Saturday, January 28, 2017

சென்னைத்தமிழன்



பாரதி கிருஷ்ணகுமார் உதிர்த்த ஒவ்வொரு சொல்லும் ஏனோ தெரியவில்லை இந்நேரத்தில் நினைவில் வந்து தாண்டவமாடுகின்றன...
சரியாக நினைவிருக்குமானால்...
அது 1995 அல்லது 1996 -ன்
திருப்பூரின் தமுஎச கலையிரவு அது..
"வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா" என்ற தலைப்பில் உரைவீச்சு..
பெருந்திரளென கூடியிருந்த கூட்டம், சுற்றியிருந்த கடைத்தெரு வணிகர்,
ஆட்டோ ஓட்டுநர், தள்ளுவண்டி கடைக்காரர் என தான் எங்கிருக்கிறோம் என மெய்மறந்து செவி மடுக்கின்றனர்.
ரௌத்திர பேச்சின் முடிவில் சொன்னார்
"துரோகங்களின்
சாட்டையில்
சுற்றுகிறது
வாழ்க்கை
பம்பரம்" என....
கேட்ட போதிலிருந்து இன்னும் கொதித்துக்கொண்டே இருக்கிறது குருதி அழுத்தம்..
வார்த்தைகளுக்கும் வலிமையிருப்பதை அந்த இரவில்தான் உணர்ந்தேன்
 #சென்னைத்தமிழன்

No comments:

Post a Comment