Friday, May 4, 2018

நாமக்கல் .. ட்ரினிட்டி பள்ளி விழாவில் ..



 ட்ரினிட்டி பள்ளி ஆண்டு விழாவில் ..
என் மனம் கவர்ந்த மருத்துவர் திரு . குழந்தைவேலு அவர்களுடன் ...

மருத்துவர் ஒரு மகத்தான மனிதர் .
உற்சாகமும் , குதூகலமும் நிறைந்தவர் .

எப்போதும் இழையோடும் நகைச்சுவை அவரது உரையாடலின் சிறப்பு .
ஆஞ்சநேயரின் பக்தர் .
ஆஞ்சநேயர் கோவிலில் பணியாற்றிய   குண்டுமணி  என்கிற பணியாளுக்கும் , ஆஞ்சநேயருக்கும் நடந்த உரையாடலை , இருவரும் சேர்ந்து விளையாடிய பகடை விளையாட்டை அவர் சொல்லியவிதம் அழகானது .

சில புராண , இதிகாச , பக்திக் கதைகளில் இருந்து பெறப்படும் நீதியும் அர்த்தமும் வியக்கவும் மலைக்கவும் வைப்பவை .

தனது மருத்துவ அனுபவங்களை அவர் சொன்னபோது ஆச்சர்யம் கொள்ள வைத்தார் . தீவிர சிகிச்சைப் பிரிவில் , தன்னோடு செல்பி எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு நோயாளியைப் பற்றி அவர் சொன்னது ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்கு ஒப்பானது .

உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டேன் . மேலும் சில அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டபிறகு .... அவரது பணிகளுக்கு இடையில், அந்தப் புத்தகத்தை எப்படி எழுத வேண்டும் என்கிற இரகசியத்தையும் அவருக்குச் சொல்லி இருக்கிறேன்.


தங்கள் நோயாளிகள் தங்கள் சொல் பேச்சு கேட்க வேண்டுமென்று மருத்துவர்கள் விரும்புவார்கள் ... அது எல்லோருக்கும் தெரியும் . மற்றவர்கள் சொன்னால் மருத்துவர்கள் கேட்பார்களா என்பது இனிமேல் தெரியும் ..

எதுவான போதும்
மருத்துவர் திரு . குழந்தைவேலு  ஒரு மகத்தான மனிதர் .
உற்சாகமும் , குதூகலமும் நிறைந்தவர் .
என் மனம் கவர்ந்த மனிதர் .