாடலின் சிறப்பு .
ஆஞ்சநேயரின் பக்தர் .
ஆஞ்சநேயர் கோவிலில் பணியாற்றிய குண்டுமணி என்கிற பணியாளுக்கும் , ஆஞ்சநேயருக்கும் நடந்த உரையாடலை , இருவரும் சேர்ந்து விளையாடிய பகடை விளையாட்டை அவர் சொல்லியவிதம் அழகானது .
சில புராண , இதிகாச , பக்திக் கதைகளில் இருந்து பெறப்படும் நீதியும் அர்த்தமும் வியக்கவும் மலைக்கவும் வைப்பவை .
தனது மருத்துவ அனுபவங்களை அவர் சொன்னபோது ஆச்சர்யம் கொள்ள வைத்தார் . தீவிர சிகிச்சைப் பிரிவில் , தன்னோடு செல்பி எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு நோயாளியைப் பற்றி அவர் சொன்னது ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்கு ஒப்பானது .
உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டேன் . மேலும் சில அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டபிறகு .... அவரது பணிகளுக்கு இடையில், அந்தப் புத்தகத்தை எப்படி எழுத வேண்டும் என்கிற இரகசியத்தையும் அவருக்குச் சொல்லி இருக்கிறேன்.
தங்கள் நோயாளிகள் தங்கள் சொல் பேச்சு கேட்க வேண்டுமென்று மருத்துவர்கள் விரும்புவார்கள் ... அது எல்லோருக்கும் தெரியும் . மற்றவர்கள் சொன்னால் மருத்துவர்கள் கேட்பார்களா என்பது இனிமேல் தெரியும் ..
எதுவான போதும்
மருத்துவர் திரு . குழந்தைவேலு ஒரு மகத்தான மனிதர் .
உற்சாகமும் , குதூகலமும் நிறைந்தவர் .
என் மனம் கவர்ந்த மனிதர் .
Subscribe to:
Posts (Atom)







































